எதிர்வரும் நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு - மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ ‘MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA)‘ என்ற பெயரில் அமைப்பு ஒன்று சமீபத்தில் துவக்கப்பட்டது.
கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 26) நகரில் தனது பணியை MEGA துவக்கியது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து - அதன்
செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!
அன்புள்ளம் கொண்டவர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
எதிர்வரும் நகராட்சித்தேர்தலில் நமது நகர மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் MEGA வின் பணி, இறையருளால் பொதுமக்களின் ஆதரவோடு தொடர்ந்து, தொய்வின்றி நடந்து வருகிறது.
பெருநாளன்று பள்ளிவாசல்களிலும், பெண்கள் தைக்காகளிலும், கடற்கரையிலும் அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று இரண்டு ஜூம்ஆ பள்ளிகளிலும், வெளியிடப்பட்ட பிரசுரங்களைத் தங்கள் பார்வைக்காகத் தந்திருக்கிறோம்.
Page 1 |
Page 2 |
Page 3 |
Page 4 |
தொடர்ந்து MEGA வின் அமைப்பாளர்கள் பல்வேறு ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடன் பேசிவருகின்றனர். விரைவிலேயே, தத்தம் ஜமாஅத் கூட்டத்தை கூட்டி, இன்ஷாஅல்லாஹ், நல்லதொரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் அனைத்து முயற்சிகளும் எடுப்பதற்கு ஆவன செய்யப்படும் என்ற
நல்ல செய்தியினை எங்களது அமைப்பாளர்களிடம் பதிலாகத் தெரிவித்துள்ளனர்.
எங்களது இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, சங்கங்கள் மற்றும் உலகநல மன்றங்களின் விவரங்கள் இன்ஷாஅல்லாஹ் வெகுவிரைவில் தங்களுக்கு செய்தியாகத் தரப்படும். இறையருளால் MEGA தனது இலக்கை நோக்கி, உங்களின் ஆதரவுடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA.
|