செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனைவரும் நம் அனைவரின் செல்வாக்கு பெற்ற நன்றிக்குரிய நல்லோர்கள். posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம்.)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10303
அஸ்ஸலாமு அலைக்கும்.
மலபார் மற்றும் திருவனந்தபுரம் நற்பணி மன்றங்களை
சார்ந்த நம் மக்கள்கள் காயலில் இருந்து
நேரடி பேருந்து வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாக
பேராவல் கொண்டு முயற்சித்து வந்தாலும்
அண்டை மாநிலம் என்பதால் ஆளும் அரசுகள்,
அதிகாரிகள் இது விசயத்தில் தயக்கம் கொள்வது நியாயமே.
எல்லாவற்றையும் நேர் செய்து இப்பொழுது பேருந்தில்
பேர்உவகையுடன் பயணித்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
இதற்காக அவர்கள் சார்பாகவும் முயற்சித்து இருந்தாலும்
நமதூர் பேரவையின் வழிகாட்டும்,ஒத்துழைப்பும்
கொஞ்சமாக கூட இருக்கலாம்.
சக மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன்
ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தாதவன் ஆவான்
எனும் நபிமொழியை உணர்ந்த நபி வழி நடக்கும்
நல்லவர்கள் நிறைந்த நற்பணி மன்றம்
இதனால் நன்றி பெறுக்கோடு நிறைவேற்றிய நல்லதோர் தீர்மானம்.
பேருந்துக்கு வாக்களிக்க பேருந்தில் வரும்
பெரு மக்களே வருக வருக.
அன்பு சாஜித் அவர்களே நீங்கள் எனக்கு
அண்ணனோ தம்பியோ தெரியவில்லை
இருந்தாலும் காக்கா என்ற மரியாதையோடும்
மனம் திறந்து வேண்டுகின்றேன்.
நீங்கள் பதிவு செய்யும் அனைத்து கருத்துகளிலும்
மரியாதைக்குரிய வஹிதா லாத்தா அவர்கள்
ஏதோ உங்களுக்கு மட்டும் தான் உரியவர் என்று
மார்தட்டி முன் நிறுத்துகிறிர்கள்..
அவர்கள் அன்று நம் நகர் மன்றத்திற்கு மட்டும் தான்
தலைவராக இருந்தார்கள்.
இன்றோ அவர்கள் பேரவை வழி நடக்கும் ஆயிரம் ஆயிரம்
மக்களின்(உங்கள் மொழியில் அடிவருடிகள்,அடிமைகள்)
நெஞ்சங்களில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய
ஒப்பற்ற ஒரு பெண்மணியாக அதுவும் நன்மணியாக,
பொன்மணியாக இடம் பிடித்துள்ளார்கள்.அல்லாஹ் அவர்களுக்கு
சரிர சுகத்தை கொடுத்து சந்தோசமாய் வாழ நல் அருள்புரிவானாக ஆமீன்.
சகோதரி மிஸ்ரியா அவர்களின் உம்மா வேட்புமனு தாக்கல் பண்ணியதற்கு
நெஞ்சில் சந்தேக நோய் கொண்டு குழாய்யடி சண்டை பிடித்த நம்மவர்களுக்கு
இதோ விளக்கம்.
தேர்தல் அன்று பூத்துக்கு மற்றும்
வாக்கு எண்ணும் இடத்தில்
வேட்பாளரின் ஏஜண்டாக மேலும் ஒரு பலம்,பயன்
கிடைக்கும் என்று அரசியல்வாதிகளின்
சமயோசித புத்தியும்,சாணக்கியமும் தான்.புரிந்து இருக்கும்.
உடனே பற்றும் கற்பூரமாக இல்லை என்றாலும்
வாழை மட்டைகளாக இல்லாது இருப்போமாக.
ஊரில் உள்ள பொதுநலவாதிகள் ஒண்ணும்
தூக்கத்தில் இல்லை உங்களை விட பலமடங்கு விழிப்போடு உள்ளார்கள்.
எல்லாம் அறிந்தவனான என் அன்பு நண்பன் ஜமாலுக்கு நான் ஒன்றும்
சிரமப்பட்டோ,கைக்கூலி பெற்றோ பேரவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை .
நான் சார்ந்த முஹியதீன் பள்ளி சார்பாக அடியேன் வாக்களிக்கும் சமயம்
எங்களோடு வாக்களித்த
நீ சார்ந்த அல் அமீன் நற்பணி மன்றம் மூலம் வாக்களித்த
எம்.எம்.ஷாகுல் ஹமீது தம்பி இடம் வாக்களித்த விபரம் கேட்கவும்.
அல்லது உனக்கு உடன்பாடான அஹ்மத் நைனார் பள்ளி மற்றும் ஆறாம்பள்ளி
மக்களிடம் கேட்டு தெளிவு பெறவும்.அல்லது உன் மச்சானும்
என் அன்பு தம்பியுமான பிரபு.நூருதீன் இடம் கேட்டு பார்க்கவும்.
27 ஆண்டுகால சிறப்புக்குரிய நாங்கள் சார்ந்த ரஹமத்துன்-லில் ஆலமீன்
மீலாது பேரியம் மற்றும் சமூக நல பேரவைக்கு இன்று வரை
எந்தவித அங்கிகாரமும் தாராது,கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்
உதயமான எண்ணில் அடங்கா உறுப்பினர்களை கொண்டுள்ள
பதிவு பெற்ற உலக காயல் நல மன்றங்களின்
கல்வி கூட்டு அமைப்பான இக்ராஹ் கல்வி அமைப்புக்கும் இன்று வரை
எந்தவித அங்கிகாரமும் தாராது,
இந்த ஒரு ஆண்டுக்குள் ஆரம்பிக்க பட்ட
இரண்டு அமைப்புகளுக்கு அங்கீகாரமும்,அழைப்பும்
வாக்கு அளிக்கும் உரிமையும் வழங்கிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை
இன்னும் எங்களுக்கு வியப்புக்கு உரியதாக விந்தை நிறைந்ததாக உள்ளது.
வல்லோன் அல்லாஹ்,அவனது நபிகள் கோமான் அவர்களின்
அங்கிகாரம் ஒன்றே போதும்.
இப்பொழுது தமிழகத்தை ஆளும் தமிழக முதல்வர் புரட்சி தலைவி அவர்கள்,
இதற்க்கு முன்னால் ஆண்ட தமிழின தலைவர் கலைஞர் அவர்கள்,
இன்றைய இந்தியாவை நல் ஆட்சி செய்யும் காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள்,
தமிழக எதிர்க்கட்சி தலைவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்,
மற்றும் அனைத்து கட்சிகளின் மரியாதைக்குரிய நிர்வாகிகள் எல்லோரும்
இந்த காயல்பட்டினத்தின் மீது அளவு கடந்த மதிப்பால் வேட்பாளரை
அறிவிக்காது,போட்டி இட செய்யாது சொல்வாக்கு காப்பாற்றிய அவர்கள்
அனைவரும் நம் அனைவரின் செல்வாக்கு பெற்ற நன்றிக்குரிய நல்லோர்கள்.
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.8508570955
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross