ச்சும்மா ஒரு கற்பனை posted byMohideen (Jeddah)[12 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10447
சகோதரி மிஸ்ரியா: என்னை விட சகோதரி ஆபிதா அவர்கள் திறமை மிக்கவர்களாக விளங்குவதால் நான் பொது வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன்.
ஐ.பே: நன்றி! சகோதரி மிஸ்ரியா அவர்கள் போட்டியிலிருந்து விலகுவதால் அவருக்கு அடுத்த படியாக வந்த சகோதரி வஹீதா (மிஸ்ரியா உம்மா இல்லை) அவர்களை பொது வேட்பாளராக அறிவிக்கிறோம்.
கருத்து புலிகள் (தற்போதைய ஐ.பே எதிர்ப்பாளர்கள் - 100%):
வாழ்க ஒற்றுமை. ஐக்கிய பேரவையின் முடிவு மிகவும் பாராட்டுக்குரியது. நாம் அவசியம் ஊர் ஒற்றுமைக்காக பாடு பட வேண்டும். நம் ஊர் பெரியவர்கள் எந்த அளவுக்கு ஊரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள் எனபது வெள்ளிடை மலை. எனவே நாம் சகோதரி வஹீதா அவர்களின் வெற்றிக்கு அரும்பாடு பட வேண்டும். போட்டி வேட்பாளர் சகோதரி ஆபிதா அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? அவர்களுக்கு ஸ்கூல் நடத்துவதை தவிர வேறென்ன தெரியும். ஊர் ஜமாஅத் ஆதரவு உண்டா?
கருத்து சிங்கங்கள் (தற்போதைய ஐ.பே ஆதரவாளர்கள் - 50%): மீண்டும் அதே பழைய பல்லவி - - - ஊர் ஒற்றுமை! பெரியவர்களை மதிக்க வேண்டும்.
கருத்து சிங்கங்கள் (தற்போதைய ஐ.பே ஆதரவாளர்கள் - Balance 50%): நாம் போட்டி வேட்பாளர் சகோதரி ஆபிதாவைத்தான் (காயல்வாசி) ஆதரிக்க வேண்டும். அவர்களுடைய ஆற்றல் என்ன? அறிவு என்ன? சகோதரி வஹீதா அவர்களின் முந்தைய 5 வருட நிர்வாகம் எப்படி இருந்தது என்பது எங்களுக்கு தெரியாதா? ஐ.பேரவையின் இந்த முடிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross