காயலானாக பிறந்த அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி. அனைவரும் தங்கள் கணடனத்தை தவறாது பதிவு செய்யவும் posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம் )[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10472
அஸ்ஸலாமு அலைக்கும்...
எங்கள் மரியாதைக்குரிய இந்த வலை தளம் நடத்தும் நல்லோர்களே
உங்களது வலைத்தளம் மற்றும் அறக்கட்டளை மூலமாக
நம் காயல் பதிக்கு எத்தனையோ பல நன்மைகள்,விழிப்புணர்வுகள்
செய்துள்ளிர்கள்.மனமார பாராட்டுகின்றோம்.
இதுநாள் வரை இத்துடன் 7369 செய்திகளை எங்களுக்கு தந்துள்ளிர்கள்.
அத்தனை செய்திகளிலும் தரம் தாழ்ந்த,
ஆதாரம் இல்லாத செய்தி இது ஒன்றே என்று அறிகின்றோம்.. மிகவும் மோசமான செய்தியும் கூட.
மிகுந்த வேதனை அடைகின்றோம்.வெட்க படுகின்றோம்.
சாதாரணமாக நாங்கள் கருத்து பதிவு செய்யும் பொழுது பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து நோண்டி நுங்கு எடுக்கும்
நீங்கள் இதனை எப்படி வெளியிட்டீர்கள்...
நீங்களும் இந்த ஊரை சார்ந்த எங்களில் ஒருவர் தானே..
இதன் மூலம் நம் அனைவருக்கும் தலை குனிவு தான்.
அடுத்து ஒருவர் தருவார் இதை வீட மிக மிக சாதாரண செய்தி
காயல் பட்டணத்தில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக,
கள்ள துப்பாக்கி செய்வதாக ,கள்ள நோட்டு அடிப்பதாக,
இதனையும் வெளியிட்டு இதற்காக
புகார் தெரிவிக்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
அது சார்ந்த துறை அதிகாரிகளின் விபரமும் இது போன்று விபரமாக தந்தாள் என் தாய் திருநாட்டுக்கு உதவியாக இருக்கும்.
மிச்சம் மீதி உள்ள எங்கள் காயலின் மானத்தை குழி தோண்டி புதைத்துவிட்டால் நல்லது.
நம்மை கருவறுக்க நினைக்கும் பல கூட்டங்களுக்கு இது இனிப்பான செய்தி.
கொள்கைகள்,கட்சிகள்,பகுதிகள்,மதம்,ஜாதி,இனம் பல என்று
பிரிந்து இருந்தாலும் சொந்த பூமி காயல் என்றும்
வந்து விட்டால் இதனுடைய கண்ணியத்தையும்,கலாச்சரதையூம்
சிரழிக்க,காட்டி கொடுக்கும் தீயோரை ஒரு மொத்த குரலில்
எதிர்ப்பவர்கள்
இந்த புகார் கொடுத்த புண்ணியவான்கள் யார்??? இதற்கான ஆதாரம் என்ன??
இத்துறை வல்லுனர்கள் சென்னையில் இருந்து இதற்கென்று காயல்பட்டினம் வருகின்றர்களா ????
நீங்கள் தான் இந்த காயலுக்கு கல்வித்துறை,
மருத்துவத்துறை மற்றும்
பல்வேறு வல்லுனர்களை கொண்டு வந்தவர்கள் இது போன்று
இத்துறை வல்லுனர்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்..
அமெரிக்கா,அண்டார்டிகா எந்த இடத்தில் இருந்து வந்தாலும்
உலகமே புகழும் எங்கள் ஜனநாயக இந்தியாவின்
தேர்தல் கமிசன் அதிகாரிகள்,சட்டம்,கண்காணிப்பு
மற்றும் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,சட்டம் ஒழுங்குகளை
பேணி பாதுகாத்து வரும் காவல்துறை அதிகாரிகள்,
எல்லா வித முன்னேற்பாடுகள் செய்து காயல் மட்டும் அல்ல
ஒட்டு மொத்த தமிழகத்திலும் அமைதியான,நேர்மையான வகையில் நாடே போற்ற நல்ல படி நடத்தி காட்டுவார்கள்.
அனைத்து மக்களும்
தங்களது ஜனநாயக கடமைதனை சரியாக நிறைவேற்றுவார்கள்.இன்ஷாஅல்லாஹ்.
இந்த தேர்தலில் வெற்றி,தோல்வி யாருக்கும் இருக்கட்டும்
ஆனால் நாங்கள் பிறந்த இந்த மண்ணின் மானம்,மரியாதைகளுக்கு
பங்கம் ஏற்படுத்தும் எந்த சதிகார தீய சக்திக்கு நல்ல பாடம் புகட்டுவோம்.
சாராயம் கூடவா கொடுகின்றர்கள் இதனை வெளியிட உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ???
பெண்கள் இந்த செய்தியை
பார்த்து விட்டு இப்படியுமா என முகம் சுழித்துவிட்டு
சாராயம் ஊரில் உள்ள முஸ்லிமான அனைத்து ஆண்கள்,பெண்களுக்குமா ??
என்று வேதனை பட்டதோடு சாபமும் இடுகின்றார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக.
சாளை பஷீர் கடந்த காலங்களில் ருபாய். 500 ,5000என வாங்கினாரோ
இல்லை கொடுத்தாரோ??????
காயலானாக பிறந்த அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி.
அனைவரும் தங்கள் கணடனத்தை தவறாது பதிவு செய்யவும்.
தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி
முழுமையாக நம்பி இருந்த இந்த வலைதளம்
எவனோ சொன்னதாக கூட தகவல் இல்லை?
தன் மனதில் தோன்றியதை தோல்வி பயத்திலோ
அல்லது பேரவை மீது உள்ள காழ்புணர்ச்சி எண்ணத்திலோ இந்த ஊரை துண்டாட செய்த சதியோ.இதற்கான பலனை அடைவீர்கள்.
என் பாசத்திற்குரிய அன்பு தம்பி சீனா.மொஹ்தூம் முஹம்மது,
நெஞ்சம் எல்லாம் நிறைந்துள்ள அன்பு நண்பர்கள் ரிபாயி,வங்காளம் உமர் மற்றும்
யாவர்களும் காயல் மேல் கொண்ட பாசத்தால் கண்டனம் செய்ததுக்கு நன்றி.
யாருக்கும் பல்லாக்கு தூக்கவோ,கொடி பிடிக்கவோ
இதனை நான் பதிவு செய்யவில்லை.
காயலானாக பிறந்த காரணத்தாலும்,இதனை அளவு கடந்து
நேசிப்பதாலும் எழுதவேண்டிய கட்டாயம்.
குறிப்பு.இந்த செய்தியை எந்த வித துண்டாடல் இல்லாது
அப்படியே வெளியிடவூம்...........
கவலை கொண்ட கனத்த நெஞ்சத்துடன் .....
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.8508570955
Administrator:
சகோதரர் மீரான் அவர்களுக்கு, இந்த செய்தி உட்பட எந்த செய்தியையும் ஆதாரம் இல்லாமல் காயல்பட்டணம்.காம் வெளியிட்டதில்லை.
ஊடகங்களின் பொறுப்பு எல்லோர் மனதையும் குளிர வைக்கும் செய்தியை மட்டும் வெளியிடுவது அல்ல. சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நகரில் அரங்கேற்ற திட்டம் தீட்டப்படுவதாக புகார்கள் எழும்போது, அதனை மக்களுக்கு எடுத்து செல்வதும் ஊடகங்களின் கடமை.
ஊடங்கள் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஜனநாயகத்தின் மற்றொரு அங்கமான மக்களாட்சியை / தேர்தலை சீர்குலைக்க திட்டம் தீட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழும் போது, அதனை மக்களுக்கு எடுத்து செல்வது ஊடகங்களின் தலையாய கடமை.
இது போன்ற தருணங்களின் - இது போன்ற குற்றச்சாட்டுகளை விசாரித்து, வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தாமல் இருப்பது - ஊடகங்கள் தங்கள் கடமையில் இருந்து தவறும் செயலாகும்.
காயல்பட்டினத்தில் இஸ்லாமியர்கள் மட்டும் வாழவில்லை. சாராயப் புழக்கம் நகரின் இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இல்லாவிட்டாலும், பிற சமுதாயத்தினரால் அப்பழக்கம் தவறாக காணப்படுவதில்லை என்பதை - இச்செய்தியை படிக்கும் போது - மனதில் வைத்துக்கொள்ளவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross