இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) துணைத்தலைவரும், பிரபல மாணிக்க வணிகருமான - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.யு.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற டில்லி முஹ்யித்தீன் ஹாஜியார் இன்று காலை 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 64.
19.09.2011 அன்று திடீரென சுகவீனமுற்ற அவர் திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்குப் பிறகும் பலனின்றி, இன்று காலையில் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.
காயல்பட்டினம் நகரின் புகழ்பெற்ற மாணிக்க வணிகரான அவர், இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) துணைத்தலைவராகப் பொறுப்பேற்று நகர்நலச் சேவைகளாற்றிய இவர், காயல்பட்டினத்திலும், இலங்கையிலும் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நற்பணிகளுக்காக தனிப்பட்ட முறையில் தாராள நன்கொடைகளை வாரி வழங்கியவர்.
அவருக்கு ஹாஜ்ஜா மர்யம் என்ற மனைவியும், ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாஜி எம்.எம்.முஹம்மத் இப்ராகிம் என்ற முஹம்மத், ஹாஜி எம்.எம்.பிலால் ஆகிய மூன்று ஆண் மக்களும், ஹாஜ்ஜா ஹஸீனா, ஹாஜ்ஜா ஷிஃபா, ஹாஜ்ஜா ஆயிஷா உம்மா, ஹாஜ்ஜா ஃபிர்தவ்ஸிய்யா ஆகிய நான்கு பெண் மக்களும் உள்ளனர்.
ஜனாஸா நல்லடக்கம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியில் இன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
1. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byஎன்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை)[21 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 8538
வருந்துகிறேன் .. இறைஞ்சுகிறேன்..
கடந்த பத்துதினங்கள் முன்புவரை புனித மக்காவில் உம்ரா பயணத்தில் அல்ஃபத்தாஹ் உம்ரா குழுவில் எங்களுடன் ஒன்றாக இருந்து மிக நெருக்கமாக அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது மகிழ்வை தந்தது. இன்று அவர்களின் மரண செய்தியறிந்து மனம் ஆற்றொண்ணா சோகத்தில் மூழ்கிறது. “இதுதான் துன்யா“ என்பதை உள்ளம் மேலும் உறுதி செய்கிறது.எல்லாம் அவன் செயல் என்பதால் நாம் பொறுமையை பேண வேண்டியவர்கள்தான்..இல்லையா.
தர்மக்குணம் கொண்ட - நளினமாக பேசும் நல்ல பண்புள்ள சகோதரரான முஹ்யித்தீன் ஹாஜியார் அவர்களை இழந்து நிற்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர் யாவர்க்கும் அல்லாஹ் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. மர்ஹூம் அவர்களின் மண்ணறை வாழ்வையும் - மறுமை வாழ்வையும் சுவனபதி வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக என துஆ செய்கிறேன். அல்லாஹ் அங்கீகரிப்பானாக .. ஆமீன்
2. சிறந்த மனிதர்!... posted bykavimagan.m.s.abdul kader (dubai)[21 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8539
இரக்க சிந்தனையும்,ஈகைக் குணமும் உடைய ஹாஜியார்
அவர்கள்,எனது தந்தை மறைந்த மர்ஹூம்.எஸ்.கே.எம்.
சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களது,தலை சிறந்த நண்பரும்
ஆவார்கள்.
அன்னாரது மறைவு அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல!
நமது நகருக்கே பேரிழப்பாகும்.எல்லாம் வல்ல இறைவன்,
அவர்களது பிழைகளைப் பொறுத்து,அன்னாருக்கு மேலான
சுவனப்பதியை நல்கிட, பிரார்த்திக்கும் இதயங்களுடன்
என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره حفرة من حفر النيران .வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சகல பாவங்களையும், பொறுத்தருளி ,அவர்களின் கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி அருள்வானாக ! அன்னாரின் குடும்பத்தார்களுக்கு சப்ரையும்,நற்கூலியையும் வழங்குவானாக ! அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், நற்சலாமினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
6. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8543
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத்தை அடையச் செய்தருள்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.
8. இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted bysalih (Bangkok)[21 September 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8545
இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹூன்.
D M ஹாஜியார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஹாஜியார் அவர்கள் விழுப்புரத்தில் தொழில் செய்யும் காலத்தில் எனது வாப்பா
S . M .S .முஹம்மது ஹஸன் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய கூட்டாளி ஆவார்கள்.
9. நல்ல சீதேவியான மனிதர், இரக்க சிந்தனையும்,ஈகைக் குணமும் உடையவர்....... posted byA.W.Md Abdul Cader (Mumbai)[21 September 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 8546
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
டெல்லி முஹ்யித்தீன் ஹாஜியார் அவர்கள் நல்ல பண்பானவர்,சமூக சேவகர், சிறியவர்கள் மீது அளவுக் கடந்த பாசத்தை காட்டுபவர்,
என்னை எங்கு கண்டாலும் தம்பி சுகமாக இருக்கின்றாயா? பாண்டிச்சேரிக்கு ஜமாஅத் போவாமா!!! என்பார்கள்.. ஏனெனில் 2005ம் ஆண்டு அவர்களுடன் சென்றேன் நல்ல சீதேவியான மனிதர், இரக்க சிந்தனையும்,ஈகைக் குணமும் உடையவர் இன்று அவர்களின் மரண செய்தியறிந்து மனம் ஆற்றொண்ணா சோகத்தில் மூழ்கிறது. “இதுதான் துன்யா“ என்பதை உள்ளம் மேலும் உறுதி செய்கிறது.
அன்னாரது மறைவு அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல! நமது நகருக்கே பேரிழப்பாகும்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சகல பாவங்களையும், பொறுத்தருளி ,அவர்களின் கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி அருள்வானாக ! ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தார்களுக்கு சப்ரையும்,நற்கூலியையும் வழங்குவானாக ! அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், நற்சலாமினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
11. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byMohamed Salih (Bangalore)[21 September 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 8548
இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹூன்.
அன்னாரின் பிழைகளை பொறுத்து அல்லாஹ் அவர்களுக்கு சுவனபதியை வழங்குபவனாக!!! ஆமீன்.
அவர்ருடைய இளைய மகன் பிலால் என்னது ஸ்கூல் நண்பன் நான் ஸ்கூல் படிக்கும் போது ஹாஜியார் வீட்டில் அதிக நாட்கள் என்னுடைய இளமை பருவம் கழிந்து இருக்கிறது .. அவர்கள் வீட்டில் அனைவரும் காட்டும் அன்பு இன்னும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது ...
அவர்கள் எல்லோருடனும் மரியாதையாக நடந்து கொள்வார்கள் ..
எல்லாம் வல்ல இறைவன் அவர்ஹளுக்கு சுவனபதியை கொடுப்பானாக ஆமீன் ....
12. Re:இலங்கை கா.ந.மன்ற (காgவாலங்... posted byZmd Abdul Kader (Abu Dhabi (UAE))[21 September 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8549
salam.
convay my regards and salam to my friend bilal and his family members.insha allah ,Allah will give junnath and accept all good thinks to hajiyar.
17. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byMohamed Ibrahim (Dubai)[21 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8554
18. நல்ல சீதேவியான மனிதர். posted byKADER SHAMUNA (SHENZHEN - CHINA)[21 September 2011] IP: 116.*.*.* China | Comment Reference Number: 8556
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
டெல்லி முஹ்யித்தீன் ஹாஜியார் அவர்கள் நல்ல பண்பானவர்,சமூக சேவகர், சிறியவர்கள் மீது அளவுக் கடந்த பாசத்தை காட்டுபவர், இலங்கை நான் அவர்களோடு
சிறிது மாதம் தங்கியது என்னால் மறக்க முடியாட
நினைவுகள்.
என்னை எங்கு கண்டாலும் தம்பி சுகமாக இருக்கின்றாயா? நல்ல சீதேவியான மனிதர். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சகல பாவங்களையும், பொறுத்தருளி ,அவர்களின் கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி அருள்வானாக ! ஆமீன்.
20. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byshaik abbul cader (Kayalpatnam)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8558
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his sins and accept his good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.
அன்னாரின் பிழைகளை பொறுத்து அல்லாஹ் அவர்களுக்கு சுவனபதியை வழங்குபவனாக. ஆமீன். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் & உறவினர்களுக்கு எனது சாலதினை தெரிவிப்பதுடன், சபூர் செய்யும் படி கேட்டு கொள்கிரேன்.
22. அனைவராலும் விரும்பப்பட்டவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8563
பெருமதிப்பிற்கும், பேரன்பிற்குமுரிய DM மாமா அவர்களை நான் என் வாழ்நாளில் கோப முகத்தோடு ஒரு வினாடி கூட பார்த்ததில்லை... அவர்களின் அழகான புன்சிரிப்புடன் கூடிய முகத்தை ஒரு வினாடி கூட பார்க்கத் தவறியதுமில்லை.
அன்பே உருவான அவரது அரவணைப்பு அனைவரையும் வியப்பிலாழ்த்தும் அரிய பண்பாகும். இந்த அவசர உலகத்திலும் இவர்களைப் போன்ற கண்ணியவான்கள் வெகு சிலரே இறையருளால் இக்குணத்தைக் கொண்டுள்ளனர்.
நல்லவற்றுக்கு அள்ளியள்ளி கொடுப்பவர்...
தனது மாணிக்க வணிகத்தில், அனைத்து வணிகர்களிடையேயும் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெற்றிருந்தவர்...
நேர்மை, நாணயம் என்பதை மக்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுமளவுக்கு வாழ்ந்து காட்டியவர்...
விலை மதிக்கவியலாத மாணிக்கக் கல்லை, அதன் உண்மையான தரத்தை அறிந்திடும் பொருட்டு இவரை நாடியே அனைவரும் கொண்டு வந்து காட்டுவர். அவ்வாறு யார் கொண்டு வந்தாலும், அப்பொருள் எப்படியாவது தன்னிடத்தில் வந்து சேர வேண்டும் என்ற - வியாபாரிகளின் பொதுவான எண்ணங்களுக்கு (விதிவிலக்கானவர்களும் உண்டு!) அப்பாற்பட்டு, அந்த உயர்விலை கொண்ட கல்லின் உண்மையான தரத்தை உரியவரிடம் மனந்திறந்து சொல்லி, பிறர் சம்பாதிப்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர்...
எல்லா ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும் என்ற இறை நியதி இவர்களுக்கும் பொருந்தத்தானே செய்யும்...? தாங்க முடியாதுதான்... ஆனால் தாங்கித்தானே ஆக வேண்டும்...?
அவர்களின் அன்பு மக்களான என் நெஞ்சில் நிறைந்த உவைஸ் காக்கா, நண்பன் முஹம்மத், நண்பன் பிலால் உள்ளிட்டோருக்கும், நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் மர்ஹூம் அவர்களின் அன்பு மருமகனார் ஷேக் அலீ ஹாஜியார் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
கிருபையுள்ள ரஹ்மான், மர்ஹூம் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை அவனது வற்றாத கருணையால் பொறுத்தருளி, அவர்களின் சிறியது முதல் பெரியது வரையிலான அனைதது நற்காரியங்களையும் கபூல் செய்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்களோடு அண்டியிருக்கும் பாக்கியத்தை அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களை நேசிக்கும் நம் யாவருக்கும் தந்தருள்வானாக... ஆமீன்.
கண்ணீருடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
எஸ்.கே.குடும்பத்தினர்
23. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byY.M. சாலிஹ் (மக்கா)[21 September 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8565
இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சகல பிழைகளை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத்தை அடையச் செய்தருள்வானாக ஆமீன்
அன்னாரின் குடும்பத்தார்களுக்கு சப்ரையும்,நற்கூலியையும் வழங்குவானாக ! அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும்
24. ஒரு சிறந்த மனிதரை இழந்திருக்கிறோம் posted byMauroof (Dubai)[21 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8566
மர்ஹூம் அவர்கள் எனது தந்தை மக்கி நூஹுத்தம்பியின் பால்ய சிநேகிதர். எழில் கொஞ்சும் இலங்கை கண்டி நகரத்தில் அமையப்பெற்றுள்ள St . Paul 's கல்லூரியில் இவர்களிருவரும் ஆங்கிலக்கல்வி பயின்றவர்கள். மர்ஹூம் கண்டி ஹாமித் ஆலிம் (ஹாமித் பக்ரி ஆலிம் அவர்களின் அப்பா) அவர்களிடம் இவர்களிருவரும் குர்ஆன் தர்ஜுமா ஓதியவர்கள். மாணிக்க வியாபாரத்தில் இவர்களிருவரும் நெருக்கமானவர்கள்.
எனது தந்தையின் தந்தை மர்ஹூம் மக்கி ஆலிம் & குடும்பத்தார் மீது தனி பிரியம் வைத்திருந்தவர்கள். விளம்பர வட்டத்திற்குள் வர விரும்பாது தேவையுடையோரின் தேவைக்கேற்ப வாரி வழங்கிய வள்ளல் பெருமகன். இன்முகத்துடன் வரவேற்று புன்னகை புரிந்து கோபத்துடனும் வேகத்துடனும் வரக்கூடியவர்களையும் கூட தன் வசம் ஈர்த்தவர்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் மர்ஹூம் அவர்கள் ஒரு மாணிக்கமாக மரகதமாக வைடூரியமாக வைரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது பிழைகளை மன்னித்து அவர்களது நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்று அவர்களது மண்ணறையை சுவனத்து பூங்காவாக ஆக்கி வைத்து மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியில் குடியிருக்கச் செய்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களை இழந்திருக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் இத்துயரத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க நல்ல மன உறுதியை தருவானாக.
25. இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.)[21 September 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8568
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ....இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக ஆமீன். நண்பர் உவைசுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எனது சலாம்...அஸ்ஸலாமு அழைக்கும்.
28. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted bySUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.)[21 September 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8573
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.." வல்ல அல்லாஹ் அவர்களின் கப்ரை ஒழி & விசால மாக ஆக்கி அருள் புரிவனாக..."ஆமீன்..." சுமார் இருபத்திஐந்து வருடத்திற்கு முன்பு மிஹச்சிறிய வயதில் கல்மடி கொண்டு கொடுத்து வந்தோம், எனது நண்பருடன் என்பது நினைப்பு உள்ளது. என்டீ. மாமா சொன்னது போன்று இதுதான் துன்யா என்பதில் நோ டவுட்!!!!
மேலும் ஹாஜியார் அவர்களின் பாவப் பிளைஹளைப் பொருத்து அழஹிய சுவனப் பூங்காவில் இடம் கிடைக்க எல்லோர்ஹளும் இறைஞ்சுவோம் வல்லோனிடம். ஆமீன்!!!
ஆழ்ந்த அனுதாபத்துடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். ஹெச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
29. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted bySirajudeen (Holy Makkah)[21 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8575
அஸ்ஸலாமு அழைக்கும். சற்று தினங்களுக்கு முன்புதான் புனித மக்கா ஹரம்ஷரிபில் சந்தித்துப் பேசினேன். வபாத்து செய்தி அறிந்து கவலை.
நல்ல குணமுள்ளவர், நல்ல சுருசுருப்பானவர், எல்லோருடனும் அன்பு சிரித்த முகத்துடன் பலககுடியவர். அல்லாஹ் அவர்களுடைய பாவபிளைகளை பொறுத்து கபுரை வெளிச்சமாக்குவானாக. ஆமீன்
அன்னாரின் குடும்பத்தார் அனைவரும் சபூர் செய்துகொள்ளுங்கள். அனைவருகளுக்கும் என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும்.
31. நிறந்தர வாழ்வை தேடி ......... posted byK M SHAFEER ALI (CHENNAI)[21 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 8579
அஸ்ஸலாமு அழைக்கும்
ஹாஜி டெல்லி மொய்தீன் அவர்களின் மரண செய்தி (இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜிஊன்) கேட்டு மிகவும் கவலையும்,வேதனையும் அடைந்தேன்.
வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரோடும் பரஸ்பரம் அன்போடும், பார்க்கும் போதெல்லாம் சாலாதிற்க்கு முந்திகொண்டு சிரித்த முகத்தோடு இருக்கும் அந்த முகம் இன்னும் என் கண் முன்னாள் நிற்கிறது.
மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து அவர்களின் கபூரை அவர்களுக்கு அமைதி தரும் இடமாகவும்,அவர்களின் கேள்வி கணக்கை இலேசாகவும்,ஆக்கி நாளை மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான பதவியை அளிப்பானாக ஆமீன்
சகோ உவைஸ் ,முஹம்மது, பிலால்,அவர்களே ! உங்கள் தகப்பனார் மரணம் உங்களுக்கு பேரிழப்பு என்பது அறிந்ததே அல்லாஹ்வின் கட்டளைகிணங்க நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் பொறுமையை மேற்கொள்ளுங்கள் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் என் மற்றும் என் குடும்பத்தார்களின் சலாம் ""ÄSSALAAMU ALAIKUM"" வல்ல அல்லாஹ் உங்களுக்கு பொறுமையை தந்து அருள் புரிவானாக அமீன்
எங்களது மாமா வின் இந்த செய்தியை பார்த்து ஒன்றும் ஓட வில்லை ,
வல்ல RABBUL ஆலமீன் அவர்களுடைய பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌசில் idam கொடுத்து அருள்வானாக (ஆமீன்)
நாங்கள் இங்கு சபூர் செய்து கொண்டோம் , இதை போன்று
எங்களது மச்சான் மார்கள் , உவைசு , மம்மது ,பிலால் , மற்றும் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளுங்கள் ,
அவர்களுடைய ஹக்கில் நாம் எல்லோரும் துவ செய் oommaga
இப்படிக்கு
Seyed Mohamed ( Sayna) And Kudumbathaargal
Thai Nadu Tours & Travels
Bangkok -Thailand
37. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted bymackie noohuthambi (kayalpatnam)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8593
எனது இதயம் நிறைந்த நண்பர். கண்டியில் நாங்கள் இருவரும் St pauls கல்லூரியில் ஆங்கிலம் பயின்றோம். ஹாமித் பக்ரி ஆலிம் அவர்களின் அப்பா கண்டி ஹாமித் ஆலிம் அவர்களிடம் குர்ஆன் தர்ஜுமா ஓதினோம்.
மாணிக்க வியாபாரத்திலும் தப்லீக் ஜமாஅத் பணியிலும் அவர்களுடன் இனைந்து இருந்தோம்.எங்கள் தந்தை மக்கி ஆலிம் அவர்கள் மீதும் எங்க குடும்பத்தவர்கள் மீதும் தனி பிரியம் வைத்திருந்தவர்கள். விளம்பர வெளிச்சத்துக்குள் வராமல் அவரவர் தேவைக்கு ஏற்ப வாரி வழங்கிய வள்ளல் பெருமகனார்.
பள்ளிவாசல், குமர் காரியங்கள் பொது விஷயங்கள் என்று தன்னை நாடி வருவோரை மனதிருப்தியுடன் அனுப்பிவைத்து அதில் இன்பம் கண்டவர்.
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற கவிதைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை அவரது ஜனாஸாவில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் வெள்ளத்தை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை கபூல் செய்து அவர் அறியாமல் ஏதும் பாவம் செய்திருந்தால் அவற்றை மன்னித்து மேலான பிர்தௌஸ் எனும் சொர்க்கபதியில் வாழ செய்வானாக.
அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்து அவர்கள் நடந்த நல் வழியில் வாழ செய்வானாக ஆமீன்.
38. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byAbdulKader (Abu Dhabi)[21 September 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8594
அஸ்ஸலாமு அழைக்கும்....
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை பொறுத்து கபுரை வெளிச்சமாக்குவானாக. ஆமீன்
அல்லாஹ்விற்காக தாங்கள் குடும்பத்தில் அனைவர்களும் சபூர் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
39. ஒரு தலை சிறந்த அழைப்பாளரை இந்த மண் இழந்துவிட்டது posted byஹாஃபிழ் அஹ்மது (சிங்கப்பூர்)[21 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8596
அல்லாஹ்வின் பக்கம் அழைப்பாளரை, அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னதுல் ஃபிர்தெளஸ் என்னும் சொர்க்கத்தை தந்து அருள்வானாக ! ஆமீன்
மேலும் அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன்
40. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byOMER ANAS (DOHA QAYAR.)[21 September 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8601
இன்னாலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிவூன். அல்லாஹ்வின் கலா கத்ருப் படி நடந்த கருமத்திற்கு நாம் அனைவரும் சபூர் செய்திட கடமை பட்டுள்ளதால், நாங்களும் சபூர் செயது கொண்டோம்! குடும்பத்தார்கலாகிய அனைவரும் சபூர் செயது கொள்ளவும்!!!
41. நல்ல மனிதரை இழந்துள்ளோம் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[21 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8609
டில்லி மைதீன் ஹாஜியார், என் உள்ளம் கவர்ந்த பெருந்தகை..எப்போதும் தம்பி என்று பாசத்தோடு அழைக்கும் பக்குவம்.. யாரையும் கடிந்து கொள்ளது gentleman ...நியாயமான வியாபாரி.. அல்லாஹ்வின் கட்டளைப் படி மரணித்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா ilaihi ரஜியூன்... அல்லாஹ் அன்னாரின் எல்லா பிழைகளையும் பொறுத்து, மறுமையில் சொர்க்க பத்தி கொடுக்க பிரார்திர்கிரேன்.. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தின், போருமைக்காகும் பிரார்த்திக்கிறேன்..
மௌத்துக்கு முன் மகன் பிலால் உடன் பேசினேன் .. மௌத்துக்கு பிறகு எத்தனையோ முறை முயற்சி பண்ணியும் பிலால் போனே எடுக்க வில்லை.. uvaiz மற்றும் மம்மது போனே நம்பர் இல்லை.. மகன் மகள்கள் அனைவர்க்கும் சலாம்..
மர்ஹூம், கண்டி.உவைஸ்ன லெப்பை அவர்களின் அருமை மகனும்,
இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) துணைத்தலைவரும், பிரபல மாணிக்க வணிகருமான - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.யு.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற டில்லி முஹ்யித்தீன் ஹாஜியார் அவர்கள் காலமான செய்தி அறிந்து அளாவிலா கவலைக்கு உள்ளானோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
எந்த ஒரு ஜீவனுக்கும் தீங்கு சொல்லாலும்,செயலாலும்
நினைக்கவோ,செய்யவோ இல்லாத,எண்ணாத பெருந்தகை
பெருமகனார் ..
புன்னகை தவழ சிரித்த முகத்துடன், என்னை உட்பட
யாரை எங்கு கண்டாலும் முன் வந்து ஸலாம் கூறி ,
குடும்ப குசலம் விசாரித்து , நலம் அறியும்
நல்லதோர் மா மனிதர்.
இவ்வுலகில் வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவரே சிறந்தவர் எனும்
தமிழ் சொல்லுக்கு இலக்கணமாக திகழ்ந்து விட்ட காட்சி
கருத்த தம்பி மரைக்காயர் வீதியே காயல் நகர மக்கள்களின்
கண்ணீர் வெள்ளத்திரளால் சங்கமம் ஆன
அவர்களின் இறுதி ஜனாஸாவில் கலந்து கொண்ட
அனைவர்களாலும் உணரப்பட்டது..
ஜனாஸாவில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள்கள்
மக்கள் வெள்ளத்தை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
வல்ல அல்லாஹ், அவர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் உற்றார் - உறவினர்கள் யாவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நிறைவான பொறுமையை தந்தருள்வானாக.ஆமீன்.
44. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted bysak shahulhameed (malaysia)[21 September 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 8612
சலாம் அன்பு அடக்கம் கனிவானஉபசரிப்பு இனிமையாக பழகக்கூடியவர் அன்னாரின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமே எல்லாம் வல்லஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து கபூரை விசாலமாக்கி மேலான சுவர்க்கத்தை கொடுத்தருள்வானாக நண்பர் உவைஸ் மற்றும் அன்னாரின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக
45. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byTariq (Jeddah )[21 September 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8613
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து அவர்களுக்கு சுவனபதியை வழங்குபவனாக. ஆமீன்.
எனது பக்கத்துக்கு வீடு DM மாமா இரக்கம், எளிமை, தன்னடக்கம், இன்னும் பல நற்குணங்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்கள். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் & சகோ.உவைஸ், நண்பர்கள் முஹம்மது, பிலால்,மர்ஹூமின் பேரபிள்ளைகள் ரஹ்மத்துல்லாஹ், முஹமது மொஹிதீன் யாவர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வல்ல இறைவன் உங்களுக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக...
47. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byhassanul bassry(sks) (dubai)[21 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8615
நண்பர் உவைஸ் தம்பி முஹம்மத் அல்லாஹ்வின் கட்டளை படி தாங்கள் குடும்பத்தார் யாவரும் சபூர் செய்து கொள்ளவும்.அல்லா மர்ஹும் அவர்ஹளுக்கு ஸுவநபதிஐ நல்குவனாக ஆமீன்.
49. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted byM.M. Seyed Ibrahim (Chennai)[22 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 8619
ஜனாசவில் கலந்து கொண்டவர்கள், நேரில் மற்றும் ஆன்லைனில் ஆறுதல் சொன்னவர்கள், தங்கள் இடங்களில் இருந்து அமைதியாக துஆ செய்தவர்கள் அனைவருக்கும் Jazaakallaahu Khairan.
ஹாஜியார் மகன் உவைஸ் அவர்களின் தொடர்பு எண்: 0091 98948 45151. நேற்று மகன்கள் மற்றும் பேரன்கள் போன் பேசும் நிலைமையில் இல்லை.
50. அஸ்ஸலாமு அலைக்கும் posted byShaik Dawood (Hong Kong)[23 September 2011] IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 8669
Masha Allah he is a gentleman. I had many conversation with Him. Still I remember the politeness and kindness in his words. We can take him as our role model.
May Allah accepts all his good deeds & may He forgive all his (know & known) sins. May He make his grave brighter & wider and give shelter under his 'Arsh in the Aakhirah and Let Him enter in to the Jannath-al-A'la.
My Assalamu Alaikkum to Uvais kaka, Md. Ibrahim kaka, My friend Bilal & all their family members.
51. மர்ஹூம் அவர்களின் இறுதி நாட்கள் posted byஹாஃபிழ் அஹ்மது (சிங்கப்பூர்)[23 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8680
நல்ல முடிவு பயபத்தி(உடையவர்களு)க்கே உரியதாகும் அல்குர்ஆன் 20:132
D.M.ஹாஜியின் மரணம் அவர்கள் அதிகமாக படித்த ஹதீது தொகுப்பு(முன்தகப் அஹாதீது)களிலிருந்து ஒரு ஹதீதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றது.
பாடம்:தொழுகை ஹதீது எண்:186
அதில் ...அல்லாஹ்வை அவனது அந்தஸ்த்துக்கு தக்கவாறு புகழ்ந்தபின் .
என் வாழ்நாளின் கடைசிப் பகுதியை மிக சிறந்ததாக ஆக்கிவிடு .
எனது கடைசி அமலை மிகசிறந்த அமலாக ஆக்கிவிடு.
உன்னை சந்திக்கும் நாளை சிறப்பான நாளாக ஆக்கிவிடு
மர்ஹூம் அவர்கள் இந்த வருடம் ரமளான் கடைசிப்பதினைந்து நாட்கள் உம்றாவிலும் , ஆறு நோன்புகளும் கழித்து, இந்த வெள்ளி (16.09) யன்றுதான் நமதூருக்கு திரும்பினார்கள்.
18.09.2011 ஞாயிற்றுக்கிழமை தன் முஹல்லா(மரைக்கார்ப்பள்ளி)வின் கஷ்தில் கலந்துக் கொண்டு , இஷா தொழுகைக்குப் பின் பயானையும் முடித்துக் கொண்டு மரைக்கார்ப் பள்ளியின் கடைசி பகுதியில் ஒரு நபரை நோய் நலன் விசாரிக்க ஒரு ஜமாஅத் தயாரிக்கப்பட்டு , மோட்டார் சைக்கிளில் ஆஸ்தான நண்பர் ஹாஜி ஜெம் மைதீன் அவர்களுடன் சிறிது தூரம் சென்ற பொழுது மயக்கமுற்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து நோய்வாய்ப்பட்ட மூன்று நாட்களுக்குள் யாருக்கும் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் இந்த உலகைவிட்டுப் பிரிந்தார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கடைசிப்பகுதி : உம்றா சென்றது, உதவிகள் பல செய்தது
கடைசி அமல் : கஷ்தில் கலந்துக்கொண்டு நோயாளியை நலன் விசாரிக்க சென்றது
கடைசி நாள் : முஹல்லாவின் கஷ்த் நாள்.
நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். 47:07
தப்லீக் தஃவத்துடைய உழைப்பில் கடைசிவரை ஈடுபட்டு மக்களுக்கு மத்தியில் நல்ல பெயருடன் இவ்வுலகைப்பிரிந்தது அல்லாஹ் அவர்களுக்கு செய்த உதவியாகும்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களுடைய கப்ரை பிரகாசமாக்குவானாக ,சுவர்ககத்தில் மேலான அந்தஸ்தை கொடுப்பானாக! ஆமீன்.
تَارَةً أُخْرَىٰ 20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்ஸுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக.
ஆமீன்.மேலும் அன்பு நன்பர்.சகோதரர்தம்பிஅல்ஹாஜ்.டில்லி முஹியத்தீனவர்களிடம் தற்சமயம் ஒருசிலரிடமே காணப்படும் ஒரு வ்செஷத்தன்மை இருந்தது என்பதை ஒருசிலருக்குத்தான் தெரியும் .
அதுஎன்னவென்றால் தாம் செய்யும் நல்ல அமல்களிலும் குறிப்பாக தான தர்மங்களிலும் கூட ரெம்ப நாஷூக்காத சிரித்தமுகத்துடனேயே மற்றவர்களையும் செய்யத்தூண்டி அதிகமதிகம் தவாபுகளை தனக்கும் மற்றவர்களுக்கும் அள்ளி அள்ளி எடுபபோம் .எனக்கும் அவருக்கும் இப்படி பற்பல நிகழ்சிகள் நடந்துள்ளது.
ஒருதரம் இப்படி இந்த வித்தையை எங்கு கற்றீர்கள் என்ரூ கேட்கும்போதே அவர் சொன்ன பதில்;=
பந்தமில்லாத சொந்தங்க ளையும்,படிததறியாத மார்க்கக்கல்வியையும் ,இனம் தெரியாத மக்கள் தரும் மரியாதையையும் கொள்ளை கொள்ளையாய் தவாபை அள்ளித்தரும் உங்ககளையும் என்னையும் இணைத்து தந்த தப்லீக்கில் தான் என்று சொல்லுவது வழமையே.ஆரம்பகால காயல் கார்க்கூனாகவும் இருக்கிறார்.
அவர் மறைநததாக எனக்கு அறியமுடிய வில்லை. காரணம் ஜனாஸா வில் கலந்து கொள்ளும் பாக்கியமும் எனக்கு கிடைக்க வில்லை.
54. Re:இலங்கை கா.ந.மன்ற (காவாலங்... posted bys.e.m. abdul cader (bahrain)[28 September 2011] IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9061
MASAHALLAH, NICE END, AFTER UMRA AS WELL AS DURING THE RAMATHAN IN HOLY MECCA AND OTHER HIS GOOD DEEDS. I PRAY ALMIGHTY ALLAH TO ACCEPT HIS GOOD DEEDS AND FORGIVE HIS SINS AND LET HIM ENTER THE " JANATHUL FERDHUS "
I TOO REQUEST HIS FAMILY MEMBERS TO KEEP " SABUR" AND DO AS HE DID TO THE NEEDY AND GOOD DEEDS. WASSALAM
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross