செய்தி எண் (ID #) 7261 | | |
வியாழன், செப்டம்பர் 22, 2011 |
காவாலங்கா துணைத்தலைவர் டில்லி முஹ்யித்தீன் ஹாஜியார் உடல் நல்லடக்கம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5118 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினத்தின் புகழ்பெற்ற மாணிக்க வணிகரும், கொடையுள்ளம் கொண்டவருமான இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) துணைத்தலைவர் ஹாஜி எம்.யு.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற டில்லி முஹ்யித்தீன் ஹாஜியார் 21.09.2011 (நேற்று) அதிகாலை 05.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 64.
அவரது உடல், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 04.30 மணிக்கு அங்கிருந்து ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு, மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியில் மாலை 05.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா தொழுகையை அவரது மருமகன் எம்.எம்.செய்யித் இப்றாஹீம் வழிநடத்தினார். நல்லடக்கத்தின்போது, இலங்கை - தாருல் ஹதீஸ் இயக்குனர் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ‘மரணம் தரும் பாடம்‘ என்ற தலைப்பிலும், மறைந்த டில்லி முஹ்யித்தீன் ஹாஜியாரின் மறுமை நல்வாழ்விற்காக பிரார்த்தித்தும் உருக்கமாக உரையாற்றினார்.
ஜனாஸா நல்லடக்கத்தில், காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், நகர பிரமுகர்கள், மாணிக்க வணிகர்கள் மற்றும் அனைத்துப் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
[செய்தி திருத்தப்பட்டது] |