Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட... posted byD. SEYED ISMAIL (HONG KONG)[11 October 2011] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 10270
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு.
முற்றிலும் உண்மை. ஆனால் அந்த ஒற்றுமை நீதியின் நேர்மையின் அடிப்படயில் இருக்க வேண்டும்.
உண்மை கசக்கத்தான் செய்யும், அதற்காக கசப்பான உயிர்காக்கும் மருந்து சாப்பிடுவதை யாரும் வெறுக்க மாட்டோம்.
நம் தெருவிலுள்ள நண்பர்கள் மூலமாக அறிந்த செய்தியை இந்த விளக்கத்தின் வாயிலாக உறுதி செய்துகொள்ள முடிகிறது.
புதுப்பள்ளி செயற்குழு மற்றும் நிர்வாக குழுவிலுள்ள பலர் சென்ற முறை போல இந்த தேர்தலிலும் வேட்பாளர் தேர்ந்தெடுப்பில் பள்ளி நிர்வாகம் தலயிட வேண்டாம் என்ற கருத்துக்கு மாற்றமாக நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது ஏற்கனவே பிளவுபட்டுள்ள ஜமாத்தில் மேலும் பிளவு ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுப்பது மிகக்கடினம், அனால் பலருடைய நியமான கருத்துக்களை புறக்கணித்துவிட்டு தங்களுடய சுய விருப்பத்தின் அடிப்படையில் மனோ இச்சையை பின்பற்றி இருக்கிறார்கள்.
நன்மையை எண்ணி இம்முடிவை எடுக்க நினைத்திருந்தால் பலரின் உணர்வுகளை மதித்திருக்க வேண்டும். அது இத்தகைய கருத்துப்போர் மற்றும் அறிக்கைபோரை தவிர்த்திருக்கும்.
ஆனால் அல்லாவின் முடிவை மற்ற முடியாது
அல்லா மனிதர்களை தவறு செய்பவர்களாக படைத்திருக்கிறான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி. ஆனால் யார் தம் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிரார்களோ அவர்கள் தான் மக்களில் சிறந்தவர்கள்.
இந்த தேர்தலை ஒரு சோதனையாகவே அல்லாஹ ஏற்படுத்தியுள்ளான். இந்த சோதனையின் மூலம் நாம் நல்ல பிடிப்பினை பெறவேண்டும்.
வரும் காலங்களில் தனி மனிதர்களும், ஜமாஅத்களும் தங்களின் செயல்பாட்டில் அல்லாஹ்வுக்கு பயந்து நீதிமிக்க முறையில் செயல்படவேண்டும். இந்த விமர்சங்களை நன்மைக்காக (positive) எடுத்துக்கொண்டு நல்ல நோக்கோடு (proactive ) ஆக செயல்படவேண்டும்.
ஒரு வாரத்தில் தேர்தல் முடிந்து விடும். ஆனால் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெறுகிறவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து, ஊழல் இல்லாத மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும்.
ஒபாமாவும், ஹில்லரி கிளிண்டனும் தேர்தலுக்கு முன் எந்த அளவு முரன்பட்டர்கள், ஒருவொருக்கொருவர் சேற்றை அள்ளி வீசிக்கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்றுவதில் நாம் படிப்பினை பெற வேண்டும். அவர்களின் பனி உலகின் நன்மைக்கா அல்லது தீமைக்கா என்பது விவாதத்திற்குரியது.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நகராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் யார் வெற்றி பெற்றாலும் தேர்தலுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்ச்சிக்களை மறந்து அல்லாஹுக்கு பயந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை அமானத்தாக நினைத்து செயல்பட வேண்டும். முறைகேடாக நடந்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் மனதில் வேண்டும்.
அற்பமான இந்த பதவிக்காக நிரந்தரமான மறுமையை மறந்தவர்களாக வாழக்கூடாது.
இந்த சோதனையில் பெறும் நடைமுறை அனுபவங்களை உணர்ந்து வரும் காலங்களில் ஆக்கபூர்வமாக செயல்பட அல்லாஹ அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்.
நன்மையை நாடி
த.செய்யது இஸ்மாயில் (மகுதூம் தெரு)
ஹாங்காங்
குறிப்பு :
ஊரில் உள்ள பல பள்ளிகளில் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஜாமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவது கண்டு நம் ஜம்மதிலும் இந்த மாதிரி சூழல் அமைய கனவு கான்கிறேன் .
பள்ளிப்பருவத்தில் நண்பர்களோடு ஒன்றாக புதுப்பளியில் ஜமாத்துடன் தொழுத நாட்களை நினைத்து, அந்த மாதிரி நாட்கள் மீண்டும் வர அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகிறேன் .
இந்த கசப்பான உணர்வுகள் அடுத்த தலைமுறைக்கும் செல்லாமல், கண்ணியமிக்க பெரியவர்கள்l, நண்பர்கள் ஒன்று சேர்ந்து நல்ல முடிவெடுத்து, இன்ஷா அல்லாஹ புதிய பள்ளியில் (புதுபிக்கப்பட்ட பள்ளியில் ) நண்பர்களோடு சேர்ந்து மீண்டும் தொழும் நாளை எதிர்பார்த்து.........
இது நடந்தால், ஊருக்கு நல்ல முன்மாதிரி. நம் ஜாமத்தில் உள்ள அனைவர்க்கும் பெருமை. இன்ஷா அல்லாஹ.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross