திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தை அடுத்த குரங்கன் தட்டுக் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் (45) நாற்பத்தைந்து வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதனால் பாதிக்கப்பட்ட
மக்கள் பொருட்கள் அனைத்தையும் இழந்து உடுத்திய உடையுடன் உயிர் மட்டும் தப்பினர்.
இந்த துயர சம்பவம் ஊர் முக்கிய பிரமுகர்களின் வாயிலாக அறக்கட்டளைக்கு தகவல் தரப்பட்டது. மனிதநேயமிக்க கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சாதி> மத பேதமின்றி கடந்த 5 வருடங்களாக செய்து
வரும் இந்த நல்லுதவி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சென்றடையும் விதமாக சிறிதும் தாமதமின்றி கே.வி.ஏ.டி. புஹாரி ஹாஜி அறக்கட்டனையின் சார்பில் “ஸ்டவ்” அடுப்புகள்> சேலைகள்>
சுடிதார்> மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.கே.ஜெய்னம்பு அவர்கள் மற்றும் டிரஸ்டிகளான ஹாஜ்ஜா எம்.எஸ்.செய்யிது மீரா> ஹாஜ்ஜா
எம்.ஏ.பாத்திமா புகாரி> கே.வி.ஏ.டி.கபீர்> மற்றும் விடுதலை சிறுத்தையின் மாவட்ட தலைவர் தமிழினியன்> ஊர் பிரமுகர்கள் திரளாகப் பங்கேற்றனர். அறக்கட்டனையின் மேலாளர் ஆசிக் அவர்கள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.
1. Re:தீயினால் பாதிக்கப்பட்ட மக... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்)[22 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8618
சென்ற வாரம் நான் பஜாரில் நின்றுகொண்டு இருக்கும் போது, KVAT வண்டியின் டாப்பில் "ஸ்டவ்" அடுப்புகள் அடுக்கிக்கொண்டு சென்றதை பார்த்து, ஏதோ வியாபார விஷயம் போல என்று நினைத்தேன்.
இப்போ தான் தெரிகிறது வல்ல நாயனிடம் நன்மைகள் கொள்ளை அடிக்க எடுத்த முயற்சி என்று,
வாழ்த்துக்கள்..தொடரட்டும் இந்த கொள்ளை அடிக்கும் நிகழ்ச்சிகள்.
2. Re:தீயினால் பாதிக்கப்பட்ட மக... posted byShuaib (Kayalpatnam)[22 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8622
உங்கள் சேவை மென் மேலும் தொடர வல்ல ரஹ்மானிடம் துஅ செய்வோம் , நீங்கள் ஏன் தேர்தலில் நிற் க்கக் கூடாது?தஹுதி யானவர்கள் நீங்கள் தான் . லஞ்சம் வான் க மாட்டிர்கள் . உங்கள் குடும்பத்தில் யாரையாவது தேர்தலில் நிர்கசொள்ளவும்
ஷோயப்
3. இவ்வுலகிலேயே அதற்க்கான சன்மானம்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[22 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8639
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் - இறைவன் தனக்கு அருளிய செல்வத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க நினைக்கும் உங்கள் நல்ல பண்புகளுக்கு இவ்வுலகிலேயே அதற்க்கான சன்மானம் வல்ல இறைவனிடம் தாங்களுக்கு உண்டு அதில் சந்தேகம் இல்லை - உங்களை போன்று இது போல் நல்ல பல காரியங்களை செய்ய தூண்ட வல்ல இறைவன் ஆக்கிவைப்பானாக... ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross