எதிர்வரும் நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஒன்று நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கடந்த மாதம் 24-ம் தேதி நமதூர் பொதுநல அமைப்புகளின் நகராட்சி தேர்தல் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஈக்கி அப்பா தைக்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள். இறுதியாக ஊழல் இல்லாத, நிர்வாகத் திறமை வாய்ந்த வார்டு கவுன்சிலர்களையும், தலைவரையும் தேர்ந்தெடுப்பதற்காக 'நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு' என்ற பெயரில் அமைப்பு துவங்கப்பட்டது.
இவ்வமைப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று (07/09) காலை 11 மணிக்கு காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கமாக எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் இறைமறை வசனத்தை ஓதினார். அதனை தொடர்ந்து வரவேற்புரையை எம்.எம்.சாகுல் ஹமீத் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து நகராட்சி தேர்தல் குழுவின் அமைப்பாளர்கள் இக்குழுவின் நோக்கம் குறித்து விவரித்தார்கள்:
இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாக வார்டு கவுன்சிலர்களின் தேர்வுவில் ஜமாஅத்களின் முக்கியத்துவமும், நகராட்சி தலைவர் தேர்வு முறையில் நகரின் அனைத்து ஜமாஅத் மற்றும் நகர பொதுநல அமைப்புகளுக்க முக்கியதுவம் வழங்குவதுமே ஆகும். இதன் அடிப்படையில் தலைவரையும், கவுன்சிலர்களையும் தேர்வு செய்தால் ஊழல்அற்ற, நிர்வாகத் திறமைவாய்ந்த நல்ல ஒரு நகராட்சியை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். தனிப்பட்ட நபரின் வழிகாட்டுதலின் பேரிலோ, தனிப்பட அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரிலோ செயல்படாமல் ஒன்றுபட்டு செயல்பட்டால் சிறப்பான நகராட்சியை உருவாக்க முடியும். இதே எண்ணத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபடுவோம்! நல்ல நகராட்சியை உருவாக்குவோம்!!
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) நகராட்சி தேர்தலில் உண்மையான, ஊழலற்றவர்களை கவுன்சிலர்களாகவும், தலைவராகவும் நகர்மன்றத்திற்கு அனுப்ப 'நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு' உறுதி எடுத்துக் கொள்கிறது.
2) நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு நகராட்சி தேர்தலின் போது களப்பணியாற்றுவதற்காக சமூகநலனில் ஆர்வம் உள்ள இளைஞர்களை இக்குழுவில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
3) காயல்பட்டினம் நகர் மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வுக்காக நமதூர் முஸ்லிம் ஐக்கிய பேரவை-யின் நிர்வாகிகளுடன் எமது அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட, வார்டு உறுப்பினர்களை ஜமாஅத்தினரே தேர்வு செய்ய வேண்டும் என்கின்ற இந்த முடிவை இக்கூட்டம் மனதார வரவேற்கின்றது. மேலும் தலைவர் தேர்வின்போது ஜமாஅத் பிரதிநிதிகள் மற்றும் நமதூர் சமூகஆர்வளர்களை இணைத்து ஏற்படுத்துகின்ற தேர்வு குழுவில் நமதூரின் பொதுநல அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
4) கவுன்சிலர் மற்றும் தலைவர் தேர்வு முறையில் தற்போது அறிவித்திருக்கும் நிலையே நகராட்சி தேர்தல் முடியும் வரை தொடரும் பட்சத்தில் நகரின் பொது நல அமைப்புகளின் கூட்டமைப்பான "நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு"வின் ஆதரவு நமதூர் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு நகராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் தொடர்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
5) தேர்தலின் போது பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம் போன்ற மோசமான நிகழ்வுகளை தடுத்துநிறுத்திஇ உண்மையான முறையில்இ நேர்மையான வழியில் தேர்தல் நடைபெற 'நகராட்சி தேர்தல் ஒருங்கினைப்பு குழு' தேர்தல் நேரத்தில் முழுமையாக செய்யல்படும்.
6) தற்போது நமதூர் சி-கஸ்டம்ஸ் சாலை, கடைபள்ளிக்கு எதிரில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் இயங்கிவரும் காக்கும் கரங்கள் அலுவலகத்தை நகராட்சி ஒருங்கினைப்பு குழு-வின் அலுவலகமாக செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
7) நகரில் உள்ள அனைத்து பொதுநல அமைப்புகளையும் ஒன்றினைத்து 'நகராட்சி தேர்தல் ஒருங்கினைப்பு குழு' ஏற்படுவதற்கு உறுதுணையாக இருந்த காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்திற்கு இக்குழு பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
நகராட்சி தேர்தல் ஒருங்கினைப்பு குழுவின் ஆலோசகர்கள்:
ஜனாப். எஸ்.எம்.உஸைர்
ஜனாப். எம்.சேக் அப்துல் காதர் (ரெட் ஸ்டார்)
ஒருங்கிணைப்பாளர்கள்:
ஜனாப். எஸ்.ஏ.கே.முஹைதீன் அப்துல் காதர் (YUF)
ஜனாப். கே.எம்.டி.சுலைமான்
ஜனாப். என்.டி.சலாஹூதீன்
ஜனாப். வாவு.எஸ்.ஏ.ஆர்.இஸ்ஹாக்
ஜனாப். எஸ்.ஐ.செய்யது மொஹூதூம்
அலுவலக பொருப்பாளர்கள்:
ஜனாப். வி.எஸ்.லத்தீஃப்
ஜனாப். முஹம்மது முஹைதீன்
செய்தி மற்றும் மக்கள் தொடர்புக்கு:
ஜனாப். எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்
ஜனாப். எம்.எம்.சாகுல் ஹமீத்
ஜனாப். எம்.எம்.முஜாஹித் அலி
ஜனாப். எம்.ஜஹாங்கிர்
இறுதியாக நகராட்சி ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளா ஜனாப்.வாவு எஸ்.ஏ.ஆர்.இஸ்ஹாக்
அவர்களின் "துஆ"வுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
ஓன்றுபடுவோம்! நல்ல நகராட்சி உருவாக்குவோம்!!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.எம்.சாகுல் ஹமீத்
[செய்தி திருத்தப்பட்டது] |