கே.வி.ஏ.டி புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கல்வி மற்றும் மக்கள் நலத்திட்டங்கள்> விரிவாக்கப்பட்டு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேங்கடமங்களம் பஞ்சாயத்து கிராமத்தில் கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் சார்பில் அதன் அறங்காவலர்கள் கே.வி.ஏ.டி கபீர் கே.வி.ஏ.டி ஹபீப் முஹம்மது மற்றும்
அதன் சமூகப்பணி ஆர்வலர்கள் கல்விக்கான நலத்திட்டங்களை அறிவித்து பின்தங்கிய சகோதர சமுதாயத்தினர்களுக்கு கீழ்காணும் மக்கள் நலத்திட்டங்களும் கல்விக்கான நலத்திட்டங்களும்
கூட்டத்தின் வாயிலாக அமுல்படுத்தப்பட்டது.
இக்கூட்டத்தை கே.வி.எ.டி. அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் அவர்கள் ஒருங்கிணைந்திருந்தார்கள். ஊராட்சி மன்ற தலைவர் திரு.கஜேந்திரன் வார்டு உறுப்பினர் திரு.பன்னீர் மற்றும் வேங்கடமங்களம்
கிராம ஊர் முக்கியஸ்திரர்கள் முன்னிலை வகித்து> கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் மதவித்தியாச மில்லாத சேவையை வெகுவாகப் பாராட்டினர் பள்ளி ஆசிரியைகளும்; மாணவ மாணவியர்கள்
மற்றும் பொதுமக்களும் திரளாக வந்து இருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சியினர் மெகா மற்றும் தமிழன் தொலைக்காட்சியினர் செய்தியாக ஒளிபரப்பினர்.
நிகழும் திருவள்ளுவராண்டு 2043, செப்டம்பர் மாதம் 05-09-2011 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இவ்வூரில் அமைந்துள்ள பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம
வளர்ச்சிக்கான கூட்டம் மேற்படி சமூகநல சேவை அமைப்பு மற்றும் கே.வி.ஏ.டி சாரிட்டி இணைந்து மக்கள் நலத்திட்டங்கள்
முதியவர்களுக்கு அரசால் வழங்கப்படும் முதியவர்களுக்கான உதவித் தொகை எவ்வித கட்டணங்கள் இன்றி இந்த சேவை நிறுவனத்தின் மூலம் விண்ணப்பித்து மாதம் தோறும் பெறுவதற்கு உதவி
செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே சுயதொழில் செய்ய வழி வகுத்தல் மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்து சுய தொழில் செய்வதற்கான அடிப்படை
வசதிகளை இந்த ஊரிலேயே ஏற்படுத்தி மகளிரை வேலைக்கு அமர்த்தல். அவசர சிகிச்சைக்கான போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் இலவசமாக மருத்துவ மையம் அமைத்தல். செந்தமிழ்
நகரில் உள்ள 20 மின் வசதி இல்லாத குடும்பத்தினர்களுக்கு சோலார் செல்ஸ் மூலம் எரியும் மின் விளக்குகள் வழங்குதல். போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் காலை மற்றும் மாலை
வேளைகளில் மினி வேன் வசதி ஏற்படுத்துதல் கல்விக்கான நலத்திட்டங்கள் வேங்கடமங்களம்> பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளியினை தத்தெடுத்தல் பள்ளியின் அடிப்படை வசதியினை
மேம்படுத்தும் பொருட்டு மாணவ மாணவியர்களுக்கு டேபிள் மற்றும் பெஞ்சி வழங்குதல். தற்போது சுவரையே கரும்பலகையாக பயன்படுத்தி வரும் ஆசிரியர்களின் வசதிகளுக்காக புதியதாக 2
கரும்பலகைகள் வழங்குதல். மேற்படி சமூகநல சேவை நிறுவனங்களின் மூலம் இப்பள்ளிக்கு மேலும் 3 ஆசிரியர்களை பணியமர்த்தி பாடங்கள் நடத்துதல். ஆங்கிலம் பேச மற்றும் எழுதுவதற்கு
தனியாக பயிற்சி அளித்தல். கணிணி வகுப்புகள் நடத்துதல். தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைத்து பள்ளிகளும் ஒன்று தான் என்ற ஒற்றுமையை
உண்டாக்கும் வண்ணம் இப்பள்ளியில் பயிலும் 56 மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக புதிய வண்ணத்தில் பள்ளிச் சீருடை> டை> அடையாள அட்டை> பெல்ட் மற்றும் ஷ{ - சாக்ஸ் வழங்குதல்.
அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இலவசமாக காலணிகள் வழங்குதல்.
மேற்படி கூட்டத்தில் ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர். மேலும் அன்றைய தினத்தில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் வருகை தந்து மேற்படி
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நாளிதழ்களில் வெளியிடவும் முன்வந்துள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
1. பிற ஊரிலும் செய்திருப்பது நம் அனைவராலும் பாராட்ட வேண்டிய ஒரு நல்ல செய்தி... posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[07 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7746
கே.வி.ஏ.டி அறக்கட்டளை தனது நல்ல சேவைகளை நம் ஊரிலும் பிற ஊரிலும் செய்திருப்பது நம் அனைவராலும் பாராட்ட வேண்டிய ஒரு நல்ல செய்தி - மாஷா அல்லாஹ்... அவர்களின் இந்த நல்ல சேவைகள் இன்னும் வளர்ச்சி அடைய.... ஆமீன்.... வல்ல இறைவனை துவா செய்வோமாக..
2. Re:காஞ்சிபுரம் மாவட்டம் வேங... posted byசாளை நவாஸ் (sg)[07 September 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7751
ஹபீப் காக்கா பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு. இரண்டு வாரம் முன்பு நோன்பு நேரத்தில் உங்களை காண வந்திருந்தேன், நீங்கள் வந்த உடன் ஒரு குட்டி ஆடு ஓடி வந்து உங்கள் வேஷ்டியை போட்டு சவைத்தது, நீங்களும் கொடுத்து கொண்டே இருந்தீர்கள், ஒரு கட்டத்தில் பாவம் ஆடுகுட்டிக்கு ரொம்ப பசி போலேன்னு சொல்லி, நம் பேச்சை நிறுத்தி விட்டு பக்கத்தில் இருந்த செடியில் இல்லை பறித்து போட்டீர்கள். இது ஒரு சாதாரண நிகழ்வு என்றபோதிலும் அந்த பண்பு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
உங்களை போல் நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் KVAT அறக்கட்டளை என்றும் செழித்து ஓங்கட்டும்.
4. Re:காஞ்சிபுரம் மாவட்டம் வேங... posted byALS Maama (Kayalpatnam)[07 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7766
அஸ்ஸலாமு அலைக்கும்,
காஞ்சிபுரம் அடுத்த வேங்கடமங்களத்தில் கே வி எ டி அறக்கட்டளை சார்பில்
கிராம வளர்ச்சிப்பணியை சிறப்பாக செய்த்திட்ட புகைப்பட தொகுப்பு செய்திகளும் கண்டேன். இனி உங்கள் அறக்கட்டளை எங்கு சென்றும் பணி செய்தாலும் நாட்டுத் தலைவர் நூல்களையும்,
விஞ்ஞான வளர்ச்சி நூல்களையும் , விஞ்ஞான அறிஞ்ஞர்களான சா் .சி.வி. ராமர் , ஜி.டி.நாயிடு மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் எழுதிய நூல்களை அக்கிராம மக்களுக்கு
பரிசாக அளிக்கலாம் . மக்களுக்கு எல்லா பொருள்களைவிடவும் புத்தகங்கள் தான் அறிவுக்கண்ணை திறக்கும் இது ஒரு சிறந்த வழிமுறை ஆகும் இது எனது எழுத்துத்துறையின் கருத்தாகும்.
பொது சேவை , எழுத்தாளர்
ALS
ரஹ்மானியா பள்ளி ஓவிய ஆசிரியர் ,
கல்வி வளர்ச்சி குழு ஆலோசகர் ,
மஜ்லிஸுல் கௌது சங்கம் ,
சீதக்காதி நூலக தலைவர் ,
காயல்பட்டினம்
7. KVAT - Shining stars !! posted byRayyan's Dad (Salai Mohamed Mohideen) (mac.mohamed@gmail.com)[08 September 2011] IP: 63.*.*.* United States | Comment Reference Number: 7803
Its very good to see KVAT is stepping ahead in their welfare work across other villages/towns. May Allah accept their all good deeds and strengthen their hands to do more like this in future
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross