Re: விளக்கு மாமா வின் தேர்வு முற்றிலும் வெளிப்படையானது !! posted byarabi haja (Hong Kong)[11 October 2011] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 10344
ஐக்கிய பேரவையின் செயலர் ஹாஜி பிரபு சுல்தான் அவர்களின் அறிக்கையை படித்தேன். அதில் அவர்கள் தற்போதைய தலைவரின் தேர்வை நியாயப்படுத்த, விளக்கு மாமா வின் தேர்வை தேவையில்லாமல் தவறான முன்னுதாரணமாக இழுத்திருப்பதாகவே நினைக்கிறேன். விளக்கு மாமாவின் தேர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது.
அந்த தேர்வு நடவடிக்கையில் நேரடியாக எங்கள் ஜமாஅத்தின் பிரதிநிதியாக அனைத்து ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொண்டவன் என்கின்ற முறையில், அவர்களின் கருத்தில் இருந்து மாறுபடாமல் என்னால் இருக்க முடியவில்லை. குறை கூறும் நோக்கு இல்லாமல், சரித்திரம் தவறாக எழுத படக்கூடாது என்ற உந்துதலால் இதை எழுதுகிறேன். சில விளக்கங்கள் இதோ!
1 . விளக்கு மாமாவும், பாதுல் அஷாப் ஹாஜியும் போட்டியாளர்கள். இருவரும் எல்லா நிலையிலும் சம தகுதியும், பன்முக அந்தஸ்தும் திறமையும் பெற்றிருந்ததால், தேர்வு என்பதே அன்று அனைத்து ஜமாஅத் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய சவாலானது. கடினமானது .எனவே பல கூட்டங்கள் நடத்த வேண்டியதாயிற்று. யாரை தேர்வு செய்வது என்பதில் ஏற்பட்ட பிரச்னை, ஒரு முடிவு எட்ட முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் 'நீங்களே உங்களுக்குள் ஒருவரை தேர்வு செய்து (இன்னொருவர் விட்டுகொடுத்து) கொள்ளுங்கள்' என்று கேட்கவேன்டியாதயிற்று. அன்று இருந்த பெரியவர்கள் பழைய (பிரிவினை) சரித்திரத்தை நினைத்து எந்த தவறுக்கும் (மீண்டும் ஒரு பிரிவினைக்கு அவர்கள்) இடம் அளிக்கவில்லை. அந்த தேர்வின் முழு விபரமும் எழுத இங்கு இடம் இல்லை.
இப்போதைய நிலை அப்படியா ? சகோ. வகிதா அவர்களும் சகோ. மிஸ்ரியா அவர்களும் சம திறமையில், நிலையில் (வயது மற்றும் அனுபவம்) உள்லோரா ? அனைத்து தகுதிகளும் உள்ள வகிதா விற்கு 16 ஒட்டு , ஊர் நிர்வாகம் பற்றிய பால பாடமே தெரியாத, அனுபவம் ஏதும் இல்லாத மிஸ்ரியா விற்கு 40 ஒட்டு. ஊர் நலனில் அக்கறை உள்ள உங்களை போன்றோர் இப்படி நடக்க அனுமதித்தது எப்படி ? விளக்கு மாமா தேர்வில் யாருக்கும் அநீதி இளைக்க அன்று யாரும் முயலவில்லை. முடியவும் முடியாது. ஆனால் இன்று என்ன மர்மம் நடந்தது ? இதை அனுமதித்து சரியா ? 40 வாக்குகள் மிஸ்ரியா பெறுமாறு நடந்த ஏற்ப்பாடு என்ன ? இதற்காக தங்கள் வருந்துகிறீர்களா ?
2 . விளக்கு மாமாவின் தேர்வில் எந்த சந்தேகத்திக்கும் இடம் கொடுக்கா வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாகவும் வெளிப்படையாகவும், அனைத்து ஜமாத்துக்கும் கால அவகாசம் கொடுத்து வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடைபெற்றது. அன்று போட்டி வேட்பாளர் ஹாஜி பாதுல் அஷ்ஹாப் அவர்கள் சாதாரணமானவர்களா ? போட்டிக்கான அனைத்து காரணிகளும் இருந்தன. அன்று இருந்த பெரியவர்கள் நடுநிலையாக அழகாக அதை செய்து முடித்தனர். எந்த குறைக்கும் இடம் கொடுக்கவில்லையே !
இப்போதய தேர்வு அப்படியா ? பேரவையின் பொறுப்பான பதவியில் உள்ள நீங்கள் நீதிபதி அந்தஸ்தில் (அன்று போல்) இருந்து நடு நிலையாக அல்லவே தேர்வை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவசர கதியில் அள்ளி தெளிர்த்தற்போல் நடந்தது தெரிய வில்லையா ? எப்படி இரண்டும் சரி ?
3 . விளக்கு மாமாவின் தேர்வையும், தற்போதைய தேர்வையும்தான் உதாரணத்திற்கு இழுக்க வேண்டும் . நாச்சி தம்பி அவர்களும், வகிதாவின் முந்தியதும், வாவு அப்துர்ரஹ்மான் ஹாஜியின் தேர்வும் மறைமுகமானது. (உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள்). மறைமுக தேர்வானதால் போட்டியாளர்கள் என்கின்ற பிரச்னை எழாது. குறைந்த எண்ணிக்கை உள்ள உறுப்பினர்களை சமாளிபது மிக எளிது. ஆனால் நேரடி தேர்வில் அப்படி இல்லையே ? பிரச்சினைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் வாய்ப்பு உள்ளது என்பதை முன்னமே வுணர்ந்து, அதற்க்கான வாயில்களை அடைத்து அவற்றை வெளிப்படையாகவும், பல கட்டத்தில் கலந்து ஆலோசித்தும் அல்லவா இறுதி முடிவை எட்டியிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு மறுக்க பட்டதன் காரணம்தான் என்ன ? தயவு செய்து சொல்லுங்களேன் ?
வகிதா மற்றும் மிஸ்ரியாவின் தேர்வு அவ்வாறு வெளிப்படையாக, பல கட்ட ஆலோசனைக்குப்பிறகு நடந்ததா ? இறுதி முடிவு எட்டப்பட்டதா ? தயவு செய்து உண்மையை வெளிப்படுத்துங்களேன். மக்கள் சில விளக்கங்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கான விளக்கங்கள் இல்லையே ?
எப்படி விளக்கு மாமாவின் தேர்வை மிஸ்ரியாவின் தேர்வுக்கு இணையாக வாதிக்க முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross