நம்ம தமிழ் தான்க சரியில்லை... அவங்க சரியாத்தான் இருக்காங்க... posted byM Sajith (DUBAI)[12 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10491
அரசியலில் நிறந்தர எதிரியுமில்லை, நிறந்தர நன்பனுமில்லை என்பதை இந்தக்கூட்டம் மீண்டும் ஒருமுறை உரக்க சொல்லியிருக்கிறது.
மெகாவுக்கு வந்த கூட்டம், கலைஞருக்கும், வடிவேலுவுக்கும் என்றால், இது அவர்களுடன் சேர்ந்து விஜயகந்த், பேரசிரியர் மற்றும் அன்னை சோனியாவுக்கும் சேர்ந்து வந்த கூட்டம் என்றால் மிகையாகாது.
ஐக்கியப் பேரவையை அரசியல் கட்சிகள் ஆகிரமித்துள்ள உண்மையை சந்தேகமற மிக தெளிவாக படம் போட்டு காட்டியதுக்கு முதலில் நன்றிகளை சொல்லியே ஆக வேண்டும் - முதன் முதலில் பேரவை வெளிப்படையாக நடந்த விஷயம் இதுதான்.
பேரவையின் வேட்பாளர் தனது அறிக்கையில் (பார்க்க NEWS ID # 7350) வாக்குறிதியளித்தது போல குடும்பத்தலையீடு அறவே இல்லாமல் அவரது சகோதரரால் அறிமுகம் செய்யப்பட்ட அனுபவம் புதுமையாகத்தான் இருந்தது. இது போலவே, மக்களும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், குடும்பத்தலையீடு இல்லாமல் சகோதரர், கணவர், மாமா, மச்சான் போன்ற நம்பிக்கையானவர்களை மன்றத்துக்கு அனுப்பி அன்றாட அலுவல்களை திறம்பட செய்து "கொல்வார்கள்" (இது எழுத்துப்பிழை இல்லை) என்ற நம்பிக்கை வந்துள்ளது - மிக்க நன்றி (நாளை நடக்கப்பொவதுக்கான PREVIEW - இரண்டாவது வெளிப்படை).
அரசியல் கட்சியினர் வழமையாக பாடும் தலைமைதுதியை பேரவைக்காக மாற்றிப்பாடியதும், பட்டியலிடுவேன், நெற்றியில் சுடுவேன் வீர வசனங்களும் மிகவும் அறுமையாகவும் நிரம்ப நாள் ஊரில் இல்லாத நம்மவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது.
குறிப்பாக கின்னஸ் புத்தகத்தில் கிழிந்த பக்கமாக தேடிப்பார்த்து போடவேன்டிய இனிப்பு தத்துவமும், அம்மாவை அனுகும் முறையும் ராமாவரத்திலும், போயஸிலும் 'அடி'மட்டத்திலிருந்து வந்த அனுபவசாலிகளின் வாயால் கேட்டது பொருத்தமாக இருந்தது.
சிறந்த நாவன்மையையும், நிதானத்தையும் ஒரு சேரப்பெற்ற எங்கள் அமானுல்லா மாமா மிகவும் சிரமமெடுத்து பேரவைக்கும், பேரவையை தாங்கி பிடிக்க கைகொடுக்கும் ஜமாத்துக்கும் அறிக்கை உபயத்தில் எழுந்த கேள்விகளுக்கு அதைவிடவும் சிரமமெடுத்து பதில் சொல்லியதில் ஒரு தெளிவு.. வளைதலத்தில் எழுதினால் கேக்காது, நேரில்தான் 'அனுக' வேண்டும் என் பிடிவாதமாக இருந்த சகோதரர்களுக்கு வரிக்குவரி எழுதுகிறார்கள், எழுதுகிறார்கள் என பேசி வாயடைக்க வைத்துவிட்டார்கள்.
அதோடு, TV ல வருகிற "நம்பினால் நம்புங்கள்" ஸ்டைல சில அறிய பல தகவல்களையும் தந்துள்ளார்கள், குறிப்பாக தாயாரின் மனுத்தாக்கள் - இதன் சிதம்பர ரகசியத்தை நேற்றே வாழைமட்டைகளுக்கு தெரியத்தந்தது மீரான் காக்காவின் சொந்த யோசனை என நினைத்து அவ்ர்களை சாடிவிட்டேன்.(பார்க்க NEWS ID # 7360 Comment # 28 & 38 ) - இது தெரியாமல் சகோ. ஜாபர் சாதிக், நாம் இவர்களுக்கு சொன்ன தூங்கும் தத்துவத்தை நமக்கே சொல்லியிருக்கிறார் - சரி தூக்கத்தில் சொல்லியிருப்பார் என் விடுவோம்.
ஆகா.. சுவாரஸ்யம் போச்சேன்னு வருத்தப்படாம இருக்க வஹிதா ராத்தாவை ஏன் நிறுத்தலன்னு சொன்ன காரணம் இருக்கே அதான்க ஹைலைட் (மூன்றாவது வெளிப்படை) நீதி, நேர்மை, நம்பிக்கை இதுக்கெல்லாம் அகராதில தப்பா எழுதி வச்சிருக்கிற பொருளை எல்லாம் ரப்பரால அழிச்சிட்டு மாத்தி எழுதவேண்டிய முக்கியமான அம்சம்
கையோட ஒத்துமை, சந்தர்ப்பவாதம் இது இரன்டுக்குமே ஒரே பொருள்தான்னும் மறக்காம எழுதனும் இல்லேனா கஷ்டப்பட்டு ஒரே மேடைல கொன்டுவந்த எல்லா அரசியல் கட்சியினரின் ஒத்துமையும் வரும் நாடளுமன்ற தேர்தல்ல நாசமாப்போயிடும். ஒத்துமை மிக முக்கியம் இல்லயா..?
இது போல ஆலோசனயை தீர்மாணம் என்றும், ஒருசாரார் என்பதை ஒருமித்த என்றும், கேள்வி சந்தேகம் போன்றதை ஆர்வக்கோளாறு என்றும் பல புழக்கத்தில் உள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை மாற்றி புதிய அகராதி ஒன்றை பேரவை சார்பில் வெளியிட்டால், கடல் கடந்து ஊர் நடப்புக்களில் ஆர்வம் காட்டும் காயலர்கள் தாங்கள் செய்திருக்கும் இந்த ஆறிய சாதனையை புரிந்து கொள்வோம்.
அந்த அகராதியின் வெளியீட்டு விழாவையும் இது போலவே விமரிசையாக செய்யுங்கள்.. சேர்மன் இலேனா அவங்க சொந்காரங்க யாரவது வருவாங்க.
மேடைல கூட்டம் ரெம்ப பலமா இருந்தது,
பேரவை கட்டுப்பட்டில் தான் தலைவி இருக்கனுமுன்னு அட்வைஸ் பன்னிட்டாங்களே..பெரியவங்க சொன்ன கேட்டுவேற ஆகனுமே..
பேரவையும் 23 ஜமாத்தும் 15 பொதுனல அமைப்பும் இல்லாம ஏதும் செய்யாதே!! அப்ப நகர்மன்றத்துக்கு தலைவிகூட எல்லோருமா போகபோறீங்க..?
பேசாம நகர் மன்றத்த ஜலாலியக்கு மாத்திருங்க இட நெருக்கடி இல்லாம இருக்கும்..
_______________________________________________
கேக்கிறவன் கேட்டுகிட்டு இருந்தால், கேப்பையில நெய்யும் வடியும், அந்த நெய்யில நெத்திலி மீனும் ஓடும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross