Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:43:08 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7190
#KOTW7190
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 8, 2011
ஐக்கிய பேரவை கூட்டம் நிறைவுற்றது: கூட்ட சாராம்சம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4988 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (37) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 11:00 மணி அளவில் - ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் - துவங்கிய இக்கூட்டத்திற்கு பேரவை தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டம் குறித்த விரிவான செய்தி விரைவில் வெளியிடப்படும்.

பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இக்கூட்டத்தில் - நகர்மன்ற தலைவர் தேர்வு குறித்து கீழ்க்காணும் பொருளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

நகர்மன்ற தலைவராக நிற்க விரும்புபவர் ஐக்கிய பேரவையிடம் தங்கள் பெயரை சமர்ப்பிக்க வேண்டும். தகுந்தவர் என்ற அடிப்படையில் பிறரும் - நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு - தாங்கள் விரும்பியவரை சிபாரிசு செய்யலாம்

தேர்தல் குறித்து - தேர்தல் குழு ஒன்று ஐக்கிய பேரவையால் - நியமிக்கப்படும்.

நகர்மன்ற தலைவர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர் போட்டியிட்டால், அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய கீழ்க்காணுமாறு - ஜமாஅத்துக்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், தனி நபர்களுக்கும் - வாக்குரிமை வழங்கப்படும்.

--- நகரில் உள்ள ஜமாஅத்துக்கள் சார்பாக - ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் இரு வாக்குகள் வழங்கப்படும்

--- நகரில் உள்ள சமூக அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாக்கு வழங்கப்படும்

--- ஐக்கிய பேரவை சார்பில் 25 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கும் ஒரு வாக்கு வழங்கப்படும்

இக்கூட்டத்தில் - இரு வாக்குகள் பெறும் ஜமாஅத்துக்கள் விபரமும், ஒரு வாக்கு பெறும் சமூக அமைப்புகள் விபரமும் வெளியிடப்படவில்லை. மேலும் ஐக்கிய பேரவை சார்பாக தேர்வு செய்யப்படும் 25 பிரதிநிதிகள் பெயரும் வெளியிடப்படவில்லை.

தகவல்:
M.W. ஹாமித் ரிஃபாய்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by சாளை நவாஸ் (singapore) [08 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7774

ஹும்ம் அப்புறம். நல்ல யோசிக்கிறீங்க . ஐக்கிய பேரவைக்கு 25 தேவை பாடாது, 250 தரனும். ரொம்ப ஈசியான வேலை, ஐக்கிய பேரவையை அப்படியே நகர்மன்றத்தில் கொண்டு வைக்கலாம். எதுக்கு ஒட்டு பூட்டுன்னு, செலவு மிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by hasan (Khobar) [08 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7775

இதுதான் பெரிய அரசியல் சாணக்கியம். ஆனால் தேவைதான். எப்படி தூங்கி கொண்டு இருக்கும் (ஐக்கிய பேரவைக்கு ) 25 ஒட்டு , துடிப்பாக இருக்கும் சங்கங்களுக்கு 1 ஒட்டு என்ற முடிவுக்கு வந்தார்களோ? அப்போம் நற்பணி மன்றங்களுக்கு ஒன்னும் கிடையாதா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [08 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7778

சகோ ஹசன் நீங்கள் சொல்லுவது சரிதான் ஆனால் துடிப்பாக இருக்கும் சங்கம் ஊரில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று இல்லையே ... தெருக்கு தெரு முக்குக்கு முக்கு இருக்குதல்லவா ....அதான் பங்கீட்டு அப்படி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by SyedAhmed (HK) [08 September 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 7779

நூதனமான தீர்மானம்

தேர்தலில் நேரடியாக போட்டியிட அல்லது அறிவுறுத்த ஆதரவு தெரிவிக்க வழிகாட்ட மட்டுமே சட்டம் வலி வகை செய்கிறது. மெகா வழிகாட்டுகிறோம் என்கிறார்கள் அது சட்டத்திற்கும் அறிவிற்கும் உள்பட்டது.

ஐக்கிய பேரவை PARELLEL ELECTION நடத்த நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது, கெட்டிக்காரன் பொய் எட்டு நாளில் வெளிப்படும் என்ற பழ மொழி தான் நினைவிற்கு வருகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Abu Rushda (Dubai) [08 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7780

25 votes for aiykiya peravai…? For what purpose? To bring candidates through back door? Gentleman in ayikiya peravai, this is the high time to reclaim your lost credibility. Even now, if you want to play gimmick, you will bear the sole responsibility for pushing this community in to an election fray. Watch your tactics


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by SyedAhmed (HK) [08 September 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 7781

போட்டியிட விரும்புவோர் அல்லது யார் வர வேண்டும் என்று விரும்புவோர் ஐக்கிய பேரவையிடம் பெயர் பதிவு செய்ய வேண்டுமா?

இதுக்கு பெயர் தான் Nomination இது Electrol Officer இடம் தான் செய்ய வேண்டும். நமது நகரமன்றத்தின் தேர்தலுக்கான Electrol Officer யார் என்பதை மாவட்ட ஆட்சி தலைவர் முடிவு செய்வார். ஐக்கிய பேரவை இதை செய்தால் இது Election Commission வேலையை ஐக்கிய பேரவை செய்வதாக ஆகும்.

25 பேரை ஐக்கிய பேரவை முடிவு செய்து அவர்களின் ஓட்டால் நகர் மன்ற தலைவர் முடிவு செய்யப்படுவார் என்பது முன்னமே கூடி முடி வெடுத்து பின் கதவு வழியாக வேண்டியவரை தலைவர் ஆக்கும் திட்டம் என்பது பளிச் என்று தெரிகிறது ..... பழைய புத்தகம் ஏற்கனவே நாம் எல்லோரும் படித்ததுதான் புதிதாக ஏதாவது கண்டுபிடியுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by mohideen thamby (qatar) [08 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7782

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்.

அன்பின் சகோதர்களே, ஐக்கிய பேரவையில் ஐக்கியம் பெயர் அளவில் தான் உள்ளது.

ஐக்கிய பேரவையில் உள்ளவர்கள் அதனை அனைத்து ஜமாத்து கூட்டமைப்பு என்று செல்லுபவர்கள் எதற்கு 25 vote, அதற்கு பதில் ஐக்கிய பேரவை நாங்கள் இந்த நபரை தலைவராக நிறுத்த போகிறோம் என்று நேரடியாகவே அறிவித்து விட வேண்டியது தானே.

அதே நேரத்தில் megaவின் சகோதர்கள் ஊரில் நன்மை கருதி அனைத்து ஜமாத்தில் உள்ளவர்கள் தங்கள் பிரதிநிதியை தாங்களே தேர்ந்து எடுக்க முயற்சி செய்து வருவது உண்மையில் பாராட்டதக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [08 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7783

ஜமாஅத், ஜமாஅத் என்று சொல்லுகிறீர்களே அது எங்குங்க இருக்கின்றது. ஒரு சில ஜமாஅத்தை தவிர எந்த ஜமாஅத் உருப்படியாக இருக்கின்றது. யார் ஜமாஅத் சொல்லுவதை செவிமடுக்கிறார்கள்.

ஒரு தெருவிலே 3 ஜமாஅத்துக்கள், ஒரு ஜமாஅத்தில் பல பிரிவுகள். முதலில் அனைவர்களையும் ஒற்றுமையாக இருந்து பலமான ஜமாஅத்தை உருவாக்குங்கள். ஒருவரின் குரலுக்கு அந்த ஜமாஅத்தே கட்டுப்படும் என்ற நிலைமையை கொண்டுவாருங்கள்.

பல ஜமாத்துக்களின் கூட்டு தான் ஐக்கிய பேரவை என்று கூறுகிறீர்கள், அப்புறம் ஜமாத்துக்கு 2 ஓட்டுக்கள், ஐக்கிய பேரவைக்கு 25 ஓட்டுக்கள். ஒன்றும் புரியவில்லையே.

ஒட்டுமொத்த தீர்மானமும் வரட்டும், பார்ப்போம்.

ஒற்றுமை,ஒற்றுமை என்று கூறிவிட்டு பிரிந்து விடாதீர்கள் சகோதரர்களே.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Fuad (Singapore) [08 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7785

ஐக்கிய பேரவை ஒன்று இருப்பது தேர்தல் வரும் நேரத்தில்தான் தெரிகிறது. ஐக்கிய பேரவைக்கு 25 ஓட்டுகள் காணாது. தம்பி நவாஸ் சொல்வது போல் 250 என்ன எல்லா ஜமாத்துக்களின் ஓட்டுகளையும் அவர்களே எடுத்து நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களையும் நியமித்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by OMER ANAS. (QATAR.) [08 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7786

இது தான் வாழைப் பழ ஊசி என்பது. சபாஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. பேரவை கூட்டம் குறித்த தன்னிலை விளக்கம்
posted by காயல் எஸ்.இ.அமானுல்லாஹ். (Kayalpatnam) [08 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7787

காயல்பட்டினம் நகர்மன்ற தோதல் சம்பந்தமாக இன்று (08-09) காலை ஜலாலியாவில் நடைபெற்ற அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்பகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீhமானங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளீர்கள். பின்னர் விரிவான ஏனைய தீர்மானங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளீர்கள நன்றி

தங்களால் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் உறுதி செய்யப்படாத நிலையில் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்து வருந்துகிறேன். கூட்டத்தை ஏற்பாடுசெய்த காயல்பட்டினம் ஐக்கிய பேரவை நிர்வாகத்திடமிருந்து தங்கள் செய்தி முகவர் தகவல்களை பெற்றிருக்க வேண்டும். அவசரத்தில் அவர் தந்த தகவல் தவறான எண்ணத்திற்கும், விமர்சனத்திற்கும் ஆளாகிஇருப்பது வருந்தத்தக்கது.

தலைவரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் இடம்பெறும் ஜமாஅத்துகளுக்கு தலா இரண்டு வாக்குகளும், பொதுநல அமைப்புகளுக்கு தலா ஒரு வாக்கும், ஐக்கிய பேரவை சார்பில் 25 வாக்குகளும் நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இதில் வாக்கு என்ற வாசகம் தீர்மானத்தில் எங்கு வந்தது?

நகராட்சி தலைவரின் தேர்வு சுமூகமாக நடைபெற அமைக்கப்படும் தேர்வு குழுவில் இடம்பெறுவோர் ஒன்றுகூடி சுமூகமுடிவு காண்பார்கள். இதுதான் தீர்மானத்தின் நோக்கமாகும். கூட்டத்தில் இதற்கான விளக்கமும் சொல்லப்பட்டுவிட்டது.

ஊர்நலனில் அக்கறை உள்ள பெரியவர்கள், அனுபவசாலிகள், பொதுவாழ்க்கையோடு தொடர்புடையோர் இவர்களின் ஆலோசனைகளையும் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நிறைவேற்றப்பட்டதுதான் - நகரின் பல்வேறு பகுதிகளை சார்ந்த 25 பேர் நியமனம் பற்றிய தீர்மானமாகும். இவர்கள் அனைவரும் ஐக்கிய பேரவையை சார்ந்தவர்கள் அல்லர். ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நகர பிரமுகர்கள். இந்த விளக்கமும் கூட்டத்தில் சொல்லப்பட்டுவிட்டது.

மேலும் தாங்கள் குறிப்பிட்டு இருப்பதைபோல் 25 நபர்களின் பெயர்களை தற்போது எப்படி வெளியிட முடியும்? ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பட்டியல் வந்தபிறகுதான் இவர்களை தெரிவுசெய்ய முடியும். இல்லையெனில் ஒரே நபரே இரண்டு பட்டியலுக்குள் வர வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

ஜமாஅத்கள் பற்றிய விபரம் வெளியிடப்பட வில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு பெரிய குறையல்ல நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஸ்டேஷன் பள்ளி, திருச்செந்தூர் பள்ளி, காட்டுமொஹ_தும் பள்ளி மற்றும் கே.எம்.டி.வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளி ஆகியவைகளை தவிர்த்தால் மொத்தம் 26 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை தலைமையாக கொண்டவையே நமதூர் ஜமாஅத்துக்கள்.

மேலும் ஐக்கிய பேரவையின் அனைத்து நடவடிக்கைகளிலும் எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவைகளில் விமர்சனங்கள் இருக்கலாம. ஆனால் அவைகளை எல்லாம் மறந்துவிட்டு இத்தேர்தல் சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதின் மூலம் நமது ஒற்றுமை பலப்படும். ஊர்நலன் பாதுகாக்கப்படும். நம் சமூகம் கடந்த தேர்தலில் இழந்த வார்டுகளை திரும்பபெற முடியும் என்றெல்லாம் கூட்டத்தில் விளக்கி சொல்லப்பட்டது.

ஆக உண்மை இப்படி இருக்க அவசரத்தில் அல்லது ஆர்வத்தில் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்தியால் நமது ஒற்றமைக்கு சேதாரம் ஏற்பட்டுவிட கூடாது என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நோக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை. ஊர் நலனை முன்னிறுத்தி தாங்கள் ஆற்றும் சேவைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இக்காலத்தில் இணையதளம் என்பது சக்தி வாய்ந்த தகவல் ஊடகம். பொறுப்புனர்வு உள்ள தங்களைப் போன்ற கற்றறிந்த இளைஞர்கள் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை உளமாற ஏற்கிறேன்.

எனவே தங்கள் இணையதளத்தில் வந்துள்ள செய்தியை படித்து தவறான முடிவுக்கு வந்திருப்பவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவும், இன்னும் பலர் தவறான முடிவக்கு வராமல் இருக்கவும் தயவுகூர்ந்து எனது இந்த விளக்கத்தை ஊர் ஒற்றுமையை ஐக்கியத்தை மனதில் கொண்டு சுருக்காமல் தணிக்கை செய்யாமல் வெளியிடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாம்வல்ல இறைவன் உங்களின் நன்நோக்கங்களுக்கும் முயற்சிகளுக்கும் வெற்றியை தந்தருள்வானாக ஆமீன்.

இவண்,
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by A.W.S. (kayalpatnam) [08 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7788

ஐக்கிய பேரவை நடத்திய / அரங்கேற்றிய கூட்டத்தில் / நாடகத்தில் அழைக்கப்பட்ட ஜமாஅதார்களில் நானும் ஒருவன். கிட்டத்தட்ட 200 பேர்களுக்கும் அதிகமாக கலந்து கொண்டோரில் சில பரிந்துரைகளுக்கு (அவர்கள் பாணியில் தீர்மானங்களுக்கு ) எதிராக குரல் கொடுத்த (ஏற்றுகொள்ளாத) நபர்.

I do not mind to be called rebel .

உங்களுக்கு மட்டுமல்ல என்னை அனுப்பிய எங்க ஜமாஅதார்களுக்கும் விளக்கம் கொடுக்கவேண்டியதுள்ளதால், இன்ஷா-அல்லாஹ், விரைவில் விளக்கங்களுடன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. காயல்பட்டணம்.காம் விளக்கம்
posted by Administrator (Chennai) [08 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7790

ஹாஜி காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்று காலை ஐக்கிய பேரவை ஏற்பாட்டில் நடந்த கூட்டம் குறித்த செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இது குறித்த தங்கள் தன்னிலை விளக்கத்தில் எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு விளக்கம்:

ஐக்கிய பேரவை கூட்டம் குறித்த செய்தி அவசர கோலத்தில் வெளியிடப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்டவரிடம் ஊர்ஜிதம் செய்யப்பட்டே அச்செய்தி வெளியிடப்பட்டது.

வாக்கு என்ற வாசகம் தீர்மானத்தில் இல்லை என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள். அச்செய்தியில் தீர்மான வாசகங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கீழ்க்காணும் பொருளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய பேரவையால் அமைக்கப்படும் தேர்தல் குழுவுக்கு - ஒரு ஜமாஅத்தில் இருந்து இரு பிரதிநிதிகளும், ஒரு சமூக அமைப்பில் இருந்து ஒரு பிரதிநிதியும் தேர்வுசெய்யப்படுவர் என்ற முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இரு பிரதிநிதி என்ற சொல்லுக்கு, இரு வாக்கு என்ற பொருள் பொருந்தாதா? நகர்மன்ற தேர்தலில் நிற்க விரும்புவோரின் மனுக்களை பரிசீலிக்கும் ஐக்கிய பேரவையின் தேர்தல் குழு, ஒருமித்த கருத்து இல்லாத பட்சத்தில், தனது முடிவை எவ்வாறு எடுக்கும்? அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெருவாரியானவர்களின் ஆதரவு அடிப்படையில்தானே? அப்படியெனில் பிரதிநிதிக்கும், வாக்குக்கும் வித்தியாசம் இல்லைதானே?

மேலும் 25 பேர் நியமனம் குறித்த வாசகத்தில் - அவர்கள் ஐக்கிய பேரவையை சார்ந்த 25 பேர் என்று குறிப்பிடவில்லை. ஐக்கிய பேரவை சார்பில் 25 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் - பிரதிநிதித்துவம் பெறும் ஜமாஅத்துக்கள், சமூக அமைப்புகள் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்று கூட்ட நடப்பே செய்தியில் தெரிவிக்கப்பட்டது. மேலும் - சமூக அமைப்பு என்று எந்த தகுதியில் தீர்மானிக்கப்படும் என்ற அளவுகோல் (துவக்கப்பட்ட ஆண்டு, செயல்புரியும் பகுதி, சேவை ஆற்றும் விஷயங்கள், அவைகளின் எண்ணிக்கை) அக்கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை என்ற நிகழ்வே அச்செய்தியில் சுட்டி காண்பிக்கப்பட்டது.

மக்கள் விளங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அச்செய்தி வெளியிடப்பட்டதேயன்றி வேறு நோக்கத்தில் அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by SyedAhmed (HK) [08 September 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7792

உள்ளதை உள்ளபடி சென்றவர்களில் ஒன்றிற்கு மேலானவர்களிடம் ஊர்ஜிதப்படுத்தி, ஊடக தர்மத்தை பேணி விருப்பு வெறுப்பு இன்றி செய்தியை வெளியிட்ட காயல்பட்டினம்.காம் இணையதளத்திற்கு பாராட்டுக்கள்.

உங்களின் நடுநிலையான செய்தி எங்களை போன்று கடல் கடந்து வாழும் மக்கள் விழிப்புணர்வு பெறவும் சரியான முடிவுகளை எடுக்கவும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by sulaiman (manama) [08 September 2011]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 7793

MEGA வின் நிலைப்பாடு என்ன தயவு செய்து அறியத்தாருங்கள்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. நீதிகள் தோற்பதில்லை!
posted by m.s.m.shaik abdul kader (dubai) [08 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7794

ஐக்கியப்பேரவை தவறுக்குமேல் தவறு செய்துவிட்டு,முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க நினைப்பது ஒன்றும் புதிதல்ல.சுனாமி தொகுப்பு வீடுகள் பிரச்சனையில்,,நகர மக்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டு,அப்பாவி வியாபாரிகளை கடை அடைக்கச் செய்து,தேர்தலைப் புறக்கணிப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் இவர்களே குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக மாறி,அந்தர் பல்டி அடித்தது மாத்திரமல்லாமல்,உள்ளதை உரக்கச் சொன்ன ஊடகங்களை மன்னிப்பும் கேட்கச்சொன்ன நல்லவர்களே! பெரியவர்களே!!

பிரதிநிதி என்பவரது ஆதரவு மெஜாரிட்டி அடிப்படை என்று வரும்போது வாக்கு என்ற அர்த்தம் வராதா? உங்களை நாங்கள் மதிக்கிறோம். இன்னமும் நம்புகிறோம்! ஆனால் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்யும் காலம் வந்து விட்டது. நீதிகள் அழிவதில்லை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. காணவில்லை !!
posted by M. Sajith (DUBAI) [08 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7798

படங்கள் பார்த்தேன்..

'அவை' என்னவோ பேரவையாகத்தான் தெரிகிறது ..

செய்தியைப் படித்தேன்..

ஐக்கியத்தைக் காணவில்லை.!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by AbdulKader (Abu Dhabi) [08 September 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7799

Dear Kayal Brothers, Assalamu Alaikum Varahmathullahi Vabarakaththhu.

We all need little patience in replying and responding to any article published in this web page. Through this media we all get important news and share our opinions. Kindly do not post offensive comments on this.

Should any one require more clarification, we can seek and clarify. The whole objective of Aikiya Payravai's gathering was to bring all of us under one command! Through the comments so far posted, it seems this is going to be an impossible task for Aikiya Payravai!

Please read the comment of Haji Amanullah and get the aim of the gathering clarified. Moreover, Akiaya Payravai must have had invited kayal..... .com(s) and press released the summary of the gatherings in a timely manner! Hope they will PRESS RELEASE summaries of such forthcoming on time.

No one is accepting corruption and every one should unite and fight the corruption. But, please with one VOICE.

Wassalam
AbdulKader

Admin! This time also anticipate your assistance in translating my post in tamil.

Moderator: Dear Br. Abdul Kader, pls use the Tamil typing facility. You can type your own Tamil word directly in English... It'll be transliterated automatically in Tamil.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Municipality elections is on hot bed ??
posted by Salai.Mohamed Mohideen (USA) [08 September 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 7801

Just curious about the the necessity of publishing the 'Aikkiya pervai (AP)' meeting resolutions/discussion points beforehand (or urgently ) even before formally it come through AP. Is it because, Aikkiya peravai resolutions/discussion falls under hot news/topic or most awaited by all readers since this news was shared by one of the participant... not even through KOTW reporter.

In general, KOTW publish the news once they get it formally from the particular organization (may be through spokeperson or office bearers) or by KOTW news reporter after attending the meeting/event. In the past,I guess AP has requsted NOT to pubish their news before their approval(??).

[Administrator: Since Bro.SK Salih is out of the country, Bro.Hamid Rifai, our source for this news, has been assisting us with the news for more than a month now. News was cross-verified with multiple sources before being published. Just FYI]

Ok... let me come to the topic discussed. Group of people already started MEGA for this purpose & trying to bring everyone under one umbrella to send right people to the office of our municipality. Not sure why Aikkiya(matra??) peravai also trying to re-invent the wheel or pitching-in. Its not that hard or puzzle to understand that, 25 members representation from AP is nothing but 25 votes. Its of smart game (?) to send someone from their camp to Municipality. As usual AP been critizied & they are not ready to learn from their past???.

From the past, I hope they should be knowing that everyone got pissed off with them and even not ready to listen or mind about their resolutions. They can just work on kicking off these common critiques (not serving upto the mark, biased or dominated by certain group, not equally represented by various groups/jamath's etc). Or the best thing is... either to re- organize it by bringing equal representation from all jamath's/organization... strong leadership team to lead and gain everyone's hope or just dissolve it which will atleast pay a way for another united, strong and engergitic forum to be birthed.

Last & least, municipal election going to be more fun this time when compared with past since too many forums, media hype(?), so many voices and discussions on that. I hope... all this will end up for good and help us to bring right people on board.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Ahamed (Alkhobar) [08 September 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7802



Y ur peoples r hide the main comments. please see the below comments and mention the comments in tomorrow news .I am expecting.if ur hiding my comments .we will send the email to all the kayalites.Totally Kayalpatnam website is sleeping only one side.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு அனுப்பப்படும் தலைவர் பதவிக்குரிய விருப்ப மனு மற்றும் சிபாரிசு மனு ஆகியவைகளை பரிசீலித்து இறுதி முடிவெடுக்கும் தேர்வு குழுவை அமைப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு ஜமாஅத்திலிருந்தும் தலைவர் மற்றும் உதவி தலைவர் ஆகிய இருவர் அல்லது ஜமாஅத்தின் அனுமதிபெற்ற யாரேனும் இருவர், மற்றும் ஊரின் பொதுநல அமைப்புகளின் ஒவ்வொன்றில் இருந்தும் ஒருவர், மேலும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் தேர்வு செய்யப்படும் நகர பிரமுகர் 25 நபர்கள் ஆகியோர்கள் கொண்ட தேர்வு குழுவை அமைப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இத்தேர்வுக் குழுவில் இடம் பெறுவோர் நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புக்கு விருப்ப மனு கொடுப்பவராக இருக்கக்கூடாது என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. (This is regarding Mr.kayal S..E.Amanullah comments .This is very clear) from the kayal today.

--- ஐக்கிய பேரவை சார்பில் 25 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கும் ஒரு வாக்கு வழங்கப்படும்

இக்கூட்டத்தில் - இரு வாக்குகள் பெறும் ஜமாஅத்துக்கள் விபரமும், ஒரு வாக்கு பெறும் சமூக அமைப்புகள் விபரமும் வெளியிடப்படவில்லை. மேலும் ஐக்கிய பேரவை சார்பாக தேர்வு செய்யப்படும் 25 பிரதிநிதிகள் பெயரும் வெளியிடப்படவில்லை.(This is from kayalpatnam.com own comments).

We Accept only IIM Comments .

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. பேரவை நிர்வாக குழுவில் உள்ள தலைவர் ,செயலாளர்கள் உட்பட நிர்வாகதினர்கள் இந்த குழுவில் இருப்பதே சாலச்சிறந்ததும்.மிகவும் பொருத்தமும் ஆகும்.
posted by சட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம் ) [08 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7804

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது முஹிய்தீன் பள்ளி ஜமாத்துக்கு உட்பட்ட மஜ்லிசுள் கறம் சங்க அமைப்பின் சார்பாக ஐய்க்கிய பேரவையின் கூட்டத்தில் என் வாழ்நாளில் முதன் முதலாக கலந்து கொண்டேன்.
பல தடவை நடந்துள்ள கூட்டத்தின் செய்திகளை இந்த வலை தளத்தின் ஊடாக கண்டும் மற்றும் கலந்து கொண்டவர்களின் மூலமாகவும் அறிந்துள்ளேன்.

தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சிகளின் எண்ணிலடங்கா மாபெரும் மாநாடுகள், பொது கூட்டங்கள் என பலவற்றில் கலந்து கொண்ட அனுபவம் எனக்கு இருந்தாலும் அந்த நிகழ்வுகளில் தீர்மானங்கள் முதலிலேய அவர்களின் உயர் மட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி வடிவமைத்துள்ளதை முன்மொழிய, அந்த அமைப்பின் அபிமானிகள் வழிமொழிவார்கள் பின்னர் ஏற்க்கப்படும். (இதில் எத்தனை நிறைவேறுமோ அவர்களுக்குதான் தெரியும்)
அதுபோன்று இங்கும் காண எனக்கு ஆச்சரியம்.

ஒரே ஒரு அமைப்பு மட்டும் கலந்து கொள்ளும் அல்லது நடத்தும் நிகழ்வாக இருந்தால் தீர்மானங்கள் உடனுக்குடன் நிறைவேற்றுவதில் தவறில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்ளும், நடத்தும் நிகழ்வுகளில் பல தரப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
அவர்கள் சேர்ந்துதான் அந்த நிகழ்வின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ தீர்மான முன்வடிவை கொண்டு வருவார்கள்.
இதனை சிலர் ஏற்கலாம், பலர் எதிர்க்கலாம்.
இதுதான் ஜனநாயகம்.

சட்டமன்ற நிகழ்வுகள், மக்களவை நிகழ்வுகளை தொலைகாட்சி பெட்டிகளில் நேரலைகளாக அனைத்து பொதுமக்களும் காணுகின்றார்கள். அங்கு கொண்டு வரப்படும் தீர்மானங்கள், திட்டங்கள் சபாநாயகர்களால் ஜனநாயக முறையில் எப்படி நிறைவேற்றபடுகிறதென்பதை பார்க்கிறார்கள். இதன் மூலம் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள்.

இன்று மட்டும் அல்ல என்றும் நடக்கும், நடந்த இந்த பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் பிரதிநிதிகள்தான். ஏற்கவோ, எதிர்க்கவோ அவர்களில் எவருக்கும் உரிமை இல்லை. அவர்களும் அறிவார்கள் அதை விட நீங்களும் மிக நன்கு அறிவீர்கள்.

இந்த தீர்மானங்கள், திட்டங்களை அவர்களது அமைப்பின் ஒட்டுமொத்த அங்கத்தினரிடம் கொண்டு சேர்த்து தேவைபடின் விவாதோமோ, ஓட்டு எடுப்போ செய்து தங்களுக்கு அறிய தந்து, அதரவு தருவதுதான் ஜனநாயகம்.
இதுவே எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும், அவனது நேசரும் நம் இரு உலக ஒரே ஒரு தலைவருமான நம் உயிரினும் மேலான உத்தம நபிகளாருக்கும் உகந்த நற்செயலாகும், உரைத்த நல்வழியாகும்.

பேரவை என்பது காயலின் இருபத்தி ஆறு பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டு குழு.
இதன் மூலம் வந்தவர்கள்தான் நிர்வாகிகளாக, செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுகின்றிர்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.

ஜமாத்துகளுக்கு இருவர், பொது அமைப்பிற்கு ஓன்று (இதற்க்கு என்ன அளவுகோலோ அல்லாஹ்விற்கு வெளிச்சம்) என்பது இது சரியான தீர்வு. அனைவராலும் ஏற்றுகொள்ள கூடியதே.

பேரவை சார்பாக 25 நபர்கள் ஏன்? எதற்காக? என்பதுதான் எனக்கு உட்பட எல்லோருக்கும் புரியதா புதிராக உள்ளது...

நாங்கள் சார்ந்த பள்ளியில் இருந்தும், பொது அமைப்பில் இருந்தும் கலந்து கொள்ள கூடியவர்கள் ஆகட்டும், பேரவை பதவிகளில் உள்ள நீங்களாக இருந்தாலும் எந்த ஒரு பள்ளி, அமைப்பில் வழியாக வந்தவர்கள்தான். யாரும் இதற்க்கு அப்பாற்பட்டு வந்தவர்கள் இல்லை.

25 நபரை நீங்கள் தேர்வு செய்தாலும் அதில் ஒரு நபர் கூட விமர்சனத்திற்கோ, விவாதத்திற்கோ ஆளானால் அது நாங்கள் பிறந்த இந்த மண்ணிற்கு இழுக்காகும். இதன் மானமும், மரியாதையும் ஒவ்வொரு காயலனின் சொத்தாகும். இதனை இழக்க நாங்கள் யாரும் தயார் இல்லை.

வெளியில் இருந்து நபர்களை தேடி தெரிவு செய்வதை விட இதற்கு பதிலாக பேரவை நிர்வாக குழுவில் உள்ள தலைவர், செயலாளர்கள் உட்பட நிர்வாகதினர்கள் இந்த குழுவில் இருப்பதே சாலச்சிறந்ததும், மிகவும் பொருத்தமும் ஆகும்.
இதுவே ஒட்டுமொத்த காயல்ர்களின் எண்ணமாகும்.
நாங்கள் உங்களுக்கு செய்யும் கண்ணியமாகும்.
மேலும் உங்களை பதவியில் உட்கார வைத்து அழகு பார்க்கும் ஒட்டுமொத்த காயலருக்கும் நீங்கள் செய்யும் மரியாதையும் ஆகும்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.

நகரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து கட்சி சார்பாக யாரும் போட்டி இட வேண்டாம் என் வேண்டுகோள் விடுத்ததை அன்போடு ஏற்று கொண்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும், இதனை வழி எடுத்து செய்த பேரவை அங்கத்தினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இதன் மூலம் நீங்கள் இரு தரப்பினருமே காயல் மக்களின் மனங்களில் வெற்றியை பெற்றுவிட்டிர்கள்.

நல்லதோர் நகராட்சி அமைய எண்ணும் உங்களை போல் ஒருவன் அன்புடன்.சட்னி.செய்யது மீரான்.

காயல்பட்டினம்.
அலைபேசி 8508570955


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Riluvan (Michigan) [08 September 2011]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 7807

Who are those qualified to elect the 25 members? Are they elected members of Aykkiya Jamath? If not, this is clearly a ploy to hijack the process, period. As long as Aykkiya Jamath members truly represent the people (means elected by the people of Kayalpatnam), it is OK, otherwise this is undemocratic and condemnable.

Overdoing anything will have consequences. There is a moderate middle-path and I suppose people in kayalpatnam aren't incapable of reading between the lines.

IMO, the groups are overreaching on their responsibilities. A socially responsible group will do the following:

a) Educate people on democratic process
b) Educate people on what is at stake
c) Educate people on consequences of making mistake
d) Educate people on why it should be done right
e) Educate people about the candidates

Organize... Educate... Guide..., then step back and let people make their conscious choice. Attempting to overreach will make these organizations expendable. Discontent will become unavoidable.

The choice is upon the grownup individuals.

Attempting to project single candidate is a "guilty by choice" intimidation. Most will be forced to vote for the choice without mentally processing and digesting why they vote somebody. All they will say “Aykkiya Jamath” asking me to do so.

There is a government run electoral process to elect the town president. The idea proposed by Aykkiya Jamath appears to nullify this democratic process and eliminate the public at large from their due rights and a handful few attempting to make the choice for rest of the town.

There are people in Aykkiya Jamath doing many good things to Kayalpatnam. That doesn't mean that they own rights over the others. Any good deeds should be done in the right spirit without expectations. Kayalpatnam is a town of people, not cattle. Help people to mature. How long kayalpatnam can afford to have a handful few making decisions for the rest?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by OMER ANAS. (doha. qatar.) [09 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7812

பார்த்தீர்களா மக்களே! நம் ஒற்றுமை எப்படி போகிரதென்று. பொது நலவாதிகல் ஒரு பக்கம் சுயநலவாதிகள் ஒரு பக்கம் என்று பிரிந்து கிடப்பதை. இணையதில் கூட இரண்டு கருத்துக்கள்.நாம் நினைத்த நகர் மன்றம் எப்படி அமையும்? அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. படித்தவன் பாட்டை கெடுத்தான்.... எழுதினவன் ஏட்டை கெடுத்தான்......
posted by zubair (riyadh) [09 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7814

அஸ்ஸலாமு அலைக்கும். எனது அன்பு உடன் பிறப்புக்களே... நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களே.... கமாண்டு அடிக்கும் சகோதரர்களே... தனி அறையில், தனிமையில், தனிக்காட்டு ராஜாவாக செயல்படும் (கமாண்டு அடிக்கும்) நமக்கு எதையும் எழுதிவிடலாம் என்றோ, எல்லாவரும் நம்மை உற்று நோக்கானும் என்று. சைத்தானின் உச்சகட்ட திட்டமான நல்லது சொல்வதுபோல்.... உங்களை தீமையில் நுழைக்கும் பாவத்தை செய்து விடாதீர்கள். ஊர் ஒற்றுமையில் மண்ணை அல்லி போட்டு விடாதீர்கள்.

ஜுபைர்:- காயல் எஸ் அமானுல்லாஹ் காக்காவின் விளக்கத்தில்....

தலைவரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் இடம்பெறும் ஜமாஅத்துகளுக்கு தலா இரண்டு வாக்குகளும், பொதுநல அமைப்புகளுக்கு தலா ஒரு வாக்கும், ஐக்கிய பேரவை சார்பில் 25 வாக்குகளும் நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இதில் வாக்கு என்ற வாசகம் தீர்மானத்தில் எங்கு வந்தது?

நகராட்சி தலைவரின் தேர்வு சுமூகமாக நடைபெற அமைக்கப்படும் தேர்வு குழுவில் இடம்பெறுவோர் ஒன்றுகூடி சுமூகமுடிவு காண்பார்கள். இதுதான் தீர்மானத்தின் நோக்கமாகும். கூட்டத்தில் இதற்கான விளக்கமும் சொல்லப்பட்டுவிட்டது.

ஜுபைர்:- என்று தெரிவித்த பின்னும்....

நமது அட்மின் அவர்கள்:- வாக்கு என்ற வாசகம் தீர்மானத்தில் இல்லை என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள். அச்செய்தியில் தீர்மான வாசகங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கீழ்க்காணும் பொருளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுபைர்:- காயல் எஸ் அமானுல்லா காக்கா சொன்னது ஊர்ஜிதம்.

காயல் அமானுல்லா:- தங்களால் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் உறுதி செய்யப்படாத நிலையில் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்து வருந்துகிறேன். கூட்டத்தை ஏற்பாடுசெய்த காயல்பட்டினம் ஐக்கிய பேரவை நிர்வாகத்திடமிருந்து தங்கள் செய்தி முகவர் தகவல்களை பெற்றிருக்க வேண்டும். அவசரத்தில் அவர் தந்த தகவல் தவறான எண்ணத்திற்கும், விமர்சனத்திற்கும் ஆளாகிஇருப்பது வருந்தத்தக்கது.

ஜுபைர்:- செய்தி தொடர்பாளர்கள் தாங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். இது அப்படி இல்லை. ஊர் ஒற்றுமை விஷயம். நிர்வாகத்திடம் இருந்து முழு செய்தியையும் பெற்று, தங்களின் சந்தேகம் களையும் கலைந்த பின்னரே..... செய்தி விட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

நமது அட்மின் அவர்கள்:- ஐக்கிய பேரவையால் அமைக்கப்படும் தேர்தல் குழுவுக்கு - ஒரு ஜமாஅத்தில் இருந்து இரு பிரதிநிதிகளும், ஒரு சமூக அமைப்பில் இருந்து ஒரு பிரதிநிதியும் தேர்வுசெய்யப்படுவர் என்ற முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இரு பிரதிநிதி என்ற சொல்லுக்கு, இரு வாக்கு என்ற பொருள் பொருந்தாதா? நகர்மன்ற தேர்தலில் நிற்க விரும்புவோரின் மனுக்களை பரிசீலிக்கும் ஐக்கிய பேரவையின் தேர்தல் குழு, ஒருமித்த கருத்து இல்லாத பட்சத்தில், தனது முடிவை எவ்வாறு எடுக்கும்? அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெருவாரியானவர்களின் ஆதரவு அடிப்படையில்தானே? அப்படியெனில் பிரதிநிதிக்கும், வாக்குக்கும் வித்தியாசம் இல்லைதானே?

ஜுபைர்:- அட்மின் அவர்களே... ஒரு ஜமாஅத்தில் இருந்து இரு பிரதிநிதிகளும், ஒரு சமூக அமைப்பில் இருந்து ஒரு பிரதிநிதியும் தேர்வுசெய்யப்படுவர் என்ற முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இரு பிரதிநிதி என்ற சொல்லுக்கு ஏன்...... ஓட்டு என்ற அர்த்தத்தை கொண்டு வருகிறீர்கள்..? உங்களின் ஜமாத் எந்த இரண்டு பேரை நியமிக்கிறதோ.... அவர்களை ஐக்கிய பேரவை ஏற்கும்.

மேலும்.... ஐக்கிய கட்டமைப்புக்குள் நடக்கும் எந்தகாரிய மானாலும் (ஏகோபித்த முடிவா இருந்தாலும், ஓட்டாக இருந்தாலும் சரி....) நாம் அபிப்ராயம் சொல்வது தவறு..... ஏனெனில் நாம் நம் ஜமாஅத் மூலம் இருவரை (நம் தரப்பில் இருந்து) அனுப்பி விட்டோம் இனி அவரின் கடமை.

நம் அட்மின் அவர்கள்:- 25 பேர் நியமனம் குறித்த வாசகத்தில் - அவர்கள் ஐக்கிய பேரவையை சார்ந்த 25 பேர் என்று குறிப்பிடவில்லை. ஐக்கிய பேரவை சார்பில் 25 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுபைர்:- அமானுல்லா காக்கா சொன்னது சரிதானே..... இதை ஏன்..... குறையா சுற்றிக்கட்டி எழுதணும்?

காயல் அமானுல்லா:- ஊர்நலனில் அக்கறை உள்ள பெரியவர்கள், அனுபவசாலிகள், பொதுவாழ்க்கையோடு தொடர்புடையோர் இவர்களின் ஆலோசனைகளையும் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நிறைவேற்றப்பட்டதுதான் - நகரின் பல்வேறு பகுதிகளை சார்ந்த 25 பேர் நியமனம் பற்றிய தீர்மானமாகும். இவர்கள் அனைவரும் ஐக்கிய பேரவையை சார்ந்தவர்கள் அல்லர். ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நகர பிரமுகர்கள். இந்த விளக்கமும் கூட்டத்தில் சொல்லப்பட்டுவிட்டது.

ஜுபைர்:- அட்மின் அவர்களே............ நல்லுள்ளம் கொண்ட கமாண்டு அடிக்கும் நண்பர்களே...... ஊர் ஒற்றுமையை நாடி சிறிய தவறுகள் நடப்பின் அவைகளை உரிய நிர்வாகத்திடம் நேரடியாக சுட்டிக்காட்டி திருத்தவும், விளக்கம் பெறவும் நமக்கு கடினம் அல்ல என்று இருக்கும் போது.... இப்படி பொது வலை தளத்தில் நாம் இப்லீசுக்கு உகந்த காரியம்களை செய்வது வருந்ததக்கது.

அட்மின் அவர்களே..... ஊர் நன்மையையும், தவறுதலாக புரிந்தோரின் புரிதலையும் மாற்ற இது உதவும் ஆகையால் கத்திரி போடுவதை கைவிடவும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Shaikna Lebbai (singapore) [09 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7816

காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்களுக்கு. ஐக்கிய பேரவை தீர்மானக்கள் எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது, காரணம் ஐக்கிய பேரவையில் சரியான கட்டமைப்பு இல்லாத காரணமே!!!

ஐக்கிய பேரவை நகராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்திற்கு போவதற்கு முன்....சில கேள்விகள் 1 .ஐக்கிய பேரவை தலைமை எந்த அடிப்படையில் யாரால் தேர்ந்தெடுக்கபட்டது?

2 . சட்டசபை மற்றும் பாராளுமன்றங்களில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தலைமை மாறுகிறது, சட்டமாகவும் கூட இருக்கிறது, ஆனால் ஏழு வருடங்களுக்கு மேல் ஆகியும் தலைமை மாறவே இல்லையே ஏன்?

3 . ஒரு போராட்டத்திற்கோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ ஒரு அமைப்பு சட்டப்படி அரசால் பதிவு பெற்றிருக்க வேண்டும். ஐக்கிய பேரவை ஏன் இன்னும் பெற வில்லை? எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள்? உங்களை நம்பி வந்தால் எங்கள் கதி என்ன?

4 . கடந்த சட்டசபை தேர்தலில் ஏன் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை?

5 . பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்ட பொது ஏன் மெளனமாக இருந்தீர்கள்? ஊரில் புற்றுநோய் போன்ற கொடிய நோய் பரவ காரணமாய் இருக்கின்ற தொழிற்சாலைகளை எதிர்த்து ஏன் அறிக்கை போராட்டம் மேற்கொள்ளவில்லை? விழிப்புணர்வு பல கொடுத்த பின்னும்.

6 . ஐக்கிய பேரவை தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர் யாருடைய மின்னஞ்சல் முகவரியோ அல்லது கைபேசி எண்ணையோ வெளியிட்டு இருகிண்டீர்களா? இருந்தால் நாங்களும் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுவோமே!!!

மேல் கூறிய கேள்விகளுக்கு தெளிவு பெற்றபின் நகராட்சி தேர்தல் சார்பாக பேசலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. 25 Votes or numbers is needless
posted by Ahamed mustafa (Dubai) [09 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7818

Gents,

The need of 25 identified personnels by the Aiykiya peravai is needless, when already each of the Jamaath would send 2 representatives each. When Aiykiya Jamaath itself claims to be the representative of all the Jamaaths put together as one, an increase of 25 more individuals is unwarranted here. This can always lead to diffusions & that is not all needed in the first place. How can the AJ identify 25 individuals, These 25 would again come from any Jamaath and they are not from any where. So the point of AJ remains here invalid. The credibility of AJ is now in question & further aggravation would lead to impacts or a parallell AJ or multiple feuds cropping up in the near future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [09 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7819

அன்பு சகோதரர்களே,

கமெண்ட்ஸ் அடிப்பவர்கள் ஒன்றும் வேலை வெட்டி ஏதும் இல்லாமலும், ஊரின் மேல் அக்கறை இல்லாமலும், வெளிநாட்டில் இருந்துக்கொண்டு ஒரு கையில் பெப்சியும், மறு கையில் சாண்ட்விட்ச் சாப்பிட்டுக்கொண்டும் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பை கொஞ்சம் மாற்றுங்கள்.

டூட்டி இல் இருக்கும் போதும் கூட ஊரின் நலனில் அக்கறை கொண்டும், ஒற்றுமையாக ஊர் இருக்கனும், நல்ல நகர்மன்றம் அமையனும் என்ற அவர்களின் துடிப்பை பாராட்ட வேண்டாம், இகழாமல் இருந்தாலே போதும்.

இந்த ஐக்கிய பேரவை கூட்டம் நடக்கும் முந்திய இரவு, தாங்கள் அனைவர்களும் ஐக்கிய பேரவைக்கு 11 பிரதிநிதிகள் என்று முடிவு செய்துவிட்டு, கூட்டத்தில் 25 பிரதிநிதிகள் என்று அதிகரிக்க காரணம் என்ன?. ஒரே இரவில் எப்படி இந்த மாற்றம் வந்தது என்று புரியவில்லையே.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Fasi Ismail (Jiangmen, China) [09 September 2011]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 7821

வரவேற்கதக்கது இதே போல் MEGA அமைப்பும் ஒரு தலைவரை தேர்தெடுக்குமா? அப்படி தெர்தெடுக்குமனால் மக்கள் தங்களுடைய கருத்து சொல்வதற்கு வசதியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. அரசியல் கட்சி சார்பு இல்லாமை
posted by Abdul Majeed (Mumbai) [09 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 7822

அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட கூடாது என்பதில் அனைவரும் ஒன்று பட்டு இருப்பது மஹிழ்ச்சி. அதே நேரம் அரசியல் கட்சிகளில் பொறுப்பாளர் ஆக இருப்பவர்கள் சுயேட்சசை ஆக போட்டியிட்டால் என்ன நிலை என்பதயும் ஐக்கிய பேரவை & மெகா விளக்க வேண்டும். இத்தகைய அரசியல் சர்புடயவர்களை நியமிக்காமல் இருப்பதே சிறந்தது என் என்றால் கூட்டணி , ஆட்சி , அரசியல் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது இவர்கள் கட்ச் ஆல்களாகவே செயல்படுவார்கள் . இவர்களால் மறைமுகமாக அரசியல் இயக்க பிளவுகளும் , ஒரு தலை சார்பான நடவடிக்கைகளும் , உப தலைவர் , தலைவர் தேர்வில் பிரச்சனைகளும் வரலாம் . மேலும் நியமிக்கப்படும் சுயேச்சை உறுப்பினர்கள் தேர்தலுக்கு பின் எந்த கட்சியிலும் சேர கூடாது என்ற உறுதி மொழியையும் எழுத்து பூர்வமாக பெற்று கொள்ள வேண்டும். முன்னால் தலைவர் ஒரு கட்சியில் இணைந்டடல் ஏற்பட்ட விளைவுகளை நினைவில் கொண்டு இதையும் சிந்திக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by OMERANAS . (QATAR) [09 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7824

தம்பி ஜியாவுதீன் அருமையான வார்த்தை சொன்னாய்.மெத்த மேதாவி தன இடமே இருட்டு என்பதைத்தான் அப்படி சொன்னார் என்று நாம்தான் விளங்கிடாமல் இருந்து விட்டோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by A.W.S. (Kayalpatnam) [09 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7825

ஆலோசனை கூட்டம் என்று கூறினார்கள், ஆனால் ஆலோசனையே நடைபெறவில்லை. முடிவெடுக்கப்பட்டது என்கிறார்கள். எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே சிலர் கூடி எடுத்த முடிவை தீர்மானங்கள் என்று அறிவித்தார்கள்.

பரிந்துரைகளுக்கும், தீர்மானங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாதவர்கள் தீர்மானகளை பற்றி பேசுகிறார்கள்.

(பரிந்துரைகளிலுள்ள நல்லது, கெட்டது நன்கு அலசி, ஆராய்ந்து, ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் தீர்மானங்களாக அறிவிக்கப்படும்)

ஐக்கிய ஜமாஅத் என்று பேர் வைத்துகொண்டு அணைத்து ஜமாஅத்களுக்கு மட்டுமே உள்ள உரிமையில் தனிப்பட்ட 25 நபர்களுக்கும் பங்கு கொடுக்கிறார்கள்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கடந்த காலங்களில் செய்ததை போல் இல்லாமல் பொது மக்களுடைய "Pulse" ஐ அறிந்து தங்களுடைய செயல்பாடுகளை மாற்றிகொள்வது ஐக்கிய பேரவையின் நீண்ட கால ஆயுளுக்கு வழிவகுக்கும்.

25 பேர்கள் என்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கயுள்ளவர்கள், படித்தவர்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பொதுமக்களை செம்மறி ஆட்டுகூட்டம் போல மாற்றும் திட்டம்.

26 ஜமாஅத்களில் உள்ளவர்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் தகுதி படைத்தவர்கள். அவர்களே போதும்.

இத்தனை எதிர்ப்புகளுக்குப் பிறகும் அந்த திட்டத்தை கைவிடாமல் ஐக்கிய பேரவை நடந்துகொல்லுமேயானால், something fishy.

Few are trying to send someone of their choice to Municipality through backdoor. Nothing else.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by SyedAhmed (HK) [09 September 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7832

AWS மாமா உங்களின் கருத்து நூற்றிக்கு நூறு சரியனானது, வேகமாகவும் விவேகமாகவும் உணர்ச்சிக்கு முக்கியதுவ கொடுக்காமல் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பழைய மோசமான அனுபவங்களை மனதில் வைத்து தனிப்பட்ட மனிதர்களின் விருப்பத்திற்கு வளையாமல், உண்மையுடன் பொய்யை கலக்காமல் நடந்ததை நடந்தாக எங்களுக்கு எடுத்து சொல்லும் உங்கள் பனி மிகவும் பாராட்டுக்கு உரியதும் காலத்திற்கு தேவையும் ஆனதாகும்.

அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by mackienoohuthambi (kayalpatnam) [09 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7835

சுபுஹானல்லாஹ்.

ஐக்ய பேரவை தீர்மானங்கள் பற்றி இதுவரை 32 விமர்சனங்கள் வந்திருக்கிறது. இரண்டு மணி நேரங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது எனபது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

பல தரப்பட்ட கொள்கை உடையவர்கள் பல ஜமாத்கள் உள்ள ஊர். யாரைதேர்ந்தேடுப்பது என்பதை தீர்மானிக்க இப்போதே மூன்று அமைப்புக்கள் வரிந்துகட்டிக்கொண்டிருக்கின்றனர்.யார் தேர்ந்து எடுக்கப்பட்டாலும் அவர் ஊருக்கு நல்லது செய்யவில்லை என்று பொதுமக்கள் கருதினால் ஊழல் செய்வதாக தெரிந்தால் அவரை திருப்பி அழைக்கும் உரிமை l .மக்களுக்கு வேண்டும். பஞ்சாயத் தலைவருக்கு நிர்வாக அதிகாரியய்விட முடிவு எடுக்கும் அதிகாரம் வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் ஊர் முன்னேற்றம் அடைய முடியாது என்பதே நிதர்சன உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by Mohmed Younus (Chennai) [10 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7856

தமாசாக சொல்லுகிறேன் என்று நினைத்து விடவேண்டாம். ஐக்கிய பேரவைக்கு இருபத்தைந்து வோட்டுகள் என்றால் ஒரு உறுப்பினர்க்கு ஒரு வோட்டு. இந்த ஆலோசனை எங்கிருந்து வந்தது, யாரால் உருவாகபெற்றது என்பது, இந்த விசயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். அந்த நபரின் பின்னணி என்ன என்பதும் அவரின் நோக்கம் என்ன என்பதும் என் போன்ற நபர்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு வருகிறோம்.

ஐக்கிய பேரவையின் சாராம்சமே அணைத்து ஜமாஅதுகளை உள்ளடக்கிய பேரவைதான்.பின் இருபத்தைந்து வோட்டுகள் யாருக்கு?

இருபத்தைந்து பேர்கள் ஊர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்றால்,மற்ற ஜமாஅதுகளின் பிரதிநிதிகள் வீரபாண்டி பட்டணத்தின் மீது அக்கறை கொண்டவர்களா?

உண்மையை சொல்லுங்கள்,இருபத்தைந்து பேர்கள் யாரின் கண்ணசைவில் தேர்ந்து எடுக்கபடுவர்கள் என்பது நாங்கள் அறிந்த ஒன்று.அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை என்ன என்பதும் நாங்கள் அறிந்த ஒன்று.

பண பலமோ,ஆள் பலமோ இந்த தேர்தலில் எடுபடாது. ஒற்றுமையாக,ஊரின் நலனின் மீது அக்கறை கொண்டவராக,ஊரில் இருப்பவராக,யாரின் கன்னசைவிற்கும் மயங்காத ஆளாக இருக்கவேண்டும்.

எந்த தனி பட்ட ஆளின் உத்தரவிற்கும் செவிசாய்க்கத ஆளாக இருக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. லஞ்சம் என்ற ஊனமுற்றவன் அடங்கி ஊரில் வாழ வேண்டும்...!
posted by தமிழர் முத்து இஸ்மாயில். (chennai ) [10 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7892

தனி நபர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்...! பண பலம் தோல்வி பெற வேண்டும்...! மக்கள் பலம் வெற்றி அடைய வேண்டும்... ஊர் மக்கள் அனைவர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்... வசதி இல்லாதவன் - வசதி உள்ளவன் என்ற பாகுபாடு நம் நகர்மன்றத்தில் ஒழிக்க பட வேண்டும்... சிறு தேவைக்கும் லஞ்சத்தை எதிர்பார்த்தே செயல்படும் நம் ஊர் நகர்மன்றம் இனி நல்லவர்களால் (நல்ல உறுபினர்களால்) லஞ்சம் என்ற ஊனமுற்றவன் அடங்கி ஊரில் வாழ வேண்டும்...!

ஊரில் அணைத்து ஜமாத்தும் ஒற்றுமையாக இருப்போமாக... ஆமீன்...

என்றும் நட்புடன் - தமிழர் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை...
posted by K S MUHAMED SHUAIB (Kayalpatinam) [13 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8031

இந்த நகராட்சி தேர்தல் எப்போது முடியும்? கருத்து குழப்பம் கண்ணைக்கட்டுதே...!சில படங்களில் விசு பேசுவாரே...அது போல் அல்லவா இருக்கிறது நமது வாசகர்களின் சிந்தனைகள்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. யார் இவர்கள்! இனம் கண்டு கொள்வீர்!
posted by Firdous (Chennai) [13 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8035

தற்போதைய நகர்மன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு உப தலைவர்களை நன்கு அறிவோம். அவர்களை கண்டெடுத்தவர்கள் யார்(!) ? மீண்டும் அத்தவறு நடக்குமோ என்கிற பயம் எங்களுக்கு! கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன் உத்வேகமாக போராட்டம் (சுனாமி குடியிருப்புக்கு எதிராக) நடத்தி எங்களையும் வீதிகளுக்கு கொண்டு வந்து போராட தூண்டி இயற்றிய தீர்மானதிலிருந்து தேர்தல் நேரத்தில் அந்தர் பல்டி அடித்தது யார்!

பட்டியல்கள் இன்னும் பல.

காயல் அன்பர்களே! சற்று சிந்திப்பீர்!
நாம் விழிப்படைய இப்போதுதான் காலம் கைகூடியிருக்கிறது. இனியும் உறக்கம் வேண்டாம்!

நம்மை உறக்கத்தில் ஆழ்த்தும் அமைப்பும் வேண்டாம்!

என்றும் அன்புடன் உங்களில் ஒருவன்!

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved