Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kayalpatnam)[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10512
உள்ளாட்சி தேர்தலில் ஐக்கிய பேரவையின் பின்னடைவுகள் என்ற எனது கருதுக்கோவையை இணையத்தளத்தில் பதிவுசெய்துவிட்டு அன்று இரவு நடைபெற்ற ஐக்கிய பேரவை கூட்டத்துக்கு போனேன்.
மேடையில் அமர்ந்திருப்பவர்களைபார்தேன்.தமிழ்நாட்டை ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள துடிக்கும் கட்சி, மத்தியில் ஆளும் கட்சி எல்லோரும் ஒன்றிணைந்து இருப்பதை கண்டேன். கீரியும் பாம்பும் ஒரே இடத்தில், வேங்கையும் மானும் ஒரே மேடையில் குலாவிக்கொண்டிருக்கும்போது, கோழியும் அதன் குஞ்சுகளும் மரண ஓலம் போட்டுக்கொண்டிருக்கிரார்களே என்று மன வேதனைப்பட்டேன்.
நிறைவுரை ஆற்றிய அமானுல்லா அவர்கள் ஆற்றிய உரையில், ஐக்கிய பேரவை இருந்தாக வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை ஆனல் நிர்வாகத்தில் கருத்துவேறுபாடு இல்லை என்று சொல்லவில்லை. அதை பேசி தீர்க்கலாம் வாருங்கள் என்று சொன்னபோது மனம் சற்று இளகியது.
அடுத்த நாள் காயல் அலையன்ஸ் கமிட்டி ரியாத் முன்னாள் தலைவர் லண்டன் அபூபகர் ஹாஜி அவர்களுக்கும் சில மனக்குறைகள் இருந்ததால், அமனுல்லா அவர்களின் பகிரங்க அழைப்பை பயன்படுத்தி, முன் appointment எடுத்துக்கொண்டு காலை 11 மணிக்கு ஐக்கிய பேரவை சென்றோம். தகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்றார்கள். எங்கள் மனக்குறைகளை பகிரங்கமாக ஒளிவு மறைவின்றி பேசினோம்.
அரசியலில் பண்பட்ட அமானுல்லா மிக அருமையாக விளக்கங்கள் தந்தார். ஒவ்வொருவர இடத்திலும் ஒரு ஷைத்தான் இருக்கிறான், என்று நபிகள் நாயகம் சொன்னது 100 % உண்மை. " I MAY GO, YOU MAY GO, BUT EGO MUST GO" என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் இங்கே இரு சாரர்களுக்கிடையில் EGO வந்து, அதுவே விசுவரூபம் எடுத்து நிற்பதை உணர முடிந்தது.
தவறுகள் நடந்திருக்கிறது என்பதை அவர்கள் மறுக்கவில்லை. இனி வரும் காலங்களில் அவை சரிசெய்துகொள்ளப்படும் இப்போது நமக்குள் பேதைமை பாராட்டி அதே EGO அடிப்படையில் தேர்தலை சந்தித்தால் யார் தோற்றாலும் நமது சகோதரிகளில் ஒருவர் தோற்றார் எனபதுதான் உண்மை.
பெண்கள் தலைவர் தேர்தலுக்கு போட்டிபோடுவது செல்லாது என்ற தீர்ப்பு வந்துவிடாதா அதுவே இந்த மன மாச்சரியங்களுக்கு வடிகாலாக, மாற்று மருந்தாக அமைந்து விடாதா என்று அல்லும் பகலும் து ஆ செய்து கொண்டிருக்கும் நல்லுள்ளம் படைத்தவர்களின் து ஆ வை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.
பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது, ஆள் மனதிலிருந்து ஒரு திருமறை வசனம் வெளிவந்தது. " ALLATHEENA YUNFIQOONA FISSARRAAYI VALLARRAAYI VAL KAALIMEENAL GHAILA VAL AAFEENA ANINNAAS...... அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், வாழ்விலும் தாழ்விலும் அல்லாஹுடைய பாதையில் செலவு செய்வார்கள், கோபத்தை சவைத்து விழுங்கி விடுவார்கள், மனிதர்கள் செய்த பாவத்தை மன்னித்து விடுவார்கள்.......
என்ன அருமையான வசனம். சிந்திப்போமா,நம் இரு சாராருக்கும் அறை கூவல் விடுக்கும் வசனம் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross