எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் - தலைமை பொறுப்பு மூன்றில் ஒரு பங்காக - பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு சரியான முறையை பின்பற்றவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவ்வழக்கினை - அதன் முக்கியத்துவம் கருதி - இன்று (செப்டம்பர் 21) விசாரணைக்கு எடுக்கும்படி நீதிபதிகள் ஜோதிமணி மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கினை ஏ. காஜா மொஹிதீன் என்ற வழக்கறிஞர் - பொது நல வழக்கு (Public Interest Litigation) - முறையில் தொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
செப்டம்பர் 12 தேதியிட்ட ஆணை ஒன்றினை முனிசிபல் நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி மன்றங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை - தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் செய்யப்படவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 நகர்மன்றங்களில், 5 நகர்மன்றங்களின் தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விதிகள்படி ஒரு உள்ளாட்சியின் தலைமையே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆகவே - திருநெல்வேலி மாவாட்டத்தில் உள்ள - அம்பாசமுத்திரம், கடையநல்லூர், தென்காசி மற்றும் விக்கிரமசிங்கபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்த அனுமதிக்ககூடாது.
இவ்வாறு தனது வழக்கில் காஜா மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
1. நல்ல முயற்சி posted byMauroof (Dubai)[21 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8561
நல்ல முயற்சி. இதற்கான நல்ல தீர்ப்பு கிடைக்கட்டும். இன்று பெரும்பாலும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை நீதி மன்றங்களில் JUDGEMENT கிடைக்கிறதே தவிர JUSTICE கிடைப்பதில்லை, உண்மைதானே? பொறுத்திருந்து பார்ப்போம் சரியான தீர்வு கிடைக்கிறதா என்று. வழக்கறிஞர் ஏ. காஜா மொஹிதீன் அவர்களின் சீரிய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
2. பெண்களுக்கு நகர்மன்ற தலைம... posted byHASBULLAH MACKIE (dubai)[21 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8567
ஒரு வேலை அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
சமசீர் கல்வியை போன்று இத்தேர்தலில் பெண்ணாட்சி தொடரும்.
3. Re:பெண்களுக்கு நகர்மன்ற தலைம... posted bymohamed faiz (riyadh)[21 September 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8581
அஸ்ஸலாமு அழைக்கும்
ஆமா வோட்டு போட்டு போட்டு கை thaenji போச்சி .. பேசி பேசி நாக்கு போச்சி ... இந்த DCW என்ன தான் தீர்வு ... எப்பா மேதாவிகள நல்ல இர்ருபிங்க பா தயவு செய்து இதுக்கு ஒரு வாழிய கண்டுபிடிங்க ....... இல்ல வோட்டு போடறதுக்கு ஒரு பய இறுக்க மாட்டாங்க... அல்லா அனைவரையும் காபாற்றுவனாக...
Naattu மக்களால முடிந்தது , எதிர்த்து கோர்ட்ல கேஸ் poduvathu தான் , ஆனால் தீர்ப்பு எபோ வரும்மோ , அப்போ தான் வரும் ,
அம்மா உடைய கேஸ் kay இன்னும் தீர்ப்பு வர வில்லை இதுல வேற நீங்களும் கேஸ் போட்டு கிட்டு ,
இது அவங்களோட ராஜ்யம் , கோர்ட் யன்ன , எல்லத்தையும் நினைத்தது போல நடத்தி kaatuvanga ,
ஓரமா இருந்து வேடிக்கை பார்ப்பது நல்லது இல்லை எனகும் ஒரு நோட்டீஸ் வந்தும் பா
ஆளை விடுங்க நன் ஓரமா இருகிறேன் ,
இது எல்லாம் யாரோ சொன்னத எழுதி இருக்கான்
Seyed Mohamed
Thai Nadu Tours & Travels
Bangkok-Thailand
6. Re:பெண்களுக்கு நகர்மன்ற தலைம... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.)[21 September 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8592
தீர்ப்பு எப்படி வந்தாலும் எப்போது வந்தாலும் வரட்டும், அதற்காக இதுபோன்ற பொதுநல வழக்குகள் தொடராமல் நடப்பது நடக்கட்டும் என்று பார்த்துக்கொண்டிருந்தால் இன்னும் நடக்கைருப்பது மேலும் மோஷமகிப்போகும். குறைந்தபட்சம் இப்படியான பொதுநல வழக்குகள் போட்டு மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கத்தான் வேண்டும். நல்ல முயற்சி, வெற்றிபெற வாழ்த்துக்கள்.
7. Re:பெண்களுக்கு நகர்மன்ற தலைம... posted bymackienoohuthambi (kayalpatnam)[22 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8631
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா என்று சொல்வார்கள். அம்மாவின் தீர்ப்பால்தான் இப்போது இரண்டு பெண்கள் களத்தில் இருக்கிறார்கள் இல்லாவிட்டால் 35 பேர் தலைவருக்கு போட்டிபோட விருப்ப மனு கொடுக்க இருக்கிறார்கள் தலை சுற்றுகிறது.
ஐக்கிய பேரவை, ஒமேகா,மெகா, ஒருங்கினைப்புக்கமிட்டி இப்படி பல இயக்கங்கள் போட்டியாளர்களை இனம்கானுவதர்க்கு கருத்து வேற்றுமையுடன் நடந்துகொள்வதை மாண்புமிகு வழக்கறிஞர் அறியவில்லையா, நீதி கேட்டு நெடிய பயணம் போனவர்கள் என்ன சாதிககமுடிந்தது தீர்ப்பு அவ்வளவு லேசில் வராது அநியாயமாக உங்கள் வேலை, நேரம் பணம் வீணாகும். அலைச்சல் திரிச்சல் டென்ஷன் இதுதான் மிஞ்சும். இது அனுபவம் தந்த பாடம்.
8. Re:பெண்களுக்கு நகர்மன்ற தலைம... posted bySAHUBAN ALI (dubai)[22 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8647
மதிப்பிற்குரிய மக்கி நூஹு தம்பி காக்கா அவர்களுக்கு,
அஸ்ஸலாமுஅலைக்கும்.
காக்கா நீங்கள் கருதுவது போல ஒமேகா என்பது ஒரு இயக்கம் அல்ல.அவர்கள் மெகாவை சேர்ந்தவர்களையும்,
அவர்களது சொந்தங்களையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால்
திட்டியும்,எழுதியும், டேப்பில் பதிவு செய்தும் மொட்டைக்கடிதம் போல, மொட்டை இமெயில் அனுப்பும்
சமூக விரோத கும்பல் ஆகும். இது வேறு வேறு பதிவில்
விளக்கப்பட்டுள்ளது. மெகா நண்பர்களிடம் பேசியபோது
இந்தக் கும்பல் யார் என்று தெரிந்து விட்டதாகவும், விரைவில்
அவர்களது பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.
அடுத்தவர்களை மிகவும் மோசமான நடையில் கெட்ட
வார்த்தை மூலம், மொட்டைக் கடிதம் அனுப்பும் இவர்களை
இயக்கம் என்று சொல்லாதீர்கள். இவர்கள் ஈனப்பிறவிகள்.
கிரிமினல்கள். மெகா நண்பர்கள் இந்த கச்சடாக்கள் அனுப்பிய
மொட்டை நோட்டீஸ்களை காட்டியபோது, மனம் கொதித்தது.
அத்தனையும் அசிங்கம் அசிங்கமாக. உங்களைப் போன்றவர்கள் இவர்களை கண்டித்து எழுத வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பமும், வேண்டுகோளும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross