கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து நடத்தும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் இம்மாதம் 25ஆம் தேதி காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடைபெறுகிறது.
திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இம்முகாமில் கலந்துகொண்டு, மருத்துவ பரிசோதனை செய்யவுள்ளனர்.
இதற்கு முன் நடத்தப்பட்ட முகாம்களிலிருந்து சற்று வேறுபட்டு, இம்முகாமில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பாப்ஸ்மியர் பரிசோதனை சலுகைக் கட்டணத்தில் செய்யப்படவுள்ளது. அச்சலுகைத் தொகையையும் கத்தர் காயல் நல மன்றம் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறைந்தளவிலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதால், விருப்பமுள்ள பெண்கள், சகோ. அப்துல் வாஹித் அவர்களை 98421 85917 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, முற்கூட்டியே தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு இம்முகாமை நடத்தும் இரு அமைப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். |