காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.
காயல்பட்டின நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும், அரசியல் சாயம் இல்லாத நகர்மன்ற தலைவரின் அவசியம் குறித்தும் - MEGA சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!
அன்பிற்கினிய காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டணம் நகர்மன்றதிற்கான தேர்தல் - இன்ஷா அல்லாஹ் - வரும் அக்டோபர் 17 அன்று நடைபெறவுள்ளது. செயலாற்றக்கூடிய, ஊழலற்ற நகர்மன்றதினை உருவாக்கும் நோக்கத்தில் நம் நகரில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த உயரிய எண்ணம் வெறும் கனவாக இல்லாமல், கைக்கூட - நமக்கு தேவை அரசியல் சாயம் இல்லாத நகர்மன்றம்.
ஊழலற்ற நகர்மன்றத்தை - கட்சி சாயம் கொண்ட வேட்பாளர்களால் தருவது கடினம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சில கட்சிகளை தவிர, பல கட்சிகள் - நகர்மன்றங்களையும், பிற உள்ளாட்சி அமைப்புகளையும் - தங்கள் ஆளுமையில் வைத்துக்கொண்டு - பல நிர்வாக, பொருளாதார முறைகேடுகளை நடத்த துணைபோகும் என்பது வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம்.
ஆகவே - வரும் நகர்மன்ற தேர்தலில் எவ்வகையிலும் அரசியல் கட்சிகள் சாயம் இல்லாத ஒரு நகர்மன்ற தலைவரை தேர்வு செய்ய நாம் பாடுபட வேண்டும் என்பதே MEGA வின் நிலை. ஆகவே - குறுகிய காலமே இருப்பதால், அதற்கான நமது முயற்சிகளை துரிதப்படுத்தி, செப்டம்பர் 29 க்குள் ஒரு நல்ல முடிவினை எடுக்குமாறு MEGA அன்புடன் வேண்டுகிறது.
(மேலும் காயல்பட்டின) நகர்மன்றத் தலைவராக ஒரு பெண்மணிதான் வரமுடியும் என்ற அரசின் நியாயமற்ற முடிவை MEGA வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA. |