எதிர்வரும் காயல்பட்டின நகர்மன்ற தேர்தல் குறித்து கத்தார் காயல் நலமான்றம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:-
அன்புடையீர் ! அஸ்ஸலாமுஅலைக்கும்!
எமது கத்தர் காயல் நலமன்றத்தின் 42 வது செயற்குழு, தோஹா மன்சூராவில் அமைந்துள்ள காயல் நண்பர்கள் இல்லத்தில் வைத்து, செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் அருளால் நடந்து முடிந்தது. மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் செய்யத் மீரான்
அவர்கள் கிராஅத் ஓதி துவக்கிவைக்க,ஜனாப் சோனா முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் தலைமையேற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1) நகராட்சித் தேர்தல் வழிகாட்டும் குழுவான MEGA வின் தன்னலமற்ற பணியை,இந்த செயற்குழு பாராட்டுகிறது. நல்லதோர் நகர் மன்றம் காணும் அவர்களது முயற்சிகள் வெற்றிபெற கத்தர் காயல்நல மன்றம்,தனது தார்மீக ஆதரவை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது
2) நகரில் துணைமின் நிலையம் அமைய,மின்சார வாரியத்திற்கு நிலம் ஏற்பாடு செய்து கொடுத்த,ஐக்கியப்பேரவையை செயற்குழு நன்றியுடன் பாராட்டுகிறது
3) நகராட்சித் தேர்தலை முன்னிட்டு,அண்மையில் நடந்து முடிந்த ஐக்கியப்பேரவையின் கலந்தாலாசோனைக் கூட்டத்தின் ,ஜமாஅத் மூலமாக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பேரவையின் தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்திருப்பது, வரவேற்கத்தக்கதாகும்
4) ஜமாஅத மற்றும் சமூக அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளையில், 25 தனிநபர்களை தேர்ந்தெடுத்து முக்கியத்துவம் வழங்கும் தீர்மானம் ஏற்கத்தக்கதல்ல என்று எமது செயற்குழு கருதுகிறது. மாற்றாக பேரவையின் நிர்வாகிகள் ஐந்து பெறும் அவர்களுடன் MEGAவின் ஐந்து நிர்வாகிகளை இணைத்து,தேர்தல் கண்காணிப்புக்குழு ஒன்றை ஏற்படுத்தி, நகர் மன்றத் தலைவர்,நகர மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு தேர்வு செய்யப்பட, பேரவை வழிகாட்ட வேண்டும். அது மட்டுமல்லாமல், தேர்தல் காலத்தில் மட்டுமன்றி, எல்லாக் காலத்திலும் பேரவை துடிப்போடு செயல்பட வேண்டும் என்ற எமது விருப்பத்தையும், இந்தத் தீர்மானத்தில் எமது செயற்குழு பதிவு செய்கிறது
5) நகரின் கண்ணியம், கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட கத்தர் காயல் நலமன்றம் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தவிருக்கிறது. அதன் முதற்கட்டமாக, கடற்கரை பயனாளிகள் சங்கத்துடன் கலந்தாலோசித்து,நல்லபல திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவது என்று இந்த செயற்குழு தீர்மானிக்கிறது
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபின், துணைத் தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் துஆ ஓத, செயற் குழுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தகவல்:
முஹம்மது யூனுஸ்,
துணைத்தலைவர், கத்தார் காயல் நல மன்றம்.
|