எதிர்வரும் நகர்மன்ற தேர்தலில் - காயல்பட்டின நகராட்சியின் வார்ட் 1க்கான, (கோமான்) மொட்டையார் பள்ளி ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹாஜி ஏ. லுக்மான் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
இத்தேர்வில் தாங்கள் பின்பற்றிய வழிமுறை பற்றி ஜமாஅத்தின் செயலாளர் என்.எம். முஹம்மது இப்ராஹீம் - கடிதம் ஒன்றினை, நகரில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அனுப்பி உள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:-
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
எங்கள் 1 வது வார்டு வேட்பாளர் தேர்வில் நாங்கள் பின்பற்றிய வேட்பாளரின் தகுதிக்கான மதிப்பீட்டு அளவுகோள் விபரம்:
1. இபாதத், ஒழுக்கம்
2. நேர்மை, நாணயம்
3. பொருளாதாரம்
4. நன்னடத்தை, மக்களிடம் பழகும் தன்மை
5. கல்வி
6. அவரின் வாக்குறுதி
இந்த 6 அம்சங்களை அடிப்படையாக கொண்டு வழிகாட்டு முறையை அமைத்து கொண்டோம். ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக கருதப்பட்டால், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியோ, அல்லது குலுக்கல் முறையிலோ தேர்வு செய்வது எனவும் தீர்மானம் செய்தோம். விருப்ப மனுக்களை பரிசீலனை செய்யுமுன் மனு அளித்தவர்களிடம் உறுதிமொழி ஒப்பந்தமும் வாங்கப்பட்டது.
இந்த நடைமுறையை நமதூரின் எல்லா ஜமாஅத்துகளும் பின்பற்றி நல்ல பண்புள்ள நபர்களை நகரசபைக்கு அனுப்பி தமிழகத்திலேயே ஒரு முன் மாதிரியான நகரசபை அமைய முயற்சி செய்வோமாக என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
கோமான் ஜமாஅத்,
காயல்பட்டணம்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ். அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு. |