Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்... posted byMohamed Cnash (MAKKAH )[10 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10205
பாட்டன் காலத்து பழைய புராணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!! அப்போது நம் முன்னோர்கள் இதே தேர்தலுக்காகவும் தலைமை பதவிக்காகவும் சண்டை போட்டு ஊரே இரண்டு பட்டதும் யாருக்கும் தெரியாத கதை ஒன்றும் இல்லை!!!
ஆனால் இங்கே உள்ள நம் மக்கள் அறிய துடிப்பது இப்போது தேர்வுக்கு நீங்கள் பின்பற்றிய முறையையும் குளறுபடிகளையும் அதில் ஏற்பட்ட சந்தேகம் மீது விளக்கம் தானே தவிர பழைய பல்லவி இல்லை!!
இதற்கு முன்னர் இவ்வூரில் பின்பற்றப்பட்ட நடைமுறையைத்தான் இப்போதும் நாம் பின்பற்றியுள்ளோம் என்று அறிக்கையில் சொல்லி இருக்கிறீர்கள்!! அப்படியென்றால் இந்த முச்சரிக்கை கலாச்சாரம், பல பொழுதுபோக்கு சங்கங்கள் சேர்க்கபட்டது, இதர அமைப்புகள் அழைக்கபடாதது எல்லாம் முன்னரே பின்பற்றபட்ட நடை முறைதானா? தன் சொந்த ஜாமத்தில் ஒரு கவுன்சிலர் தேர்வுக்கு முன்றாம் இடம் பிடித்த வேட்பாளர் (சில நண்பர்கள் படித்த கருத்தில் இருந்து சொல்கிறேன்) ஊர் தலைவியாக முதல் இடம் பிடிக்க முடிந்த அதிசயம் எந்த நடைமுறையால் வந்ததோ?
மேலும் வேட்பாளர் தேர்வில் வாக்கும் அளிக்காமல், கருத்துக்கூட தெரிவிக்காமல், அமைதியான பார்வையாளராக, கூட்ட ஒருங்கிணைப்பாளராக மட்டுமே ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் நடந்து கொண்டார்கள் என்பதற்கு வருகை தந்த தேர்வுக் குழுவினரே சாட்சி என்ற உங்கள் அறிக்கை பாராட்டுக்குரியதே!! அதே சமயம் அதே தேர்வு குழுவில் ஒட்டு போட்ட அன்பர்கள் இணையதளத்தில் பதித்த அதிருப்தி கருத்துக்கள், KWT போன்ற இயக்கங்களின் அறிக்கை உங்கள் கூற்றுக்கு மாறாகவே உள்ளதே...அவர்களுக்கு நீங்கள் மறுப்பு தெரிவித்து இருக்கலாமே!!
சரி ஒட்டு போட வந்த ஜமாத் பிரதிநிதிகளுக்கு வேட்பாளர் விபரம் பற்றி ஏன் கடைசி வரை ரகசியம் காக்க பட்டது? வோட்டு போடும்போது சொல்லாமல் முன்னரே அவர்களுக்கு காலஅவகாசத்துடன் சொல்லபட்டு இருந்தால் அவர்களும் தங்கள் சார்ந்த ஜமாத் மக்களில் கருத்தை கேட்டு வாக்களித்திருப்பார்களே!! அப்போது தானே பொது வேட்பாளர் என்ற அந்தஸ்தை அடைய முடியும்!!
அதற்கு பின்பும் வேட்பாளர் குளறுபடிக்கு பின் போது வேட்பாளரின் தாயார் மனுதாக்கல் செய்தார்? அது பற்றிய பேரவையின் கருத்து என்ன? அப்படி யென்றால் பேரவையை நம்பி முச்சரிக்கை யில் கையெழுத்து போட்ட சகோ. வஹீதா வஞ்சிக்கபட வில்லையா? ஏன் அவர் தாயாருக்கு உள்ள தகுதி 5 வருடம் ஆண்ட முன்னாள் தலைவிக்கு இல்லையா?
இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் எப்படி நீங்கள் கை காட்டும் பஸ்சில் நாங்க ஏறி போக முடியும்... எனவே புத்தகம் திறந்த புத்தகமாக இருப்பதால், அறிவுக்கு விடை தருவதால் அதையே நாங்க தேர்ந்தெடுத்து படிக்கிறோம்!!
BETTER LUCK NEXT TIME IF ONLY THE APPROACH AND ATTITUDE OF PERAVAI SHALL BE RECTIFIED IN A PROGRESSIVE WAY TO ENHANCE THE PUBLIC INTERESTS!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross