ஓமன் நாட்டில் 31.08.2011 அன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாள் தொழுகைக்குப் பின், ஓமன் காயல் நல மன்றத்தைச் சார்ந்த காயலர்களின் ஒன்றுகூடல், ஓமன் தலைநகர் மஸ்கட்டிலுள்ள குர்ரம் பார்க்கில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்றது. இதில், ஓமன் நாட்டிலுள்ள காயலர்களான டாக்டர் நூருத்தீன், டாக்டர் எம்.எம்.எஸ்.மீராத்தம்பி, டாக்டர் ஹஸன் குடும்பத்தார், பொறியாளர் அலீ அபூபக்கர், பொறியாளர் அப்துல் காதிர் (ஓமன் ஏர்வேஸ்), ஹாஜி இஸ்மாஈல் ஸூஃபீ, பொறியாளர் தாவூத் மற்றும் அங்கு குடும்பத்துடன் வசிக்கும் காயலர்களின் மனைவியர் - குழந்தைகள் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் முறைப்படி ஆயத்தம் செய்யப்பட்ட பெருநாள் உணவுப் பதார்த்தங்கள் இவ்வமர்வில், அனைத்து காயலர்களுக்கும் பரிமாறப்பட்டது.
பின்னர் பூங்காவின் பசுமை நிலப்பரப்பில் குழந்தைகளை விளையாடவிட்டு ரசித்த பெரியவர்கள், தமக்கிடையில் காயல்பட்டினம் நகர் நடப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கும் பின் அனைவரும் தமதில்லங்களுக்குக் கலைந்து சென்றனர்.
ஹாஜி இஸ்மாஈல், ஹமீத் சுலைமான், எஸ்.ஓ.அப்துல்லாஹ் ஆகிய சகோதரர்கள் விடுமுறையில் தாயகம் சென்றிருப்பதால் இந்த ஒன்றுகூடலில் அவர்கள் கலந்துகொள்ள இயலாதது குறிப்பிடத்தக்கது. |