இரண்டாம் நிலை நகர்மன்றமான காயல்பட்டின நகர்மன்ற தலைமைக்கு போட்டியிடும் வேட்பாளர் ரூபாய் 1,12,500 வரை - செலவு செய்யலாம். அதுபோல வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ரூபாய் 22,500 வரை செலவு செய்யலாம்.
அனைத்து வகை உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்கள் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள தொகை விபரம் :-
டவுன் பஞ்சாயத் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி
தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 56,250
வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 11,250
முதல் மற்றும் இரண்டாம் நிலை நகர்மன்றம்
தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 1,12,500
வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 22,500
சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி
தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 2,25,500
வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 56,250
சென்னையை தவிர இதர மாநகராட்சிகள்
மேயர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 5,62,500
வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 33,750
சென்னை மாநகராட்சி
மேயர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 11,25,000
வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுபவர் - ரூபாய் 56,250
|