தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்தபடி, வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை, நகர்மன்ற தலைமை தேர்தல் அலுவலராக உள்ள நகர்மன்ற ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. |