செய்தி எண் (ID #) 7208 | | |
சனி, செப்டம்பர் 10, 2011 |
உள்ளாட்சி தேர்தல் 2011: கோமான் ஜமாஅத்தார்களுக்கு வேட்பாளர் லுக்மான் எழுதிய கடிதம்! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4749 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (46) <> கருத்து பதிவு செய்ய |
|
வரும் நகர்மன்ற தேர்தலில் - வார்ட் 1-ன், கோமான் மொட்டையார் ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹாஜி ஏ. லுக்மான் நேற்று தேர்வு செய்யப்பட்டார். Koman Educational Forum அமைப்பின் செயலாளரான இவர் - தேர்தலில்
நிற்பது குறித்து, தனது ஜமாஅத்தார்களுக்கு எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு:-
அன்புள்ள ஜமாஅத்தார்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தலைக் கருத்தில் கொண்டு, சென்னையிலும், நமது ஊரிலும் இருக்கும் ஜமாஅத் அன்பர்களின் வேண்டுகோளை
ஏற்று, எனக்கு விருப்பம் குறைவாக இருந்தாலும் தகுதியான நபர் நமது வார்டின் சார்பாக நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவர்களின்
உயரிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கான எனது விருப்ப மனுவை தாக்கல் செய்கிறேன்.
நான் நம் ஜமாஅத்தை சார்ந்த யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. என்னை விட தகுதியான நபர் போட்டியிட விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு
விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதுடன், அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
மேலும், ஒரு மனதாக ஜமாஅத்தார்கள் என்னை பதவிக்கு தேர்ந்தெடுத்தால் நான் கூறும் உறுதிமொழி என்னவென்றால் -
அல்லாஹ்வின் மீது ஆணையாக
1) ஒரு போதும் லஞ்சம் வாங்க மாட்டேன்
2) வேண்டியவர், வேண்டாதவர் என்று யாரிடமும் பாரபட்சமாக நடந்துக்கொள்ளமாட்டேன்
3) எனது சக்திக்கு உட்பட்டு நகராட்சியின் சட்டதிட்டங்களை அறிந்துக்கொண்டு, நமது பகுதிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை போராடி பெற
முயற்சிப்பேன்
4) ஊர் விஷயத்தில் பொதுவான காரியங்களில் நம் ஜமாஅத்தின் ஆலோசனைப்படி செயல்படுவேன்
5) நான் யாரிடமும் லஞ்சம் பெற்றதாக புகார் கூறி அதை நிருபித்தாலோ, அல்லது எனது நகராட்சி செயல்பாடுகளில் நம்பிக்கையின்மையும்,
அதிருப்தியும் இருப்பதாக ஜமாஅத் கருதி என்னை பதவியிலிருந்து விலகும்படி ஜமாஅத் கூட்டத்தில் பெரும்பான்மையோரால் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டால், மறுகனமே நான் எனது நகராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.
வஸ்ஸலாம்,
A. லுக்மான்,
62 கோமான் நடுத் தெரு,
காயல்பட்டணம்.
இவ்வாறு ஹாஜி ஏ. லுக்மான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
|