காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் வாசகர் கருத்துக்கள் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கருத்துக்கும் குறிப்பு எண் (Comment Reference Number) வழங்கப்பட்டுள்ளது. இக்குறிப்பு எண் மூலம் - சமர்பிக்கப்பட்ட கருத்துக்களின் நிலையினை அறியலாம். அது தவிர - வெளியிடப்பட்ட கருத்தில் தவறு இருப்பதாக கருதுபவர்கள், இக்குறிப்பு எண்ணை கொண்டு, ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
சிலமாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்துக்கள் பகுதியில், பதிவாகியுள்ள கருத்துக்களின் எண்ணிக்கை, பதினோரு ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் எண்ணிக்கையை விட அதிகம்! அவைகளை வாசகர்கள் எளிதாக பார்வையிடும் முகமாக, கருத்து தெரிவிக்கும் வாசகர்களின் பிற செய்திகளுக்கான கருத்துக்களையும் எளிதாக காணும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனபதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் - ஒரு செய்தி குறித்து பெறப்பட்ட கருத்துக்களில், நிராகரிக்கப்பட்ட கருத்துக்களின் விபரங்களை - நிராகரிக்கப்பட்டதற்க்கான காரணங்கள் உட்பட - எளிதாக காணலாம்.
2. மிக அற்புதமான,வெளிப்படையான,பாராட்டுக்கு உரிய அழகான ஏற்பாடு. posted by.சட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம் )[11 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7957
அஸ்ஸலாமு அலைக்கும்...
மிக அற்புதமான,வெளிப்படையான,பாராட்டுக்கு உரிய
அழகான ஏற்பாடு.
உங்கள் மக்கள் சேவை வீறு நடை போட்டு,
வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றோம்....
எந்த வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் அளிக்காது
திறந்த புத்தகமாய் விளங்கிட வெளிப்படையான சேவை ...
எங்களின் அன்பான வேண்டுகோள் ...
------- - - - - - - - - - - - - - - - - - - - -
முந்தைய சமயம் இறப்பு,பிறப்புகள் மற்றும் திருமணம்
போன்ற சம்பவங்களுக்கு எனவும் அதன் மூலம்
வாசகர்காளகிய நாங்கள் எல்லாம் அறிவதுடன்
எங்கள் வாழ்த்தும்,வருத்தமும்
பகிர்ந்து கொள்ள மிக மிக வசதியாக இருந்தது அதனை மீண்டும் உருவாக்கி தருமாறு மிக்க தயவுடன் வேண்டுகின்றோம் .
3. சும்மா...! அசத்துறீங்க போங்க! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.)[11 September 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7958
சூப்பர்....சூப்பரோ சூப்பர்...!!! கருத்து பதிவிற்காக ஓர் கருத்தெழுத பணித்து விட்டீர்களே? நாளொருமேனி பொழுதொரு வண்ணமாய்த் தோன்றி சும்மா...! அசத்துறீங்க போங்க! வாசகர் கருத்துக்கு மதிப்பளித்து வசதிகள் செய்தமைக்கு பாராட்டுக்கள்!!!நம் இணையதளத்தில் நான் கருத்து எழுதத் துவங்கிய பின் எனக்குக் கிடைத்த நண்பர்களும்,பாரட்டுக்களும் ஏராளம்!மனதுக்குள் உள்ளூர ஓர் சந்தோஷ இழையோடுவது உண்மைதான்!!! நன்றி!!! வாழ்த்துக்கள்..!!!
NEWS ID NO. 7194 ல் நாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு உரிய விளக்கமும் தந்து மேலும் கருத்து பகுதியை மெருகூற்றிய இணையத்தளத்தாருக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்.
இந்த ஊடகத்தின் வாயிலாக பல்வேறு சமுக விழிப்புணர்வும், தாயகம் விட்டு கடல் கடந்து வாழும் நமதூர் சகோதர்களுக்கு மத்தில் ஒரு பாலமாக இந்த இணையதளம் அமைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற நல்ல செயலுக்கு இடையுறு ஏற்ப்பட்டு விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பதிவு செய்யப்பட்டதே அன்றி வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் சமுதய சேவை என்றும் தொடர வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
7. Tracking prev .comments !! posted byRayyan's Dad (USA)[12 September 2011] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 7964
Its a good enhancement...nice to see our previous comments which goes back to an yr back now. Hmm...even i've posted 47 comments todate. Regular readers might have posted ton's of comments......announce some prize for them to encourage most commenter of the year!!
8. Tracking prev.Comments (contd) posted byRayyan's Dad (USA)[12 September 2011] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 7965
I forgot to add one line in my prev. comment........Defintely it will put a full stop to very frequent complaint about KOTW on rejecting the readers comments for some or no reason.
9. இனியாவது கருத்து எழுதுபவர்கள் சிந்தித்து எழுதவும். posted byAbdulKader (Abu Dhabi)[12 September 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7969
அஸ்ஸலாமு அழைக்கும்.
நல்லதோர் முயற்சி.
கருத்துகளை உளறி கொட்டுபவர்களுக்கு தங்களை திருத்திக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இது இதுபோன்றவர்கள், நாம் என்ன எழுதினோம் நமக்கு எவ்வளவு வரவேற்ப்பு மற்றும் வெறுப்பு கிடைத்தது என்று இனிமேலாவது (முந்தய பதிவுகளை) ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை இந்த அறிய ஊடகத்தின் வழியாக பதிவு செய்யவும்.
அட்மின் அவர்கள் இந்த வடிவத்தை கொண்டுவர முக்கிய காரணத்தையும் இதன் நோக்கத்தையும் மக்களுக்கு எடுத்து வைத்தால் மக்கள் மேலும் பேனுதலுடன் தங்கள் கருத்தை பதிவு செய்வார்கள் என்று எண்ணுகிறேன்.
11. மனமார்ந்த வாழ்த்துக்கள்....... posted byFasi Ismail (Jiangmen, China)[12 September 2011] IP: 27.*.*.* China | Comment Reference Number: 7979
உங்களுடைய சேவைகள் மேன்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்கள் இணையதலம் ஒரு மணமகனாகவும், அதில் உள்ள செய்திகள் மணமகளாகவும், kayal வாசகர்கள் தங்ககளுடைய கருத்தை பதிவு செய்வதே இத்தளத்திற்கு விருந்தாகவும் அமைகிறது.
ஒரு சின்ன வருத்தம் முன்பு போல் உங்கள் இனையதளத்தில் Wedding, Death, Photo Galary.... இப்படி சில தலைப்புக்கள் உங்கள் Website Menu வில் இருந்தால் விருந்துக்கு side dish ஆக இருந்திருக்கும்.
12. Re:இணையதளத்தின் கருத்துக்கள்... posted byFSK (UK)[12 September 2011] IP: 188.*.*.* United Kingdom | Comment Reference Number: 7986
மாஷா அல்லாஹ்.. May Allah reward Your efforts.
One suggestion.. Usually the colour red in fonts used for admin's comments.. It would be unique to follow the same and some other mild colour to these links.
14. Re:இணையதளத்தின் கருத்துக்கள்... posted byABU HURAIRA (ABU DHABI)[12 September 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7997
காயல்பட்டணம்.காம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மெருகேற்றி வருகின்றது. எங்களை போன்று கடல் கடந்தும், வெளிவூரிலும் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
மேலும் செய்திகளை நடுத்தரமாக நம்மூர் மக்களுக்கு உடனுக்குடன் வெளி இடுகின்றனர். அலுவலகத்தில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி.
முதலில் காயல்பட்டணம்.காம் செய்திகளை பார்க்க தான் மனதில் தோன்றுகின்றன.
காயல்.காம் மெருகேறி வந்த பிறகு,
வேலையில் நாட்டம் இல்லை
வீட்டு தேட்டமும் இல்லை
யார்மீதும் காட்டமும் இல்லை
தனியே இருப்பதால் வாட்டமும் இல்லை
ஆனால் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமாகவும் இருக்கிறது.
வேலை போனால் கொஞ்சம் திண்டாட்டமாக இருக்கும்.
வாழ்க kayalpatnam.com இன் சேவை. என்றும் இந்த வலைத்தளம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
16. Re:இணையதளத்தின் கருத்துக்கள்... posted byshaik abbul cader (kayalpatnam )[13 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8021
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. தங்களின் இந்த புதிய முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. மாசா அல்லாஹ் இதன் மூலம் வீன் விதண்டா வாதங்கள் நடைபெறுவதை தவிர்த்திடலாம். மேலும் முன்புபோல் பிறப்பு இறப்பு, கல்யாணம் ஆகியவற்றை வெளியிடுவதும் நலமாயிருக்கும். வஸ்ஸலாம்.
17. Re:இணையதளத்தின் கருத்துக்கள்... posted byK S MUHAMED SHUAIB (Kayalpatinam)[13 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8029
தங்களது இணையதளத்தின் மாற்றம் வரவேற்கத்தக்கது. அதே சமயம் உங்களுக்கு வாசகன் என்ற முறையில் ஒரு சின்ன வேண்டுகோள் பிறர் மீது தவறான விமர்சனத்தை அனுமதிக்க மறுக்கும் அதே நிலையில் சூடான கருத்து பரிமாற்றத்தையும் ஆக்கபூர்வமான ஆரோக்கியமான விவாதங்களை தயவு செய்து அனுமதியுங்கள். அதற்க்கு ஊக்கமும் கொடுங்கள். இதன் மூலம் வாசகர்கள் தங்களது விவாதிக்குக்ம் திறனையும்;தங்கள் மனதிலுள்ள எண்ணங்களையும் துணிச்சலாகவும்; வெளிப்படையாகவும் எழுதும் நிலை ஏற்ப்படும். இது உங்கள் இணையதளத்திற்கு ஒரு புதிய முகவரியையும் கொடுக்கும். (இன்ஷா அல்லா)செய்வீர்கள் என எதிர் பார்க்கிறேன்.
18. Re:இணையதளத்தின் கருத்துக்கள்... posted byZainul Abdeen (Dubai)[13 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8040
NICE TO KNOW ABOUT THE CONSISTENT IMPROVEMENT ON YOUR SERVICES. IN THE SAME TIME I WOULD LIKE TO CONSIDER MY SUGGESTION ON DISPLAYING 5 RECENT COMMENTS INSTEAD OF DISPLAYING ONLY LAST COMMENT.
19. வளர உதவ தயாராக இருக்கிறோம்,, posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[14 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8143
இந்த இணையதள சேவையை முழு மனதார பாராட்டுவதோடு உங்களது பணியையும் மேன்மேலும் வளர உதவ தயாராக இருக்கிறோம் என்று வார்த்தையால் மட்டும் அல்ல உங்களுக்கு முழு ஒத்துழைப்பும் தர தயாராக இருக்கிறோம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross