சஊதி அரபிய்யாவில் 30.08.2011 அன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சஊதி அரபிய்யா ஜித்தாவிலுள்ள காயலர்கள் இன்பச் சிற்றுலா சென்று வந்தனர்.
இதுகுறித்து சிற்றுலா குழுவினரான சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப், குளம் முஹம்மத் அஸ்லம், சட்னி முஹம்மத் உமர் ஒலி, வேனா ஃபாஜுல் கரீம், சுலைமான் (எல்.கே.எஸ்.) ஆகியோர் இணைந்தனுப்பியுள்ள பயணக் கட்டுரை பின்வருமாறு:-
சஊதி அரபிய்யாவில் 30.08.2011 அன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சஊதி அரபிய்யா ஜித்தாவிலுள்ள காயலர்களான நாங்கள் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நடத்தினோம்.
பின்னர் உல்லாசப் பயணத்தை ஜித்தாவில் துவங்கி, தாயிஃப், அல்பாஹா, அல்நமாஸ், பல்லஹ்மர், பல்லஸமர், முஹைல், அப்ஹா வழியாக கடினமான மலைப்பாதையில், இடையிடையே வரும் இருண்ட குகைகளைக் கடந்து, சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணித்து ஹமீஸ் முஷாயத் சென்றடைந்தோம்.
நமது ஊட்டி மற்றும் கொடைக்கானலை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள - 10848 அடி உயரம் கொண்ட - சஊதியிலேயே உயர்ந்த சிகரமான ஜபல் அல்சுதா சென்று ரசித்தோம்.
ஹமீஸ் முஷாயத் மற்றும் அப்ஹா வாழ் காயலர்கள் எங்களை அன்போடு உபசரித்து, காயல்பட்டினம் விருந்தும் அளித்து, பார்க்கவேண்டிய இடங்களுக்கு இன்முகத்துடனும், கனிவுடனும் எங்களை அழைத்துச் சென்றனர், அவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியினையும் இந்நேரத்தில் பதிவு செய்கின்றோம்.
இவ்வாறு அவர்களது பயணக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள்:
சொளுக்கு S.M.I.செய்யித் முஹம்மத் ஸாஹிப்,
ஜித்தா, சஊதி அரபிய்யா. |