Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:03 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7221
#KOTW7221
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 14, 2011
நகர்மன்ற தேர்தல் வழிகாட்டு அமைப்பு MEGA வின் ஆலோசகர்கள் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5110 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.

அதன் ஆலோசகர்களாக ஹாஜி பாளையம் முஹம்மத் ஹசன், ஹாஜி கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மத் ஆகியோர் தற்போது இணைந்துள்ளனர். இது குறித்த மெகா சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!

அன்பிற்கினிய காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

நகராட்சித்தேர்தலின் மூலம், நல்லதோர் நகர்மன்றம் அமைந்திடும் பொருட்டு,நகர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கப்பட்ட MEGA, பொதுமக்களின் மகத்தான ஆதரவோடு, தனது இலக்கை நோக்கிய பயணத்தில், இறையருளால் சீரான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு மென்மேலும் வலுசேர்க்கும் வகையில், சிங்கை காயல்நலமன்ற வழிகாட்டி, ஹாஜி. பாளையம் முஹம்மத் ஹசன் அவர்களும், மர்ஹூம் கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி பெயரில் இயங்கும் அறக்கட்டளையின் நிறுவனர், ஹாஜி கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மத் அவர்களும், MEGA வின் ஆலோசகர்களாக, பணியாற்ற இசைந்துள்ளார்கள் என்ற நற்செய்தியினை, காயல் நகர மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தங்களது பல்வேறு பணிகளுக்கிடையில், நகரமக்களின் நன்மைக்காக எங்களோடு இணைந்து பணியாற்ற சம்மதித்த,மதிப்பிற்குரிய சமூக ஆர்வலர்களை MEGA ஆரத்தழுவி வரவேற்கிறது.


தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித்தொடர்பாளர், MEGA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற தேர்தல் வழிகாட்ட...
posted by Mohamed Salih (Bangalore) [14 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8125

Masha allah..

Welcome to both great social worker..

we expecting your valuable suggestion for to make good and well established Our municipal association..

MEGA choose a good persons .

We sholud give them our support to them to make big history in our kayal.. insha allah..

Mr. Hassan Sir & Mr. K.V Habib kaka u dont worry we all are always with u to make success.. & achieved the target..

My best wishes to both once again...

With best regards,

Mohamed Salih..
Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கைகோருங்கள் அனைவர்களும்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [14 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8131

கைகோருங்கள் அனைவர்களும் ஊர் நலனுக்காக - வாழ்த்துக்கள்...

என்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற தேர்தல் வழிகாட்ட...
posted by M. Sajith (DUBAI) [14 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8132

தேர்தல் குறித்து இன்று நடக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும், மெகா'வின் ஏற்படுத்திய விழிப்புணர்வும் ஓர் முக்கியமான காரணம் என்பதை மறுக்க இயலாது.

ஒற்றுமையான ஓர் முடிவு வேண்டும் - இது காயலின் நலம் விரும்பும் அனைவரின் ஆசை.

மெகாவும் ஐக்கிய ஜமாத்து மற்றும் அனைத்து ஜமாத்துக்கள், இன்னும் இயக்கங்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டும் - இது நல்லவர் அனைவரின் துஆ..

செய்ய வேண்டியது இதுதான்..,

தேர்தல்க்காக எற்படுத்தப்பட்டுள்ள சக அமைப்புகளின் துனையோடு, அனைத்து ஜமாத்துடன் ஐக்கிய ஜமாத்துக்கும் அழைப்பு கொடுத்து ஒரு ஆலோசனை கூட்டத்தை மெகா கூட்டி கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

இதற்கு எல்லா ஜமாத்து பிரதிநிதிகளுக்கும் தங்களின் கருத்தை / பரிந்துரையை பதிய குறிப்பிட்ட கால அவகாசம் தர வேண்டும், போதிய நேரம் இல்லை என்றால் கூட்டத்தை அடுத்த நாளைக்கு நீட்டித்து அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து முடிவை அறிவிக்கட்டும்.

இது சாத்தியமா, மெகா செய்யுமா? கவுரவம் பார்க்காமல் நன்மைக்காக, இறைவனின் பொருத்ததிற்காக ஜமாத்து பெரியவர்கள் முன்வருவார்களா...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற தேர்தல் வழிகாட்ட...
posted by mackienoohuthambi (kayalpatnam) [14 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8136

அன்புள்ள சகோதரர்களே,

தேர்தல் நாள் நெருங்கிவருகிறது. ஆனால் நீங்கள் மெகா என்றும் ஒருங்கிணைப்பு கமிட்டி என்றும் ஐக்கிய பேரவை என்றும் மூன்று பிரிவாக செயல்படுவது ஊர் மக்கள் எல்லோருக்கும் குறிப்பாக என் போன்ற நடுநிலயாளர்களுக்கும் மன வருத்தத்தை தருகிறது.

ஒரு தலைமையின் கீழ் மூன்று துணை அலுவலகம் இருப்பது நல்லது. ஆனால் மூன்று தலைமையில் ஒரு ஊர் மக்கள் இருப்பது நல்ல ஆரோக்கியமான நகராட்சி அமைய வழி வகுக்காது என்பதை உணர்ந்து கருத்து வேறுபாடுகளை பேசித்தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இளைஞர்களால்தான் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதே இளைஞர்களால்தான் தீய சக்திகள் தலை தூக்கவும் முடியும். 'யா மவுஷரஷ்ஷபாப்' இளைஞர்களே என்றுதான் நபிகள் நாயகம் மக்களை நேர் வழியில் அழைத்தார்கள். அந்த இளைஞர்கள்தான் இஸ்லாத்தை நம் கையில் தந்த அருமை சஹாபாக்கள். எனவே முதியவர்கள் இளைஞர்களை அழைத்து பேசுங்கள். இதில் prestige பார்க்கவேண்டாம் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் எதிர்கால சந்ததிகளாக இருக்கட்டும் என்று நினைத்து இளைஞர்களுடன் சமரசம் செய்து இந்த தேர்தலை சந்திப்போம்.

இளைஞர்களும் prestige பார்க்காமல் முதியவர்களை சந்தித்து கருத்தொற்றுமை ஏற்படுத்தி களம் காணுங்கள். லாபம் சம்பாதிக்கும் தொழிலில் போட்டி இருக்கலாம் இது மக்களுக்கு உதவி செய்யும் சேவை. இதில் விட்டுக்கொடுப்பது மிக அவசியம். உங்கள் எல்லோரது உள்ளங்களையும் ஒருங்கிணைத்து வைத்து நமது நகரமன்ற உறுப்பினர்கள், தலைவர் எல்லோருமே ஏக மனதுடன் தேர்ந்தேடுக்கப்பட்டர்கள் என்ற நல்ல செய்தியை இந்த உலகுக்கு உரக்க சொல்வதற்கு அல்லாஹ் அருள்புர்வானாக.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கல்லை கண்டால் நாயை காணோம்...! நாயை கண்டால் கல்லை காணோம்....!
posted by zubair (riyadh) [14 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8156

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் உடன் பிறப்புகளே..... எல்லாவரும் ஒற்றுமை, ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு பல பிரிவுகளாக செயல் பட்டு..... என்னைப்போன்ற பல உள்ளம்களில் திகிலை தந்துக்கொண்டு இருக்கிறீர்கள். "மெகா" அமைப்பு இதற்க்கு என்ன முடிவெடுத்துள்ளது என்று வலைதளத்தில் தெறிவிப்பது பல உள்ளம்களுக்கு நிம்மதியை தரும். ஒற்றுமையை தேடியலைகின்ற நாம்.... ஒன்று படவேண்டிய நேரத்தில் வேற்றுமையில் இருப்பது..... "கல்லை கண்டால் நாயை காணோம்...! நாயை கண்டால் கல்லை காணோம்....!" என்ற பழ மொழிக்கு ஒப்பாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. One goal but too many groups!!
posted by Rayyan's Dad!! (USA) [15 September 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 8158

Congratulations to Habeeb machan & Hasan kaka. Good fit for the roles.

Everything is good...nice to see structured way of fucntioning by setting up temp office & as many reqd posts (incl.advisories...) even its all gonna until municipal election. Am pretty sure...lot of efforts put inplace & working hard.

Still the samething (as mentioned in comment #4) is hovering over in our mind. If we all travelling in the right direction & working for the same goal...not sure of the need of three teams...just for this municipal election. There is no doubt...our unity and relationship between elders & youngsters gone for a toss.

Let us try to bridge the gap between elders and youngsters by creating a platform to ineract and mutual understanding through give and take which will pave a way to stand and echo it on single voice as one team.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மனமிருந்தால் மார்க்கமுண்டு!
posted by MEGA (kayalpatnam) [15 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8173

அன்பார்ந்த சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

செயலாற்றக்கூடிய, ஊழலற்ற நகர்மன்றதினை உருவாக்கும் எண்ணத்தில் துவக்கப்பட்டதே MEGA . இதே நல்ல எண்ணத்தில் நகரில் பல அமைப்புகள் செயலாற்றி வருவது மிகவும் சந்தோசத்திற்கு உரிய விஷயம்.

அனைத்து அமைப்புகளும் ஒரே குறிக்கோளை மனதில் வைத்து செயல்படுகின்றன. அதில் ஒற்றுமை உள்ளது என்பது அனைவரும் காணக்கூடியது. இருப்பினும் - அந்த குறிக்கோளை எவ்வாறு அடைவது என்பதிலும் அனைத்து அமைப்புகளுக்கு இடையே ஒற்றுமை வந்தால் - MEGA இன்ஷா அல்லாஹ் ஒரே குடையின் கீழ் செயல்பட தயங்காது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

வரும் நகர்மன்ற தேர்தல் என்பது மூன்று தேர்தல்களை உள்ளடக்கியது. இதில் 18 வார்டு உறுப்பினர்களின் தேர்வில், ஏறத்தாழ அனைத்து அமைப்புகளும் ஒரே கருத்தில் உள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் துணைத்தலைவர் தேர்வு விசயத்தில் பிற அமைப்புகளின் நிலைப்பாடு தெரியவில்லை.

அதுபோல தலைவர் தேர்வு விசயத்தில் - காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக வெளியிடப்பட்டுள்ள திட்டத்தில் (தேர்தல் குழுவில் ஐக்கிய பேரவை தேர்ந்தெடுக்கும் 25 பேருக்கு பிரதிநிதித்துவம் மற்றும் , பொது சங்கங்கள் என்பதற்கான வரைமுறை/அளவுகோள்) MEGA விற்கு உடன்பாடு இல்லை. இது ஐக்கிய பேரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்திட்டத்தினை மறு பரிசீலனை செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

துணைத்தலைவர் மற்றும் தலைவர் தேர்வு விசயத்தில் - சிறந்த முறையினை ஒருவேளை ஐக்கியப் பேரவை அறிவிக்கும் பட்சத்தில், அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் MEGA விற்கு எந்தத் தயக்கமும் இல்லை.

கவிமகன் காதர்
செய்தித் தொடர்பாளர்-----MEGA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved