விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.
இவ்வமைப்பின் துவக்கத்தை அறிமுகப்படுத்தி ஒரு பிரசுரமும், நகர்மன்றத் தேர்தல் குறித்த முக்கிய தகவல்களைக் கொண்ட நாற்பக்க பிரசுரமும் அண்மையில் நகர பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயல்பட்டினத்திலிருந்து செயல்படுவதற்காக ‘மெகா‘விற்கு உள்ளூரில் செயற்குழு நியமிக்கப்பட்டு, 1-D, ஆயிஷா காம்ப்ளக்ஸ் (முதல் மாடி), பிரதான வீதி, காயல்பட்டினம் என்ற முகவரியில் களப்பணியாற்றிட அலுவலகமும் துவக்கப்பட்டுள்ளது.
‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் இம்மாதம் 05ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
MEGA வின் துவக்க செயற்குழுக் கூட்டம் 05.09.2011 அன்று மாலையில், அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் தலைமை தாங்கினார்.
உறுப்பினர்கள் எஸ்.அப்துல் வாஹித், சட்னி எஸ்.செய்யத் மீரான், என்.டி.இஸ்ஹாக் லெப்பை,
ஹாமித் ரிஃபாய், கே.அப்துல் ரஹ்மான், டூட்டி செய்யித் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வரும் நகரமன்ற தேர்தலை முன்னிட்டு ‘மெகா‘வின் செயல்திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |