Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:05:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7183
#KOTW7183
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 5, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினத்தில் ‘மெகா‘வின் நிர்வாகத்தளம் கட்டமைக்கப்பட்டது! களப்பணியாற்றும் அலுவலகமும் செயல்படத் துவங்கியது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3976 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.

இவ்வமைப்பின் துவக்கத்தை அறிமுகப்படுத்தி ஒரு பிரசுரமும், நகர்மன்றத் தேர்தல் குறித்த முக்கிய தகவல்களைக் கொண்ட நாற்பக்க பிரசுரமும் அண்மையில் நகர பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயல்பட்டினத்திலிருந்து செயல்படுவதற்காக ‘மெகா‘விற்கு உள்ளூரில் செயற்குழு நியமிக்கப்பட்டு, களப்பணியாற்றிட அலுவலகமும் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்...

அன்பிற்கினிய காயல் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்.

நல்லதோர் நகர்மன்றத்தை நிறுவிடும் பொருட்டு,நகர மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டவும் அமைக்கப்பட்ட MEGAவின் மகத்தான பணி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இலக்கை நோக்கிய பயணத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்லவும், ஒத்த கருத்துக்களைக் கொண்ட ஜமாஅத்கள், சங்கங்கள், சமூக நல அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றவும், பத்து சமூக ஆர்வலர்களைக் கொண்ட, காயல் மாநகரின் நிர்வாக செயற்குழு, இறையருளால் நியமிக்கப்பட்டுள்ளது எனும் இனிய செய்தியையும், இதன் நிர்வாக மற்றும் தொடர்பு அலுவலகம் செயல்படத் துவங்கியது என்னும் தகவலையும் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் MEGA மனநிறைவு அடைகிறது.

எமது காயல்மாநகர செயற்குழு உறுப்பினர்கள்:

எஸ்.அப்துல் வாஹித் --------------------------------- கொச்சியார் தெரு
எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் --------------------------------- நெய்னார் தெரு
ஏ.எம்.இஸ்மாயில் நஜீப் ------------------------------ அலியார் தெரு
சட்னி எஸ்.செய்யத் மீரான் -------------------------- மகுதூம் தெரு
செய்யத் முஹம்மத் (டூட்டி) -------------------------- கி.மு.கச்சேரி தெரு

கே.அப்துல் ரஹ்மான் ----------------------------- காயிதேமில்லத் நகர்
என்.டி.இஸ்ஹாக் லெப்பை --------------------------- தீவுத்தெரு
ஒய்.எம்.முஹம்மது தம்பி ----------------------------- அப்பாப்பள்ளித் தெரு
எம்.ஏ.முஹம்மத் இப்ராஹிம் (48) ------------------- குத்துக்கல் தெரு
எஸ்.கே.ஸாலிஹ் ------------------------------------- சித்தன் தெரு.

இன்ஷாஅல்லாஹ் இந்தக்குழு இன்னும் விரிவுபடுத்தப்படவிருக்கின்றது. செயற்குழு கூட்டம் குறித்த செய்திகள் மற்றும் தேவைப்படும் இதர தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

எமது தொடர்பு மற்றும் நிர்வாக அலுவலக முகவரி:
நம்பர் 1 D, ஆயிஷா காம்ப்ளக்ஸ்,
மெயின் ரோடு, காயல்பட்டணம்.


இவ்வாறு ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Javed Nazeem (Chennai) [06 September 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 7705

Wishing you a MEGA success!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Salih (Bangalore) [06 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7706

மாஷா அல்லாஹ் ..

Wish u all the best for your good action..

with best regards,
Mohamed Salih,
Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒழியட்டும் தனி நபர்கள் ஆதிக்கம்...!
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7708

தொடரட்டும் மெகாவின் பணி... வெற்றி பெறட்டும் நல்லவர்கள்... ஒழியட்டும் தனி நபர்கள் ஆதிக்கம்...! தலை நிமிரட்டும் ஒழுக்கமுள்ள இளைய சமுதாயத்தவர்கள்... வாழ்தட்டும் ஒழுக்கமுள்ள பெரியவர்கள்..

என்றும் நட்புடன் - தமிழர் முத்து இஸ்மாயில் (வி சி க)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [06 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7709

மெகா நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்......

தீர்மானம் 1 - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பகுப்பாய்வு: எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பஞ்சாயத் மற்றும் ஊராட்சியில் உள்ள எந்தெந்த தொகுதிகளில் ம.ம.க போட்டியிட சாதகமான சூழ்நிலையுள்ளது என்பது குறித்து கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, பகுப்பாய்வு செய்து தலைமைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.

ம.ம.க.-வின் இந்த தீர்மானத்திற்கு மெகா-வின் நிலைப்பாடு என்ன? இவர்கள் போட்டியிடும் வார்டு மக்களுக்கு மெகா கூறும் அறிவுரைகள் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை நவாஸ் (sg) [06 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7710

ஒவ்வொரு ஜமாத்தின் நிலைபாடு தான் MEGA வின் நிலைபாடு. எந்த ஒரு கட்சி சார்ந்த உறுபினர்களுக்கு ஆதரவு இல்லை. இன்றைக்கி இந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் நாளைக்கி எல்லா கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கும். ஆகா மொத்தம் MEGA உதயமானதிற்க்கு அர்த்தம் இல்லாமல் பொய் விடும். நான் ம.ம.க வின் ஆதரவாளன் என்ற போதிலும் நகராட்சி விஷயத்தில் ஜமாஅத் சொல்படி தான். எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கட்சிகாரர்களை மெகா ஆதரிக்காது என்று எண்ணுகிறேன்...!
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7711

தம்பி தைக்கா சாகிப் அவர்களே.... அரசியல் கட்சிகளுக்கு நகரமன்ற தேர்தலில் நாம் நமது ஊரில் முக்கியத்துவும் கொடுப்பது இல்லை..!

மெகாவின் (mega) நிலைப்பாடும் அப்படி தான் என்று கருதுகிறேன்....! கட்சிகாரர்களை மெகா ஆதரிக்காது என்று எண்ணுகிறேன்...!

என்றும் நட்புடன் - தமிழர் முத்து இஸ்மாயில் (வி சி கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஊரின் ஒற்றுமை?!
posted by பாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia) [06 September 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7716

அன்புள்ள MEGA, உறுப்பினர்களே! உங்களின் உன்னத முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஒரு சிறிய வேண்டுகோள். தயவுசெய்து தன்னிச்சையாக செயல்படாமல், நகரின் அனைத்து (மீண்டும் அனைத்து) அமைப்புகளையும் அரவணைத்து செல்லுங்கள்.

புதிய செய்தி: ஐக்கியப் பேரவை ஊரில் உள்ள அனைத்து ஜமாத் /அமைப்புகளையும் கூட்டி நகரசபை தேர்தல் பற்றி வரும் 8ஆம் தேதி ஜலாலியாவில் வைத்து விவாதிக்க உள்ளது.

இப்பொழுது ஐக்கியப் பேரவை சொல்வதை பின்பற்றுபதா? அல்லது MEGA சொல்வதை பின்பற்றுவதா?

ஊரின் ஒற்றுமை?????!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. லயீன்களின் குறுக்கு புத்தி.......
posted by zubair (riyadh) [06 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7718

அஸ்ஸலாமு அலைக்கும். உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினத்தில் ‘மெகா‘வின் நிர்வாகத்தளம் கட்டமைக்கப்பட்டது! களப்பணியாற்றும் அலுவலகமும் செயல்படத் துவங்கிய செய்தி அறிந்து சந்தோசம். உங்களின் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

அன்பு "மெகா" நிர்வாகிகளே..... நல்லது நடக்கும் இடத்தில் தான் லயீன் (சைத்தானின்) அட்டகாசம் இருக்கும் எந்த குறுக்கு வழியில் அவன் நுழைந்தாலும் வேரோடு அறுத்தெறிய "மெகா" தயாராக இருக்கவும்.

ஜமாத்தார்கள் ஒற்றுமையே.... ஊர் ஒற்றுமை. தாங்களின் கொள்கையே... நல்லவர்கள் விரும்பும் கொள்கை. எங்களின் ஜமாஅத் யாரை கைகாட்டுகிறதோ அவர்களுக்கே எங்களின் வோட்டு வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.M.B Faizal (Kayalpatnam) [06 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7719

Wish u all the best for your good action.. to get good result Insha allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை நவாஸ் (sg) [06 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7720

சதக்கத்துல்லாஹ் காக்கா, மீண்டும் மீண்டும் சொல்கிறோம் ஜமாஅத்தை பின்பற்றுங்கள். அதையேதான் MEGA உம் சொல்கிறது. ஐக்கிய பேரவை அதையே சொன்னாலும் சந்தோசம்.

- என்றும் காயல் மண்ணின் மைந்தன்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நல் வாழ்த்துக்கள்....
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.) [06 September 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7721

ஊர், மற்றும்... சமுதாய நலனுக்காக பாடுபடும்... அணைத்து...நல்ல... உள்ளங்களுக்கும்... வல்ல ''அல்லாஹு'' நற்கூலி யை... கொடுப்பானாக.... ஆமீன்... வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வெட்ட வெட்ட எழுதுவேன்
posted by சாளை நவாஸ் (sg) [06 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7722

என்ன ஆச்சின்னு தெரியலே!!! ADMIN ஓவரா வெட்டு போடுறாரே...மண்ணின் மைந்தனுக்கு மகத்தான வெட்டு. பரவ இல்லை. வெட்ட வெட்ட எழுதுவேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வேண்டுகோள்
posted by பாளையம் அ.ள. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia) [06 September 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7723

தம்பி சாளை நவாஸ்,

MEGA காயல்பட்டிணத்தை மட்டும் வழிகாட்ட முனைந்துள்ளது. நல்லது. ஆனால் தமுமுகவின் செயற்குழு மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில் காயல்பட்டணமும் அடங்கும் என்றாலும், MEGA அமைப்பினர் மமகவினரையும் அணுகி சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்பதே என் அவா.

MEGAவின் உறுப்பினர்களை பாருங்கள். அநேகர் நகர முஸ்லிம் லீக் கட்சியில் பொருப்பு வகிக்கிறார்கள். எனவே ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுங்கள் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை நவாஸ் (sg) [06 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7724

சதக்கத்துல்லாஹ் காக்கா, அழகாக சொன்னீர்கள். இருந்த போதிலும் நீங்கள் பார்த்த முஸ்லிம் லீக் கட்சியினர் ஊர் நலனுக்காக கட்சியை ஓரம் கட்டி விட்டு வந்த மாதிரி, நீங்களும் என்னை போன்ற ம.ம.க அனுதாபியும் செய்தால், உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஊரில் உள்ள செல்வந்தர்களால் பணத்தையோ ! நிலத்தையோ ! வேண்டுமானால் ஊர் நன்மை கருதி தானமாக கொடுக்கலாம்..! ஆனால் இவர்களால் திட்டத்தை அமுல் படுத்தி நடைமுறைக்கு கொடுவர இயலாது...!
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7725

ஊரில் தற்போது கிடப்பில் கிடக்கும் நல்ல திட்டங்கள் வர வேண்டுமானால் ஆளும் கட்சி சின்னத்தில் நின்று தலைவராக வெற்றி பெறுபவர் மூலமே அந்த நல்ல திட்டங்கள் ஊருக்கு வர வாய்ப்புகள் உள்ளன.. மெகாவோ, ஜமாதோ மற்றும் ஐக்கிய பேரவையோ கூடி பேசி தலைவராக அறிவிக்கும் தலைவரால் நமது (ஊருக்கு) நகர்மன்றதுக்கு ஒரு நல்ல திட்டங்களும் வரபோவது கிடையாது.. தமிழகத்தை ஆளும் அம்மா ஜெயா அவர்களுக்கு அவரின் கட்சி சார்பாக நின்று வெற்றி பெற்ற (ஊருக்கு) நகரமன்ற தலைவருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

வார்டில் உள்ள குறைகளை சரி செய்து கொடுக்க கூடியவரை மெகாவோ, ஜமாதோ மற்றும் ஐக்கிய பேரவையோ கூடி பேசி ஒரு நல்ல உறுப்பினரை தேர்ந்தடுத்து பின்பு அவர்களில் ஒருவரை துணை தலைவராக அறிவிக்க செய்யலாம் - செய்தால் நமது ஊருக்கு நகர்மன்ற தலைவர் ஆளும் கட்சி என்ற கண்ணோட்டத்தில் சில நல்ல திட்ட பணிகள் நமது நகர்மன்றதுக்கு (நமது ஊருக்கு) அந்த ஜெயா அம்மையார் (தமிழக முதல்வர்) செய்யலாம்..! இல்லை எனில் இன்னும் ஐந்து ஆண்டுகள் நாம் சும்மா பழைய கதைகளை நேர போக்கிற்க்காக பேசி காலத்தை கழிக்கலாம்.. ஊரில் உள்ள செல்வந்தர்களால் பணத்தையோ ! நிலத்தையோ ! வேண்டுமானால் ஊர் நன்மை கருதி தானமாக கொடுக்கலாம்..! ஆனால் இவர்களால் திட்டத்தை அமுல் படுத்தி நடைமுறைக்கு கொடுவர இயலாது...! அமுல் படுத்தி செயல் படுத்த ஆளும் வர்க்கம் அரசாட்சி யாரோ அவர் தான் செய்ய முடியும் ஆகையால் நகர் மன்ற தலைவரை ஆளும் கட்சியில் உள்ள நல்ல நபரை நிறுத்தி நகருக்கு நல்ல திட்டங்கள் அமுலாக முயற்சி செய்தால் நல்லது...

நானும் உங்களின் ஒருவன்..

என்றும் நட்புடன் - தமிழர் முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [06 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7727

MEGA , GIGA என்று அமைப்பை துவங்கியவர்கள் எல்லாம் தேர்தலுக்கு பின்னலோ அல்லது அதற்கு முன்பாகவே அவர்கள் வியாபார நிமத்தமாக அமீரகம் மற்றும் கத்தாருக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். அதற்கு பின்னால் ஊருக்கு நல்ல திட்டத்தை கொண்டுவந்து சேர்பவர்கள் யார்?? ஆளும்கட்சி AIADMK போடும் நல்ல திட்டங்களை நமக்கு பெற்று தருபவர்கள் யார்?? நமது தொகுதியில் ADMK MLA வும் இல்லை. இப்போது இருகின்ற MLA சிறைச்சாலை, நீதிமன்றம் என்று செல்வதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில் நம்மளுக்கு என்ன செய்திட முடியும். வேண்டும் என்றால் அடுத்த தேர்தலுக்கு முன்னால் தலைக்கு 1000 ரூபாய் தர முடியும்.

நம் ஊரு ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கு என்றுமே உழைத்து வரும் ஐக்கிய பேரவை சொல்வதை நம் மனதில் ஏற்று தக்க ஒத்தழைப்பு கொடுக்க வேண்டும். அவர்களும் ஆளும்கட்சியை சேர்ந்த நல்ல நிர்வாக திறமையும், அல்லாஹுக்கு அஞ்சி நடக்க கூடிய நல்லவரையே தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறோம்.

ஊருக்குள் இயக்கங்கள், அமைப்புகள் அதிகமாக ஆக ஒற்றுமை வராது .. விரிசல்தான் வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் ம ம க போட்டி
posted by N.A. Thymiah (Chennai) [06 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7728

மனித நேய மக்கள் கட்சி காயல் பட்டினத்தில் போட்டியிடும் இன்ஷா அல்லா. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு நல்லவராக இருப்பது தான் முக்கியமே தவிர கட்சி அல்ல.

இதற்கு முன்னாள் ஜமாஅத் சார்பாக அல்லது ஊர் அமைப்பு சார்பாக போட்டியிட்டவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Methodology:...
posted by Ahamed mustafa (Dubai) [06 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7733

It seems not many have understood the concept of MEGA. Mega are not going to control or run a parallel government from UAE or Doha. By all means it is only a driving force to guide or to choose the good amongst the publc,given the track record of the existing corrupt hands. So let us in all way stand with their policies which are seemingly wonderful & to see the office bearers giving a kickstart. Not many of has have the time to dedicate. Instead we shall appreciate them for their noble cause. I don't think political parties have any say in the local elections atleast in Kayalpatnam, Go mega...& their organizers


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஒரே கருத்து,ஒரே அணி,ஒற்றுமையே ஏற்படுத்துவது தான் தற்போது மிக மிக அவசியம்
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [06 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7741

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பார்ந்த காயல் மாநகர பெருமக்களே! அணைத்து அரசியல் அபிமானிகளே மற்றும் அணைத்து ஜமாஅத் சங்க பிரதிநிதிகளே

தாங்கள் அனைவர்களும் உண்மையான மக்களின் நலனுக்காக பாடுபட நினைக்கும் தாங்கள் ஒன்றுகூடி ஒரே கருத்து, ஒரே அணி, ஒற்றுமையே ஏற்படுத்துவது தான் தற்போது மிக மிக அவசியம். தன்னிலம் மற்ற கடல் தாண்டி குடும்பங்களை பிரிந்து பல அலுவலக சுமைகளுகிடையில் நகர நலன்னுக்காக அனைவராலும் ஏன் தங்கள் நினைக்கும் அணைத்து நல்ல பலதிட்டங்களை மிக சிறப்பாக வகுத்து பாடுபடிகிற 'MEGA' வின் செயல் திட்டங்கள் யாவும் மறுக்க முடியாதவை.

கடந்த பல ஆண்டுகள் நாம் அணைத்து அரசியல்கட்சிகளையும் நம்பி ஏமாந்தது தான் மிச்சம். ஏன் தற்போது கூட புதிய அரசு பதவி ஏற்று பல மாதங்கள் ஆகி தற்போதுள்ள காயலின் ஆளும் கூட்டணி கட்சிகள் நன்கு அறிந்த தற்போதுள்ள தலைவரின் தனிப்பட்ட 50 லட்சம் ருபாய் பங்களித்தும் முடியும் தருவாயில் உள்ள இரண்டாம் குடிநீர் திட்டம், தனி மின்நிலையம் போன்ற திட்டங்களை இன்னும் கொண்டுவராமல் இருப்பது ஏன். நமது இஸ்லாம் மார்க்கத்தின் போதனைகளை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செயல் படும் பாடக சாலைகளை இழிவு படுத்தும் அளவிற்கு நடக்கும் காவல்துறையின் அராஜகத்தை உள்ளூர் ஆளும் கூட்டணி கட்சிகள் தங்களின் மேலிடத்தின் மூலம் என்ன நடவடிக்கை ஏடுத்துல்லார்கள்.

ஆகவே அணைத்து அரசியல் அபிமானிகளே தாங்கள் உண்மையிலேயே காயல் நகர்மன்றதிற்கு மக்களுக்காக பாடுபட இந்தமுறை MEGA வுடன் சேர்ந்து ஜமாத்துகளின் முடிவுகள் படி தங்கள் அணைத்து ஆதர்வாலர்களையும் ஒன்று திரட்டி ஒரே கருத்து, ஒரே அணி, ஒற்றுமையையே குறிகோளாக செயல் பட்டாள் நாம் சாதிக்க நினைக்கும் அணைத்து திட்டங்களும் நம்மை தேடி வரும். காரணம் ஒற்றுமை, ஒரே அணி, ஒரே தீர்மானம் என்பதை இந்திய வரலாற்றில் ஓர் சாதனையாக அடுத்த தேர்தல்களில் ஒட்டுமொத்த ஓட்டுகல் பெற அரசியல் கட்சிகள், அரசாங்கமே காய்ல்பட்டினதிர்க்கு அணைத்து திட்டங்களையும் விரைவில் முடிக்கும்.

அரசு தனது கடமை தவறினால் அதை பெற பல வலிகள் உள்ளது. ஐக்கிய பேரவையின் செயல் MEGA வின் திட்டங்களாக இருந்தால் பாராட்டகூடியவை. இல்லை என்றால் அது செயல் இழந்து விட்டது என்பதே அருத்தம்.

MEGA நிர்வாகிகளே ஓர் அன்பான அடியேனின் வேண்டுகோள். ஐக்கிய பேரவை மற்றும் அணைத்து ஜமாத்து, சங்கங்கள், அரசியல் கட்சிகளை தாங்கள் கலந்து ஆலோசித்து திட்டங்களை விளக்கி அவர்களின் முடிவை செய்தியாக தந்தாள் நன்றாக இருக்கும். முடிந்த அளவு ஒரே கருத்து, அணிகளை ஏற்படுத்துங்கள்.

வல்ல அல்லாஹ் அனைத்திற்கும் ஈருலக வெற்றி தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [07 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7748

அன்பானவர்களே ......!

உள்ளாட்சிதேர்தல் குறித்தான நமதூர் அமைப்புக்களிடையே இப்போதே சிற்சில வேறுபாடுகள் தெரியவருகிறதே... ஒருபுறம் "மெகா" இன்னொரு புறம் "ஐகிய பேரவை" மறுபுறம் "நகராட்சி தேர்வுக்குழு "இப்படி பார்ட் பார்ட்டாக பிரிந்து வேல செய்தால் அது எப்படி சரியாகும் ?பழையகாலம் திரும்பி வந்து விடக்கூடாது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த பக்கத்தில் எழுதுபவர்கள் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Cnash (Kayalpatnam., ) [07 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7753

மெகா வின் திட்டங்கள் என்ன என்பதை சஹோ, ஜைனுல் ஆப்தீன் நல்ல படித்து புரிந்து கொண்டு MEGA GIGA என்று நக்கல் செய்தால் நன்றாக இருந்து இருக்கும், அதை விட்டுவிட்டு வீணாக குட்டையை குழப்பாமல் இருந்தால் நல்லது செய்ய நினைக்கும் மற்றவர்களுக்காவது உதவியாக இருக்கும். மீண்டும் மீண்டும் பழைய பல்லவியை பாடாமல் உருப்படியான யோசனை சொன்னால் நல்லதாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [07 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 7754

எல்லோரும் ஊரின் நலனுக்ககதான் புதிய புதிய இயக்கங்களை துவங்குகிறோம் என்று ஆளுக்கு ஒரு இயக்கமாக தொடங்கிக்கொண்டிருந்தால் மக்கள் தொகைக்கு நிகராக இயக்கங்களும் வந்துவிடும். இருக்கும் பொதுநல அமைப்புகளுக்கு வலிமை சேர்த்து ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் நாம் பெறவேண்டிய நன்மைகளை பெற்றிட முடியும். ஆனாலும் பெரும் இயக்கத்தில் இருக்கும் பெரியவர்களும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து கலந்தாலோசித்து செயல்படவேண்டும். இன்னும் புதிய அமைப்புகள் தேவை இல்லை என்ற அளவுக்கு எல்லா பொதுநல அமைப்புகளும் ஊரின் நலனுக்க உண்மையாக செயல்பட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Javed Nazeem (Chennai) [07 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 7758

http://wp.me/p1tjVx-u

தனிப்பட்ட பலன்களை எதிர் பாராமல், நகராட்சி நன்றாக அமைய வேண்டும் என்கிற ஒரே நோக்கோடு, பலரும் தங்கள் உழைப்பை வழங்குவது ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. உண்மையிலேயே ஒரு சிறப்பான நகராட்சி அமைந்தால் மட்டுமே இந்த உழைப்பிற்கான பலன் கிடைத்ததாக அர்த்தம் ஆகும்.

இது வரை நான் அறிந்த செயல் திட்டங்கள் என்னவெனில்:

1. ஜமாஅத் சிறந்த வேட்பாளரை அடையாளம் காட்டும் 2. MEGA மற்றும் இதர அமைப்புக்கள் அந்த வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்

இத்தனை முயற்சிக்குப் பின் வெற்றி பெரும் வார்டு உறுப்பினர், காலப்போக்கில் தவறானவராகவோ, நன்மை செய்யாதவராகவோ மாறி விட்டால்? நல்லதோர் வீணை செய்து, அதை நலம் கெட புழுதியில் எறிந்த கதை ஆகி விடும் அல்லவா? இந்த நியாயமான கேள்வி பலரது மனதிலும் தொக்கி நிற்பதை உணர முடிகிறது. இதற்கான பதில் அல்லது வழிமுறை எங்கேனும் குறிப்பிடப் பட்டிருந்தால் எனக்கு சுட்டிக்காட்டவும். இல்லையேல் இதை எப்படி அணுகலாம் என்கிற எனது கருத்தை பதிய விரும்புகிறேன்.

முதலில், ஜமாஅத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களும், ஜமாஅத் அடையாளம் காட்டும் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இது விஷயத்தில் திட்டமிடல் மற்றும் செயல் படுத்துதல் ஆகியவற்றை ஜமாஅத்தின் முடிவிற்கு விடுவதே நல்லது. இத்தகைய சக்தி ஜமாஅத்திற்கு இருக்கிறதா என்கிற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இருக்க வேண்டும். Period. இப்படி ஒரு உறுதிமொழி கிடைக்கும் பட்சத்தில் ஜமாஅத்தை தாண்டி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்து மண்ணைக் கவ்வ விரும்ப மாட்டார்கள்.

சரி, துவங்கிய விஷயத்திற்கு வரலாம். சிறந்த வேட்பாளரை அடையாளம் காட்டுவதோடு எங்கள் பணி முடிந்து விட்டது என்று யாரேனும் கூறுவார்களேயானால் அது சரியான வாதம் அல்ல. கால் கிணறு தாண்டுவதால் என்ன பயன்? மேலும் அப்படி கூறும் ஒரு அமைப்பிற்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் வாக்களர்களுக்கு இல்லாமல் போய்விடும். வெற்றி பெற்ற பின்னரும், வார்டு உறுப்பினர்கள் சரியாக செயல் படுவதற்கான வழி முறைகளை அமுல் படுத்த வேண்டும். இந்த வழி முறை, ஒருவர் வேட்பாளர் ஆக விருப்பம் தெரிவித்து மனு தரும் போதே செயல் படுத்தபட வேண்டும்.

வேட்பாளர் மனு பெறப் படும் போது கீழ் காணும் விவரங்கள் பெறப்பட வேண்டும்:

1. சொத்து விவரம்

2. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, status update / future plans பற்றி ஜமாஅத்திடம் விளக்கம் அளிப்பதற்கான உறுதி மொழி

3. தேதி குறிப்பிடப்படாத ராஜினாமா கடிதம்

மற்றுமொரு முறை இத்தகைய சக்தி ஜமாஅத்திற்கு இருக்கிறதா என்கிற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இருந்தே ஆக வேண்டும். இல்லையேல் எந்த நம்பிக்கையில் வேட்பாளர் அடையாளம் காட்டப்படுகிறார்? கடந்த காலத்தில் நல்லவராக இருந்தார் எனும் வாதம் உதவாது. இது நாள் வரை பெரும்பாலானோர் ஜமாஅத்தினால் அடையாளம் காட்டப் பட்டவர்கள் தாம். அவர்கள் எல்லாம் செவ்வனே பணி புரிந்திருந்தால் நாம் இங்கு பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லையே!

வார்டு உறுப்பினரின் பொருளாதார நிலை பற்றியும் இங்கே நாம் அலச வேண்டும். பொருளாதார நிலை சரியாக இருந்தால் தான் அவரால் வார்டு விஷயங்களில் முழுமையாகவும் நேர்மையாகவும் கவனம் செலுத்த முடியும். இதற்கான செயல் திட்டங்கள் கீழ் காணும் வகையில் அமையலாம்:

1. நகராட்சி தரும் மாதந்திர சம்பளம் மிக சொற்பம் என எண்ணுகிறேன். சம்பளத்தை உயர்த்தும் அதிகாரம் நகராட்சியிடம் இருந்தால் நியாயமான ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

2. வார்டு உறுப்பினர் போன்ற பதவிக்கு வருபவர்கள், பெரும்பாலும் பணியாளர்களாக இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவர்களால் செவ்வனே செயல் பட முடியாது.

a. தொழில் இல்லாதவராக இருப்பின், ஜமா அத் அல்லது பைத்துல் மால் மூலம் லோன் வழங்கி தொழில் அமைத்து தரலாம். இது போன்ற விஷயங்களில் காயல் நல மன்றங்களும் பங்கெடுக்கலாம்.

b. ஏற்கனவே தொழில் செய்பவராக இருந்தால், நம்முடைய தேவைகளில் இவர்களுடைய தொழிற் சேவைகளுக்கு முதலிடம் தரப்பட வேண்டும்.

இது விஷயத்தில் வேறு சிறப்பான வழிகளை யாரேனும் பரிந்துரைத்தாலும் அவற்றையும் பரிசீலனை செய்து ஒரு முழுமையான செயல் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். நம் அனைவரின் விருப்பம் நிறைவேறும் வகையில் ஒரு சிறப்பான நகராட்சி அமைய வேண்டும் அதன் மூலம் நமதூருக்கு பல்வேறு வளங்களும் நலன்களும் கிடைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. உண்மை நிலையை உணர்ந்தவர்கள் 'மெகா' வை விமர்சிக்க மாட்டார்கள்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [07 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7760

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மெகா சகோதரர்கள் களப்பணியாற்றுவதற்காக அலுவலகம் துவக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

அவசரப்படாமல் படிப்படியாக ஒவ்வொரு செயலையும் நீங்கள் செய்து வருவது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது - இன்ஷா அல்லாஹ்! நிச்சயமாக மெகா இந்த தேர்தலில் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

----------------------------------------

நமது சகோதரர்கள் பலரும் பல கருத்துக்களை இங்கே பதிகிறார்கள் - வெளியிலும் பேசிக்கொள்கிறார்கள் - என்னதான் அவர்கள் கருத்துக்களை பதிந்தாலும் , பேசிக்கொண்டாலும் இன்னும் மெகாவின் கொள்கைகளை அவர்கள் சரியாக புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.

எனக்கு தெரிந்தவரை மெகா'வின் கொள்கைகள் எல்லாம் சிறந்ததாகவே இருக்கிறது - எதுவும் ஒளிவு மறைவு இல்லை.

எந்த விதத்திலும் எதையும் , அவசரக்கோலத்தில் முடிவு எடுத்து, பின் விளைவுகளை சிந்திக்காமல் தேர்தலை சந்தித்து மக்கள் சிரமப்படுவதைவிட - முற்கூட்டியே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சிந்தித்து செயல்பட வைப்பதே மெகா'வின் கொள்கையாக இருக்கிறது.

----------------------------------------

பொதுவாகவே உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் அவசியமில்லை - அதுவும் நம்ம ஊருக்கு நிச்சயமாக அரசியல் வேண்டாம்.

வார்டு மெம்பர்களை அந்தந்த பகுதி ஜமாஅத்'துகளும் - தலைவரை ஒட்டுமொத்த ஜமாஅத்'துகளும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒற்றுமையான , நேர்மையான கொள்கைதான் அவர்களது கொள்கை.

இதிலே எந்த உள்நோக்கமோ, ஆதாயமோ இல்லை , இதை நாம் அனைவரும் கடை பிடித்தால் இன்ஷா அல்லாஹ்! வெற்றிபெறுவோம். நல்லதொரு நகர்மன்றம் அமைப்போம்.

-----------------------------------------

மெகா'வில் அங்கம் வகிப்பவர்கள் ஊரில் உள்ள அத்தனை ஜமாஅத்'துகளை சேர்ந்தவர்களாகவும், பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாகவும் , பல சங்கங்களை சேர்ந்தவர்களாகவும், மார்க்க ரீதியாக பல கொள்கைகளை உடையவர்களாகவும் , பல பகுதிகளை சேர்ந்தவர்களாகவும் இருந்தாலும் அந்த சகோதரர்களின் நோக்கமும், கொள்கையும் ஒன்றுதான் " நமது நகர்மன்றம் நேர்மையாளர்களால் அமைய வேண்டும் என்பதே". அதனால் இந்த கொள்கையின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள் 'மெகா' வை விமர்சிக்க மாட்டார்கள் மேலும் உதாசீனப்படுத்தவுமாட்டார்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re: கட்சி batchi
posted by Riyaz Mohamed (Thaikka Street) [07 September 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 7762

அன்பானவர்களே,

நமக்கு கட்சி ஓசில பட்சி எல்லாம் தின்னுற வெட்டி ஆளுங்கெல்லாம் வேணாம், எவர் ஊருக்கு நல்லது செய்வார் என்று தெரிகிறதோ அவரை தேர்வு செய்யுங்கள். முக்கியமா படித்தவர் பண்புள்ளவர் பார்த்து (ரூபாய் 5000 பணம் போட்டு கவர்மென்ட் பணம் 5,00,௦௦௦௦௦௦.000 கொள்ளை அடிக்க நினைக்காதவர் பார்த்து) ஒவ்வொரு ஜமாத்திலும் 40 - 55 வயதுள்ள எத்தினியோ நல்லவர்கள் ஊரோடு இருக்கிறார்கள். எனவே அந்தந்த ஜமாத்தினர் நன்கு ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள். ஊர் பணத்தை கொள்ளையடிப்பவன் நமக்கு தேவையில்லை.

தயவு கூர்ந்து ஒவ்வொரு வார்டிலும் வடி கட்டி (முடிந்தால் அவரிடம் எழுதி வாங்கி) தேர்வு செய்து நிறுத்துங்கள். அதுவே ஊருக்கு நல்லது.

MEGA வழி காட்டி கொடுத்தாலும் அவர் பின்னாடி அதை மாற்றி போட்டு GAME கொடுத்து விடாமல் இருக்கணும்.

ஊர் நலன் விரும்பும் - RIYAZ MOHAMED


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by hylee (srilanka) [07 September 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 7764

வாழ்த்துக்கள்.இப்ராகிம்,seyed மீரான்,முஜாஹித் போன்ற இள ரத்தங்களின் சேவையை மக்கள் ஆவலோடு எதிர் பார்த்துகொண்டு இருக்கிறார்கல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. செவிடன் காதில் சங்கு போல...
posted by M. Sajith (DUBAI) [07 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7768

I'm posting the same comment I posted in another news item.. This seems a curse of kayalpatnam., we are designed somehow not to think in context – we are more opinionated and conclude before we understand the subject – more often the person comes before the message.. This makes me more skeptical of results. May Allah help us to be together in good and piety.

சொல்வது என்ன என்பதை பார்பதைவிட சொல்வது யார் என்ன என பார்க்கும் நமதூர் வழக்கம் மாறும் வரை இவை அனைத்தும் செவிடன் காதில் சங்குதான்..

பார்போம் இந்த தேர்தலிலாவது மாற்றம் வருமா என்று..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved