வரும் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தகுதி, தகுதியின்மை குறித்த விபரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அது வருமாறு:-
தகுதி
(1) நீங்கள் எந்தப் பேரு்ராட்சி - மு்ன்றாம்நிலைநகராட்சி - நகராட்சி - மாநகராட்சி அமைப்பின் மேயர்-தலைவர் அல்லது வார்டு உறுப்பினராகப் போட்டியிட விரும்புகின்றீர்களோ அந்த உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் ஏதாவது ஒரு வார்டில் இடம் பெற்றிருக்க வேண்டும்
(2) நீங்கள் வேட்புமனுதாக்கல் செய்யும் நாளன்று உங்களுக்கு 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்
(3) ஒதுக்கீடு செய்யப்பட்ட உறுப்பினர் பதவிக்கு நீங்கள் போட்டியிட்டால் அந்தப் பதவி எந்தப் பிரிவினருக்கு (ஆதிதிராவிடர்-பழங்குடியினர்) ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ. அந்தப் பிரிவினராகவும் மற்றும்-அல்லது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால். பெண்ணாகவும்
இருக்க வேண்டும், எடுத்துக்காட்டு் ஒரு இடம் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்தவராகவும் பெண்ணாகவும் இருக்க வேண்டும்
தகுதியின்மை
(1) நீங்கள் குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்திற்கு மேல் தண்டனை பெற்றிருப்பின் (கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டம். 1981 மற்றும் மதுரை மாநகராட்சி சட்டம். 1971ன்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல்) தண்டனை காலத்திலும் மற்றும் தண்டனை முடிவடைந்த நாளிலிருந்து ஆறு ஆண்டு காலத்திற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதி அற்றவராகக் கருதப்படுவீர்கள். மேலும், தேர்தல் குற்றச் செயலுக்காகவோ அல்லது இந்திய குற்றத் தண்டனை விதித் தொகுப்பு அத்தியாயம் IX-A-ன் கீழ் வரும் தேர்தல் குற்றச் செயல்களுக்காகவோ தண்டனைப் பெற்றிருப்பின். தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்தாண்டு காலத்திற்கு நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவராகக் கருதப்படுவீர்கள்
(2) 1955ஆம் ஆண்டு குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (Protection of Civil Rights Act) தண்டனை பெற்றவராக இருத்தல் கூடாது. அவ்வாறு பெற்றிருப்பின் தண்டனைப் பெற்ற நாளிலிருந்து ஆறு ஆண்டு காலத்திற்கு நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத்
தகுதியற்றவராகக் கருதப்படுவீர்கள்
(3) நீங்கள் செவிட்டு்மையாகவோ அல்லது மனநலம் குன்றியவராகவோ அல்லது தொழுநோயாளியாகவோ இருக்கக்கூடாது
(4) நீங்கள் பெற்ற கடனைத் தீர்க்க வகையற்றவர் என மனுச்செய்துள்ளவராகவோ அல்லது தகுதி படைத்த நீதி மன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது
(5) நீங்கள் எந்தப் பேரு்ராட்சி-மூன்றாம் நிலை நகராட்சி-நகராட்சி-மாநகராட்சியில் உறுப்பினராகப் போட்டியிட விரும்புகின்றீர்களோ அந்த நகர்ப்புற உள்ளாட்சியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லது பங்குதாரர் மூலமாகவோ எந்த ஒரு வேலைக்கான அல்லது
பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது
(6) நீங்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சியின் வழக்கறிஞராகவோ அல்லது அவ்வுள்ளாட்சியின் எதிர் வழக்கறிஞராகவோ இருக்கக் கூடாது
(7) நீங்கள் ஒரு அரசுப் பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ இருக்கக்கூடாது
(8) நீங்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிக்குச் சேர வேண்டிய தொகைகளைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது
(9) நீங்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தின்படியும் விதிகளின்படியும் வேட்பாளருக்கான இதர தகுதிகள் அற்றவராக இருக்கக் கூடாது
(10) நீங்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தின்படியும் விதிகளின்படியும் வேட்பாளருக்கான இதர தகுதியின்மை உடையவராக இருக்கக்கூடாது
(11) நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இயலாத தகுதியின்மை ஏதும் பெற்றிருத்தல் கூடாது
(12) நீங்கள் இதற்கு முன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வேட்பாளர் தேர்தல் செலவின கணக்கினை முறைப்படி உரிய காலத்தில் தாக்கல் செய்யத் தவறியமைக்காக மாநிலத் தேர்தல் ஆணையத்தினால் தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்டவராயிருப்பின் மேற்படி ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மு்ன்றாண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவராவீர்
(13) நீங்கள் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினராகவோ இருத்தல் கூடாது (Loksabha and Rajyasabha)
(14) நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், ஏதாவது ஒரு வார்டு உறுப்பினர் பதவியினை மட்டுமே வகிக்க இயலும். பிற பதவியிடங்கள் காலியிடங்களாகக் கருதப்பட்டு பின்னர் அப்பதவியிடங்கள் தேர்தல் மு்லமாக நிரப்பப்படும், (தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம். 1920-ன் பிரிவு 43-A. சென்னை மாநகராட்சி சட்டம். 1919-ன் பிரிவு 57. மதுரை மாநகராட்சி சட்டம். 1971-ன் பிரிவு 53 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம். 1981-ன் பிரிவு 55)
(15) நீங்கள் மேயர்-தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகிய இரு தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்து ஏதேனும் ஒன்றை வேட்புமனுக்கள் திரும்பப்பெற நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குள் திரும்பப் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில்
வேட்புமனு தேர்வு செய்து அத்தேர்தலில் மட்டும் போட்டியிடுவதாக நிர்ணயிப்பார்/ நீங்கள் தாக்கல் செய்துள்ள ஏனைய மனுக்கள் திரும்பப்பெற்றதாகக் கருதப்படும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross