எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்த காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டம் இன்று
காலை 11:00 மணி அளவில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவராக ஐக்கிய
பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் முன் மொழியப்பட, அதனை காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் வழிமொழிந்தார்.
நிகழ்ச்சியை ஹாஜி வாவு நாசர் தொகுத்து வழங்கினார்.
துவக்கமாக ஹபீப் ரஹ்மான் ஆலிமின் கிராஅத் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து ஒற்றுமையின் அவசியம் பற்றி பாதுல் அஸ்ஹாப் ஆலிம் உரை நிகழ்த்தினார்.
பின்னர் - அஹ்மத் அப்துல் காதர் ஆலிம், தேர்வுசெய்யப்படுபவர்கள் செய்யவேண்டிய, செய்யக்கூடாத பணிகள் பற்றியும், அதன் மூலம்
இறைவனிடம் கிடைக்கும் கூலி குறித்தும் உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து ஐக்கிய பேரவை தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் - தலைமை உரையாற்றினார். தொடர்ந்து, காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் - தேர்தல் குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் விளக்கமாக பேசினார். தீர்மானங்கள் குறித்த செய்தி விரிவாக வெளியிடப்படும்.
கூட்டத்தில் கலந்துக்கொண்டோர்களின் புகைப்பட தொகுப்பு ...
ஹாஜி செய்யத் முஹம்மது அலி நன்றியுரை வழங்க,
அபு மன்சூர் ஆலிமின் துவா உடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
M.W. ஹாமித் ரிஃபாய்
|