செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM Sajith (DUBAI)[11 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10292
சகோதரர் அப்துல் காதிர் மற்றும் சகோதரர் ஜுபைர் அவர்களுக்கு,
நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்தை பேரவையின் செய்தி தொடர்பாளர் (அப்படி ஒருவர் இருந்தால்) எடுத்துக்கொண்டு பதில் தந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். (என்னை போன்ற நேரில் அனுக வழி தெரியாமல் தினரும் மற்றவர்களுக்கும்.)
பேரவை போன்ற அமைப்பு நம் நகருக்கு இன்றியமையாதது என்பதில் இதுவரை நான் பதித்த மற்றும் படித்த கருத்துக்கள் எல்லாமே வலியுருத்தியுள்ளதை நீங்களும் உணராமல் இருக்க வாய்ப்பிலலை.
உங்களை போன்றவர்களும் தவறை நியாப்படுத்துவது இன்னமும் எனக்கு புரியவில்லை. தவறுகள் திருத்தப்படவேண்டும் என்றால் சுட்டிக்காட்டப்படவேண்டும். இதில் பேரவையின் உள்ளே வெளியே கதை எல்லாம் வேண்டாம். தூரத்தில் இருப்பதாலோ அருகில் இருப்பதாலோ சரியும் தவறும் அதன் தன்மையை மாற்றுவதில்லை.
நகரின் 'எல்லா' ஜமாத்துக்கள் மற்றும் 'எல்லா' தொண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியது என்ற வர்ணனை - இது பொது அமைப்பு என்பதை ஒப்புக்கொள்வதானால், வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கும், பிடித்தவர், பிடிக்காதவர் எல்லோரின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும். (கட்சி நடத்துவது போல எதிரிக்கு பதில் அளிக்க தேவையில்லை என இருக்க இயலாது - மற்றவர்களை எதிரிகளை பார்க்க துணியும்வரை)
சுனாமி குடியிருப்பு விசயத்தை கிழற வேண்டாம் என விடுகிறேன், நடந்தது எல்லோருக்கும் தெரியும் (தனியாக தளம் அமைத்து எழுதும் அளவுக்கு - தயவு செய்து நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டாம்.
இந்த முறை தேர்தல் விசயத்தில், நடந்தவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தவறும் அதை மறைப்பது, மழுப்புவதுமாக நடந்து கொண்டது சரியில்லை. இது உண்மை , ஊர் வாயை மூட முயல்வது நீங்கள் சொல்லும் 'புத்திக்கூர்மை' இல்லை. ஒரு தவறை இன்னொரு தவறால் மறைக்க இயலாது என்ற பாடத்தை இந்த தேர்தல் நமக்கு சொல்லித்தந்து விட்டது.
நல்ல அமைப்புக்கு வெளிப்படை தேவை. பொது விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தது என தெளிவாக பேரவையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச்சூழலில் பேரவை நடந்து கொண்ட விதம்தான் நீங்கள் குறிப்பிடும் "வெளிப்படை" என்றால் அகராதியைத்தான் மாற்றவேண்டும்.
வெளியில் இருக்கும் தங்களைப்போலவே பலரும் ஊர் நன்மைக்காக பலதும் செய்கிறார்கள். இதுவும் செய்யவில்லை என்றால் இந்த அமைப்பு தேவையில்லை என் வாதிட்டிருப்போம். ஆனால் இது உண்மையில் ஊரில் எல்லா மக்களையும் உள்ளடக்கிய பொதுவான அமைப்பாக நடந்து கொண்டதா? இறைவனுக்கு அஞ்சி உங்களையே கேட்டுப்பாருங்கள். (மறுத்தால் அதையும் பட்டியலிட முடியும்).
தேவை நல்ல, பொதுவான ஒரு அமைப்பு - அந்த தகுதியை சிலரின் தனி விருப்பம் ஈடேர இடம் கொடுத்ததால் பேரவை காயலிரின் நம்மிக்கையை இழந்துள்ள (இதையும் நீங்கள் சிலர்தான் என ஒதுக்கிவிட முனையலாம்)உண்மையை மறுப்பதும், மறைப்பதும் சுமூகமான சூழ்நிலையை தாராது.
இதை சரிசெய்ய, ஒரேவழிதான் உள்ளது. எல்லோராலும், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காலவறையரை நிர்னயம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகக்குழு வேண்டும் அதற்கு முன்வருவதுதான் வழி.
பொதுசேவை ஆர்வம் காயலரின் பொழுதுபோக்கு, இது இல்லாதவர்கள்தான் அதிசயம் நமதூரில். காலம் காலமாக இதில் போட்டி இருந்ததும், போட்டியால் ஒன்றுக்கு இரண்டாக தண்ணீர் தொட்டி துவங்கி கால்பந்து மைதானம் தொடர்ந்து, இன்று இரண்டு பைத்துல் மால் வரை போட்டி நல்லது நடக்க உதவிய கதை எல்லோரும் அறிவோம்...
அதே சூழ்நிலையை பேரவையின் பிடிவாதம் ஏற்படுத்துமானால் அதிலும் இறைவன் நல்லதையே நாடியிருப்பான் என்றே நம்புகிறேன்.
MEANS ARE AS IMPORTANT AS IT ENDS. நல்ல நோக்கங்களுக்காக தவறு செய்யலாம் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடவென்டிய அவசியமில்லை.
Ball is now in AP's court.. Let's believe they'll play a fair game.
_____________________________________________
கயிற்றை பிடிக்க பலரும் மேற்கோள் காட்டியுள்ள இறை வசனம்: இறைவனின் கயிற்றை ஒற்றுமையாக பிடிக்க சொல்வதை, எந்த கயிறானாலும் பரவாயில்லை, கயிறுதான் முக்கியம் இறைவன் இல்லை என்பது போல உபயோகிப்பது வேதனைக்குறியது.!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross