கடந்த சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 27) காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
காவல்துறையினரின் இச்செயலினை கண்டித்து நேற்று (செப்டம்பர் 2) ஜும்மா தொழுகையின்போது அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் மஹ்லரி உரை நிகழ்த்தினார்.
மேலும் இச்சம்பவத்தை கண்டித்து திங்கள் (செப்டம்பர் 5) அன்று மாலை 4:30 மணிக்கு காயல்பட்டினம் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளும்படி தஃவா சென்டர் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2. நம்மை ஆட்சியாளர்கள் கோழைகளாக கருத தோன்றும்.. posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[03 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7627
கண்டிப்பாக இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஊரில் இருக்கும் அனைவரும் கலந்துகொள்ள கூடிய ஆர்ப்பாட்டம் - நமது எதிர்ப்பை இந்த காவல் துறைக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் காட்டவேண்டும்..! நமது ஆர்ப்பாட்டம் நியாயமானது நாம் அனைவர்களும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்.. இந்த ஆர்ப்பாட்டம் நமது ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்... ! இல்லை என்றால் இனி வரும் காலங்களில் நம்மை ஆட்சியாளர்கள் கோழைகளாக கருத தோன்றும்.. நமது எதிர்ப்பை பதிவு செய்வோமாக... !
ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள அனைவர்களும் வாருங்கள் நாம் கைகோர்ப்போம்..
ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய நாமும் பங்கு எடுத்து துவா செய்வோம் - ஆமீன்..
3. Re:காவல்துறையை கண்டித்து திங... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATNAM)[03 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7629
தாவா செனட்டர் நிகழ்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மிக சரியான முடிவு.மக்களின் எந்த பிரச்சினையையும் அல்லது மக்களின் எந்த கோரிக்கையையும் சாதாரணமாக அரசு காதில் வாங்கிக்கொள்வதில்லை. அதற்க்கு ஏதாவதொரு ஆர்ப்பாட்டம் அல்லது சாலைமறியல் என்று போகவேண்டியதிருக்கிறது இது அரசின் "கையாலாகா"தனத்தைத்தான் காட்டுகிறது. இதற்க்கு முன்பும் நமதூரில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. அதன் பலன் என்ன என்று தெரியவில்லை. இந்த ஆர்ப்பாட்டமாவது தனது கோரிக்கையை வென்றுஎடுக்கவேண்டும். (இன்ஷா அல்லாஹ் )
4. நமது கடமை posted byசாளை ஷேக் சலீம் (Dubai)[03 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7631
வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் கயலர்களே தயவுசெய்து அனைவரும் தத்தம் வீட்டு ஆண்கள் மாணவர்கள் அனைவரையும் இந்த உரிமை போராட்டத்தில் தவறாது கலந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுங்கள். ஒரு தனி போலீஸ் ஆய்வாளர் இந்த அளவிற்கு கௌரவக்குறைவாக நம்மை நடத்துவது என்பது எற்ப்புடையதாக இல்லை என்றாலும் அவர் இந்த அளவிற்கு கீழ்த்தரமாக நடக்க என்ன பின்னணி என்றும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த போராட்டத்தில் நமது ஒற்றுமையை அரசாங்கத்திற்கு காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. இன்ஷா அல்லாஹ் ஓன்று படுவோம் வென்று காட்டுவோம். ஆமீன்.
7. Re: காவல்துறையை கண்டித்து திங்கட்கிழமை நகரில் ஆர்ப்பாட்டம்! posted byzubair (riyadh)[04 September 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7641
அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 27) காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாகவும், மேலும் நிர்வாகத்திற்கு சரியான விளக்கம் கொடுக்காமால் மிரட்டியதாகவும் அறிந்தோம். இது கண்டனத்துக்குரியது. அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது கடமையான ஒன்று.
நாம் அனைவரும் இதில் ஓன்று இணைந்து நிச்சயம் நமது வலிமையை, உரிமையை & உணர்வை வெளிபடுத்துவது
நமக்கு கடமையாகும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நமது ஊரில் நடைபெறாத வகையில் நாம் பார்த்துகொள்வோம்.அதற்க்கு தேவை நமக்குள் ஒற்றுமை ஓன்று தான். வல்ல நாயன் நமக்கு துணை நிற்பானாக .AAMEEN
9. இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள். posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[04 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7651
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
காவல்துறையினர் நடந்துக்கொண்ட விதம் கண்டனத்திற்குரியது. நேர்மையான காவலர்கள் இந்த குறுக்கு வழியை பயன்படுத்தமாட்டார்கள்.
நிர்வாகத்தின் அனுமதியின்றி நுழைந்து, அவர்களின் அனுமதியில்லாமலேயே அழைத்து சென்றால் அந்த காவல்துறையின் நம்பகத் தன்மை என்ன?
நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்தில் காவல்துறையினர் இவ்வாறு அத்துமீறி செயல்பட்டதுடன் , விசாரிக்க சென்ற நிர்வாகிகளை மிரட்டியிருப்பதும் சட்டப்படி குற்றம்.
குற்றம் செய்பவர்களை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே , அதிகாரத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்தால் அதை யாரிடம் போய் சொல்வது?.
-------------------------------------
நிர்வாகிகளை முறையாக அணுகியிருந்தால் சட்டப்படி அந்த பெண்ணை, அந்த அதிகாரி அழைத்து சென்று இருக்க முடியாது அதே நேரத்தில் முறையான, நேர்மையான விசாரணையை செய்திருப்பார், சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுத்திருப்பார்.
ஆனால் அதிகாரிவுடைய நோக்கம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதல்ல அந்த பெண்ணை எப்படியும் அந்த இடத்தில் இருந்து அழைத்துப் போக வேண்டும் என்பதுதான்.
அதனால்தான் அந்த அடாவடித்தனம் - இதனால் அவர் சட்டத்தை மீறி இருக்கிறார் - அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் மற்றபடி அவர் எதையும் சாதித்துவிட வில்லை.
-------------------------------------
அதிகாரியாக இருக்கட்டும் அல்லது எந்த ஒருவராகவும் இருக்கட்டும் ஒன்றை மட்டும் அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள். இஸ்லாம் என்பது மார்க்கம் அது மதமல்ல " மதம் " கொண்டு அலைவதற்கு - இஸ்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் நேர்வழியை காட்ட சாந்தி, சமாதானத்தை போதிக்கக் கூடிய மார்க்கம் - ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்பதால் அது அவருக்குத்தான் நன்மையே தவிர அது இஸ்லாமிய மார்க்கத்துக்கல்ல.
ஒருவர், பெயரிலே இஸ்லாமாக இருந்துவிட்டால் அதிலே அந்த மார்க்கத்துக்கோ அல்லது அந்த மனிதருக்கோ எந்த ஒரு நன்மையும் கிடைத்துவிட போவதில்லை - மனதிலே, செயலிலேதான் முஸ்லிமாக இருக்க வேண்டும் - அப்பொழுதுதான் அது அவருக்கு விமோசனத்தை கொடுக்கும்.
காவல்துறை அதிகாரியாக இருக்கட்டும் அல்லது வேறு யாருமாக இருக்கட்டும் அந்த பெண்ணை காயல்பட்டணத்தில் கல்வியை பயில விடாமல் அழைத்து சென்று விட்டால் போதுமா ? உலகத்தில் வேறு எங்குமே இல்லையா?
கல்வி நிலையங்கள்! மார்க்கத்தை போதிப்பதற்கு.
என்று அந்த பெண் உண்மையாகவே இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டாளோ! அன்றே இறைவனின் அருள் அவள் மீது விதியாகிவிட்டது. இறைவன் கொடுக்க நினைத்ததை எவராலும் தடுக்கவும் முடியாது - இறைவன் தடுத்ததை எவராலும் கொடுக்கவும் முடியாது.
-------------------------------------
அதிகாரிகளே!
சட்டத்திற்குட்பட்டு உங்கள் கடமைகளை செய்யுங்கள் வேண்டாம் என்று சொல்ல வில்லை. சட்டத்தை காக்க வேண்டிய நீங்களே சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் அமைதியை குலைக்காதீர்கள்.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குமேயானால் கடவுளை பயப்படுங்கள் - இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross