எதிர்வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று, காயல்பட்டின நகர்மன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் நகர்மன்றத்தில் உள்ள 18 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இத்தருணத்தில் 2006 ஆம் நடந்த தேர்தலின் முடிவுகளை - வார்டு வாரியாக - பார்வையிடுவது பொருத்தமாக இருக்கும்.
வார்ட் 9 முடிவுகளை காண்போம். அப்பாபள்ளி தெரு, மரைக்கார்பள்ளி தெரு ஆகிய பகுதிகளை அடங்கியது இவ்வார்டு.
இவ்வார்டில் - 2006 ஆம் ஆண்டு - 7 வேட்பாளர்கள் - போட்டியிட்டனர் . பதிவான 700 வாக்குகளில் - 242 வாக்குகள் பெற்று, உதயசூரியன் சின்னத்தில் நின்ற வேட்பாளர் - ஜெய்னம்பு எஸ்.எம். - வெற்றிபெற்றார்.
பிற வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற வாக்குகளும்:-
(2) சுபைதா செ.தா. (அலமாரி) - 119 வாக்குகள்
(3) பாத்திமா ஏ.ஜி. (அரிக்கன் விளக்கு) - 109 வாக்குகள்
(4) சாமு மரியம் எம்.இசட் (உலக உருண்டை) - 73 வாக்குகள்
(5) முஹம்மது இப்ராஹிம் உம்மாள் ஹெச்.எம (வைரம்) - 67 வாக்குகள்
(6) செய்யது ஹலீமா எம்.ஏ. (கொதி கெண்டி) - 49 வாக்குகள்
(7) ரஹ்மத் நிஷா எஸ்.ஏ.டி. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 39 வாக்குகள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross