காயல்பட்டினம் கிழக்குப் பகுதியிலமைந்துள்ள மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளியில் ஆண்டுதோறும் ரமழானையடுத்த ஷவ்வால் மாத்த்தின் முதல் 6 தினங்களில் உபரியான நோன்பு நோற்போருக்காக, நோன்பு துறப்பு ஏற்பாடுகள் வெளிப்பள்ளி வளாகத்தில் எளிமையாக செய்யப்பட்டு வருகிறது.
பள்ளி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட கஞ்சி கமிட்டியின் பணிகள் ரமழான் இறுதியுடன் நிறைவுறுவது வழமை என்ற நிலையிலும், நன்மையை நாடி அந்த மஹல்லாவைச் சார்ந்த ஒருவர் தனதில்லத்தில் தினசரி நோன்பு துறப்புக்கான பதார்த்தங்களை ஆயத்தம் செய்து பள்ளிக்குத் தருவித்து, அங்குள்ள நோன்பாளிகளுடன் இணைந்தமர்ந்து நோன்பு துறப்பது வழமை.
இந்த நிகழ்ச்சியில் அந்த மஹல்லாவைச் சார்ந்த சுமார் 20 பேர் வழமையாக நோன்பு துறக்கின்றனர். அனைவருக்கும் கறிகஞ்சி, வடை, பழ வகைகள், தேனீர் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
தகவல்:
M.W.ஹாமித் ரிஃபாய் |