Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[11 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10347
Re: comment # 44
முதலில் தெரிந்துகொள்ளுங்கள் இது சுனாமி குடியிருப்பு Project அல்ல. Slum Clearance Board ( குடிசை மாற்று வாரியம்) எடுத்து நடத்தும் Project. முதலில் தனி நபர்கள் பெயரில் வழக்கு போட்டு இதற்கு Stay வாங்க முயற்சி நடந்தது. இரு முறை தோல்விதான். கடைசியாக போடப்பட்ட வழக்கு நமது நகர்மன்றம் சார்பாக தற்போதைய தலைவர் அவர்கள் பெயரில் போடப்பட்டது.
இது விசயமாக ஜலாலியாவில் நடந்த ஜமாஅதினர்கள் கூட்டத்தில் முதலமைச்சருக்கு (கருணாநிதிக்கு) பொதுமக்கள் சார்பாக 5 ,000 ௦௦௦ Post Card போடும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்பொழுது எங்கள் ஜாமத்தை சார்ந்த பொறியாளர் ஷேக் அவர்களும் நானும் எழுந்து எங்களுடைய கருத்தை (Infact we advised aikkiya peravai to invoke CRZ Act) சொன்னோம். அந்த கூட்டத்தில் பொறியாளர் சேக் அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் CRZ Act in முக்கியத்திவத்தை பற்றி பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். அந்த கூட்டத்தில் ஐக்கியமான் சில செல்வந்தர்களும், பிரபுக்களும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
மறுப்பதற்கு அவர்கள் எடுத்துவைத்த வாதம் அப்பொழுது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.. ( சில நாட்களுக்கு பிறகு அதிலுள்ள பயம் கலந்த சுயநலம் தெரியவந்தது). இதெல்லாம் பழைய கதை அதற்குள் இப்பொழுது செல்ல நான் விரும்பவில்லை.
தற்காலிக தடை விதித்த நீதமன்ற ஆணையின் நகலை பெற ஐக்கிய பேரவையில் பொறுப்பிலுள்ள நபரை இருமுறை அணுகினேன். ஏதோ இராணுவ ரகசியம் போன்று அதன் நகல் தர மறுத்துவிட்டார்கள். Rs. 1,500/- செலுவு செய்தால் நீதிமன்றதிலிருந்தே அதன் நகலை பெறமுடியும் எனபது கூட தெரியாதவர்கள் பாவம். (ஒரே ரூபாய் செலவழித்து Photocopy எடுக்கவேண்டிய ஒரு செயலுக்கு Rs.1,500/- செலவு செய்வது மடமை).
தூத்துக்குடியில் என்னுடைய நண்பர் (வழக்கறிஞர்) மூலமாக, நீதிமன்ற கிளையின் பெயர், வழக்கு எண், வாதி, பிரதிவாதி போன்ற விபரங்களை அறிந்துகொண்டு Right To Information Act மூலம் அந்த தற்காலிக தடையின் காரணங்களை கேட்டு எழுதியுள்ளேன். இன்ஷா-அல்லாஹ், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அந்த நகல் எனக்கு கிடைக்குமென்று எண்ணுகிறேன்.
ஒரு நீதிபதி தீர்ப்பு கூறும் போதோ அல்லது தற்காலிக தடை விதிக்கும்போதோ அதற்க்கான காரணங்களையும் அந்த தீரிப்பில் எழுதுவார். அதன் நகல் வாதிக்கும், பிரதிவாதிக்கும் கொடுக்கப்படவேண்டும் என்பது நீதியின் ஒரு பகுதி.
மேற்படி வழக்கில் தற்காலிக தடை விதித்த நீதிபதி, "காயல்பட்டின மக்கள் போராட்டம் செய்தார்கள். அதனால் நான் இந்த தற்காலிக தடையை வழங்குகிறேன்" என்று அந்த ஆர்டர் இல் எழுதிஉள்ளார் என்று சகோ., அப்துல்காதர் சொல்ல வருகிறாரா? அதுதான் அவர் கூற்றிற்கு அர்த்தம்.
நீங்கள் சொல்லுவது உண்மை என்றால் ஆதாரத்துடன் நிருபியுங்கள்.
இதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசிய எனக்கு இல்லை. இருந்த போதிலும். உங்களைப் போன்று வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதன் முழு விபரம் தெரிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதற்காக சொல்லுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross