105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:4 تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
ஸூரா 104
பயன்படுத்து ம் நாம் அதன் பலாபலன்களை ஸஹீஹ் புகாரி ஹதீஸஸில் இன்னும் வேறு ஹதீதுகளிலும் தேடுங்கள் இன்னும்குர்ஆனிலும் தேடுங்கள்.அப்போது வலிமார்களின் விருப்பம் எப்படி இருக்கும் என்பதை அறியலாம். நவூது பில்லாஹி மின்ஹா!!!
2. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய... posted bymskaja mahlari. (singapore.)[10 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7865
இந்த யானை நமதூரில் எந்த பள்ளியை இடிக்க வந்தது? மேலே கூறப்பட்ட சூராவுக்கும்,இந்த யானை தொடர்ப்பான செய்திக்கும், என்ன தொடர்ப்பு? சொல்ல வந்தவர் எதனை தொடர்ப்பு படுத்தி ,எதை மறைமுகமாக சொல்ல வருகிறார் என்பதனை எப்படி அறிந்து கொள்ள முடியும்? தலை சுற்றுகிறது?
3. யானை வரும் முன்னே! கருத்தோலை வரும் பின்னே....!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.)[10 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7879
சகோதரர் தைக்கா ரஹ்மதுல்லாஹ் அவர்களின் கருத்து செய்தியைத் தழுவியே தான் இருந்தது,யானை என்றதும் அன்று, அல்லாஹ் அதைப் பயன்படுத்திய விதத்தையும்,இன்று நாம் புனித மஹான்களின் பெயரால் செய்து கொண்டிருக்கும் வீணான அனாச்சாரங்களையும் மனதில் கொண்டுதான் பரிசுத்தக் குர்ஆனின் சத்திய வசனங்களை மேற்கோள் காட்டி,மேலும் ஹதீஸ்களிலும்,அப்புனித மஹான்களின் உண்மயான விருப்பத்தை தேடிப் பார்க்கச் சொல்லியிருக்கின்றார்.இதில் என்ன தலைசுற்றுவதற்கு இருக்கு?
குறும்பு:
யானையின் நெற்றியில் அல்லாஹ் என போடப் பட்டிருக்கின்றதே? நம்ம ஊரு தாண்டி அடுத்த ஊருக்கு போனா யானைக்கு மதம் பிடிக்குதோ?இல்லையோ?கண்டிப்பாக யானை மதம் மாறிவிடும்!!!!
4. மகிழ்ச்சி!. posted bykavimagan (dubai)[10 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7889
மச்சான் ரபீக்! யான பூனையை விடும்.எங்க ஓய் ஆளையேக்
காணோம்? எது எப்படியோ?நீண்ட இடைவெளிக்குப்பின் உமது
கருத்துக்களை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! தொடர்ந்து
எழுதும் ஓய்! எங்கள மாதிரி உள்ள உம்ம ரசிகர்களை
குஷிப்படுத்தும்! உமக்காக துஆ செய்கிறேன்.மாஸலாமா!
5. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய... posted byFasi Ismail (Jiangmen, China)[10 September 2011] IP: 27.*.*.* China | Comment Reference Number: 7901
Assalaamu Alaikkum,
உண்மையில் நான் சொல்ல வந்ததைத்தான் சகோதரர் Kaja Mahlari தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம். பேராசை பிடித்த அப்பிரஹான் தன்னுடைய யானை படைகளை கொண்டு கஹ்பத்துல்லாவை இடிக்க வரும்போது அல்லாஹ் தன் சக்தியைய் கொண்டு அபாபில் என்ற பறவையின் மூலம் சுடப்பட்ட கற்களைக் கொண்டு யானை படைகளை அளித்தான் என்பது நமக்கு தெரிந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்துக்கும் மேலே கொடுக்கப்பட்ட கட்டுரைக்கும் எந்த பொருத்தமும் இல்லை என்பதே என்னுடைய கருத்து.
சகோதரர் Rafeeq தன்னுடைய கருத்தில் முதல் பாதியில் மஹான்கலை வைத்து இக்கட்டுரைக்கு முடிச்சு போடுகிறார் நன்றாக படிக்கவும் உள்ளாட்சி தேர்தலைப் பற்றித்தான் இத் தலைப்பு உள்ளதே தவிர மஹான்கலை பற்றி அல்ல.
மேலும் பின் பாதியில் குறும்பு என்ற தலைப்பில் யானைக்கு மதம் பிடிக்குதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக மதம் மாறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். சகோதரர் உடைய்ய கருத்தை பார்கும்போது அப்படியே குர்ஹானுக்கு நேர் மாறாக உள்ளது என்பது எனக்கு தெரிகிறது.
அல்லாஹ் தன் திருமறையில் 17;44 ல்
ஏழு வானங்களும், பூமியும், இன்னும் அவற்றில் உள்ளவையும் அவனைத் துதி செய்கின்றன; இன்னும் அவனுடைய புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
இவ்வசனத்தை பார்க்கும் போது முஹ்மின் அல்லாத மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன. என்பதே இதில் உணர்த்துகிறது
Administrator: Comment modified on writer's request
6. யானைக்கும் அடி சருக்கும்! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.)[11 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7908
கருத்து என்பது அவரவர் மனதில் தோன்றும் தனிப்பட்ட விஷயம் அதைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும் ஓர் பாத்திரம் தான் இந்த வலைதளம்.இதில் முடிச்சு போடுவதற்கோ,முனைவதற்கோ துளிக்கூட எண்ணமில்லை!புரிந்து கொள்ளும் விதத்தில் தான் மாறுபடுகின்றோமேத் தவிர மற்றபடி யார் மனதையும் புண் படுத்தும் நோக்கமுமில்லை!குறும்புக்கும்,குர்ஆனுக்கும் தொடர்பு படுத்துவது சரியாகப் படவில்லை!இதையே ஓர் விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
கவிமகனே! நான் விடுமுறையில் ஊர் சென்று, தற்போதுதான் மக்கா திரும்பியுள்ளேன்.உங்கள் துஆவுக்கு நன்றி!இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்.
7. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய... posted byFasi Ismail (Jiangmen, China)[11 September 2011] IP: 27.*.*.* China | Comment Reference Number: 7911
Dear Administrator அவர்களுக்கு,
Assalamu Alaikkum,
Fasi ismail என்ற பெயரில் என்னுடைய கருத்து கடைசி வரியில் "முஹ்மினான மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன. என்பதே இதில் உணர்த்துகிறது" மிக தவறாக கருத்து தெரிவித்ததற்கு மனிதன் என்ற முறையில் என்னை மன்னிக்கவும் மாறாக
முஹ்மின் அல்லாத மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன. என்பதே இதில் உணர்த்துகிறது" என்ற வாசகம்தான் நான் எழுதிய கருத்துக்கு பொருத்தாகமாக இருக்கும் தயவு செய்து என்னுடைய கருத்தை Edit பன்னுமாறு மிக தாழ்மையுடன் தெரிவித்துகொல்கிரேன்.
8. Re பாசி இஸ்மாயிலின் கமெண்ட்- திருத்தம் posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[11 September 2011] IP: 218.*.*.* China | Comment Reference Number: 7912
பாசி இஸ்மாயிலின் கருத்தில் சிறு திருத்தம்.
இவ்வசனத்தை பார்க்கும் போது முஹ்மினான மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன.
9. நாமும் யானை பசிக்கு சோள பொரி தான் போட்டுள்ளோம் posted byஅன்புடன்.சட்னி .செய்யது மீரான். (காயல்பட்டினம் )[11 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7914
அஸ்ஸலாமு அலைக்கும்..
இந்த யானை நம் ஊருக்கு எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை .
இதனை நம்மவர்கள் யாரும் அழைத்து வரவில்லை.
யானைக்கு சொந்தக்காரர் நாம் யாவரும் மகிழ்ச்சியாக
பெருநாள் கொண்டாடி ஒருவொருக்கு ஒருவர் அன்பை பரிமாறி
நம் இளவல்களுக்கு பெருநாள் காசு கொடுத்ததும்,நமக்கு
தெரிந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால்
இயன்றது கொடுத்தும் கொள்வது அறிந்தவரான அவர்
யானையை அழைத்து வந்து காசு வாங்க வந்துள்ளார்.
(நாமும் யானை பசிக்கு சோள பொரி தான் போட்டுள்ளோம் )
எல்லோரும் இப்பொழுது வேறு ஒரு தலைப்பில் சென்று கொண்டு இருப்பதால் நம்மில் அனைவருக்கும் சிறு மாற்றத்தை
ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கவே இந்த செய்தி என அறிவோமாக.
குத்துக்கல்தெரு,மொஹியதீன் பள்ளிக்கு அருகில்
யானை நகர் வளம் வந்த இடத்தில் எனக்கும்,நம் மக்களுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடே இது.(இதனை படம் பிடித்தவன் அடியேன் என்பது இதன் மூலம் விளங்கலாம்)
அன்பு நண்பர் ரபீக் உங்கள் வாசகனில் நானும் ஒருவன்.
உங்களின் வருகை எங்களுக்குகோடைமழை.
கவிமகன்,அப்துல் காதர் உடன் இணைந்து யாவரும்
அன்புடன் வரவேற்கின்றோம்.
11. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய... posted byAbdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam)[11 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7927
யானைப் பாகன் நம்ம ஊருக்கு வரும்போது "அல்லாஹ்" என்று எழுதுவான். அதே யானை திருசெந்தூர் செல்லும்போது "ஓம்". என்று எழுதுவான். பிழைக்கத்தெரிந்தவன்.
யானையை பற்றி சிலர் மார்க்க சாயத்துடன் கருத்துக்ககளை பதிவு செய்துள்ளார்கள், சிலர் அதன் அர்த்தம் புரியாமல் குழம்பி இருக்கிறார்கள். சிலர் அதற்க்கு மாற்று கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள். அந்த சர்ச்சைக்குள் செல்லாமல் நான் என் கருத்தை (Prevention is better than cure என்ற அடிப்படையில்) பதிவு செய்ய விரும்புகிறேன்.
மிருகங்களிலேயே மிகவும் கருணைகொண்ட மிருகங்களில் யானையும் ஒன்று. அனால் அதற்க்கு மதம் பிடிக்கும்போது அதைவிட மோசமான மிருகத்தை நாம் காண முடியாது. அதற்க்கு எப்பொழுது மதம் பிடிக்கும் என்பதை அதன் பாகன் கூட அறியமுடியாது .
கடந்த காலங்களில் பல மோசமான சம்பவங்கள் நடந்ததை
( பல உயிர்கள் பலியானதை) தொலைக்காட்சிகளில் காணாதவர்கள் இருக்க முடியாது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நடக்கும் சம்பவம். அது போக யானையின் கழிவுகள் பல நாட்கள் நம் தெருக்களில் சுத்தபடுத்தப்படாமல் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.
இந்நிலையில் அதனை ஊருக்குள் வருவதை encourage பண்ணக்கூடாது.
12. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய... posted byZainul Abdeen (zain_msec@yahoo.com)[11 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7928
சரி Ok ......
யானையை அல்லாஹ் இப்படி பயன்படுத்தி இருகின்றான் என்றும், அதனால் வலிமார்களின் கந்தூரிகளில் யானையை பயன்படுத்துதல் தகாதது என்றும் சிலர் கூறிவருகின்றனர். அப்போ அபாபீல் போலே ஏதேனும் பறவை இப்போது இருகிறதா ??? , அதை பற்றி அவர்கள் தகவல் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே.......
Administrator: This news was posted in a lighter vein. Please do not encourage religious discourse on the issue
13. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய... posted byZainul Abdeen (zain_msec@yahoo.com)[11 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7934
யப்பா விடுங்கப்பா ..
யானை தெரியமே நம்ம ஊருக்கு வந்துட்டு . அதுக்போய் இவ்வளவு பெரிய பட்டிமன்றமா ????
நம்ம ஊருக்கு இப்படி ஒரு இணையதளம் இருகின்றது என்று அந்த பாகனுக்கு தெரிந்த்ரிந்தால் அவர் வந்தே இருக்க மாட்டரு....
14. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATNIAM)[11 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7942
தயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். யானையை பற்றிய உங்கள் எல்லோரது கருத்துக்களும் மிகவும் சரி. "யானையை பார்த்த குருடர்கள் கதை"ஏன் உங்களிலஎவருக்கும் நினைவுக்கு வரவில்லை...?ஏனோ எனக்கு அது இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அது மட்டுமல்ல நண்பர்களே "யானை" சின்னம் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் தேர்தல் சின்னமும் கூட. அதில் நின்று வெற்றி பெற்றவர்தான் தற்போதைய அதிபர் ஒபாமா இங்கு அதில் யார் நின்று வெற்றி பெற்றாலும் யானை பூனை ஆக மாறாமல் இருந்தால் சரி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross