அரசு கேபிள் என்ற நிறுவனத்தை தமிழக அரசு, சென்னை தவிர்த்து - மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் - தொலைகாட்சி அலைவரிசைகள் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் - கேபிள் மூலம் விநியோகிக்கப்படும் உள்ளூர் தொலைகாட்சி அலைவரிசைகள், சேவைகளை தொடர, அரசிடம் பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக - வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 9) முதல் காயல்பட்டினத்தின் பிரத்தியேக தொலைகாட்சி அலைவரிசைகளான - ஐ.ஐ.எம். டிவி, முஹித்தீன் டிவி, ஐ.டிவி., எஸ்.டிவி, மீடியா டிவி ஆகியவை தங்கள் சேவையை நிறுத்தி உள்ளன. மீண்டும் சேவைகள் துவக்கப்படும் நாள் அறிவிக்கப்படவில்லை.
இதற்க்கிடையில் முஹித்தீன் டிவி, 24 மணி நேர ஒளிபரப்பை - தனது இணையதளம் - www.muhieddeentv.com - மூலம் தொடருகிறது என அதன் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.W. ஹாமித் ரிஃபாய் |