மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய விசயங்களில் காயலர்களுக்கு வழிக்காட்டும் நோக்கில் சென்னையில் ஜூலை 3 அன்று
ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. காயல்பட்டணம் - சென்னை வழிக்காட்டு குழு | Kayalpatnam - Chennai Guidance Committee (KCGC) என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த குழு
இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. நேரு விளையாட்டு அரங்கில் உள்ள Conference Hall இல் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை
வல்லுனர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அக்கூட்டத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு, கல்விக்குழு, வேலைவாய்ப்புக்குழு மற்றும் மருத்துவக்குழு ஆகிய துணைக்குழுக்கள் கடந்த சில
வாரங்களாக தனித்தனியே கூடி - அவர்கள் சார்ந்த துறைகள் குறித்த பரிந்துரைகளை தயார் செய்தனர். அப்பரிந்துரைகள் கடந்த சனிக்கிழமை
(அக்டோபர் 8) - சென்னை சிடி சென்டரில் - KCGC ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு ஆடிட்டர் ரிபாய் தலைமை தாங்கினார். கூட்டத்தின் துவக்கமாக - ஹாபில் எம்.என். புஹாரி கிராஅத் ஓதினார். அதனை தொடர்ந்து
எம்.எஸ். அப்துல் காதர் (ஸ்மார்ட்) வரவேற்புரை வழங்க, தொடர்ந்து - சென்ற கூட்டங்களின் தீர்மானங்களை குளம் முஹம்மது தம்பி நினைவு
கூர்ந்தார்.
பின்னர் துணைக்குழுக்கள் சார்பாக சமர்பிக்கப்பட்ட பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டது. நீண்ட கருத்து பரிமாற்றங்களுக்கு பின்னர் - கீழ்க்காணும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
காயல்பட்டணம் - சென்னை வழிக்காட்டு குழுவின் ஒருங்கிணைப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குழுக்களின் உறுப்பினர்களின்
எண்ணிக்கை அதன் நிர்வாகம் மற்றும் செயலாற்றும் திறன் அடிப்படையில் விரிவாக்கப்படுகிறது.
== ஒருங்கிணைப்புக்குழு
(i) ஆடிட்டர் எஸ்.எஸ். ரிபாய்
(ii) ஹாஜி ஹெச்.என். சதக்கத்துல்லாஹ்
(iii) ஹாஜி எம்.எஸ். அப்துல் காதர் (ஸ்மார்ட்)
(iv) எஸ். ஹெச். ஷமீமுல் இஸ்லாம்
(v) எம்.எஸ். முஹம்மது சாலிஹு
(vi) குளம் முஹம்மது தம்பி
(vii) முஹம்மது முக்தார்
== கல்விக்குழு
(1) ஹாஜி வாவு மஸ்னவி
(ii) வழக்கறிஞர் துளிர் அஹ்மத்
(iii) ஷேக் சுலைமான் (Earth Science)
(iv) எம்.எம். செய்யத் இப்ராஹீம்
(v) சாளை பஷீர்
== வேலைவாய்ப்புக்குழு
(i) ஹாஜி குளம் இப்ராஹீம்
(ii) பல்லாக் பி.ஏ.கே. சுலைமான்
(iii) ஹாஜி எம்.என். அப்துல் காதர் (முத்துவாப்பா)
(iv) வி.எம்.ஐ.எஸ். முஹம்மது முஹைதீன்
(v) பின்னர் அறிவிக்கப்படும்
== மருத்துவக்குழு
(i) டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
(ii) டாக்டர் ஏ. நவாஸ்
(iii) டாக்டர் டி. கிஸார்
(iv) டாக்டர் கானி சேக்
(v) டாக்டர் இஸ்மாயில்
தீர்மானம் 2
KCGC இன் அடுத்த துணைக்குழுக்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் தேதியன்று நடத்துவது என்றும், அக்கூட்டத்திற்கு
முன்னர் குழுவின் Byelaws, Common Minimum Program மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் நவம்பர் மாத நடுவில், சென்னை வாழ் காயலர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் செயல்திட்டங்களை சமர்ப்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3
டிசம்பர் 29 அன்று காயல்பட்டணத்தில் - KCGC செயல்திட்டங்கள் குறித்த அறிமுக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் துணைக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பார்களும் கலந்துக்கொண்டனர். கூட்டத்தினை முஹம்மது முக்தார் நெறிப்படுத்தினார்.
தகவல்:
முஹம்மது முக்தார்
புகைப்படங்கள் உதவி:
மீரான் தம்பி மற்றும் சம்சுதீன் ஹமீத்
|