Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[13 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10525
அன்பு சகோதரர் சாஜித் அவர்களே!
நான் தூக்கத்தோடு எழுதவில்லை விழித்துக்கொண்டே எழுதுகிறேன்.
தாங்கள் எழுதியிருந்தால் அந்த முன்னோரின் தத்துவம் தங்களுக்கே சொந்தமா? தாங்கள் எழுதும் வள்ளுவனின் குரலை "நான் சொன்னது " என்று சொன்னாலும் சொல்வீர்கள் போல.
மரியாதைக்குரிய சகோதரர் மக்கி நூஹு தம்பி காக்கா கூட பேரவையை அணுகி தெளிவு பெற்றபின் அவர்களது நிலையை தெளிவாக பதிவு செய்துள்ளார்கள் தங்களை போன்ற அறிவில் கூடிய அனுபவத்தில் குறைந்த சில வாலிபர்களே இன்னும் ஒற்றுமைக்கு மாறாக செயல் படுவதை உணர முடிகிறது, இது தேவையா?
நாம் மார்க்க விசயத்தில் தான் ஒன்று பட மறுத்து மூன்று பெருநாள் வரை கொண்டாடும் அளவிற்கு முன்னேறியுள்ளோம். குறைந்த பட்சம் ஊர் ஒற்றுமை விசயத்தில் ஒன்றுபடதான் ஊரில் இருக்கும் அனுபவம் நிறைந்த பெரியவர்கள் செயல் படுகிறார்கள், வெளியிலிருக்கும் நாம் அந்த ஒற்றுமைக்கு மாற்றமாக செயல் படலாமா?
வாலிபர்களாகிய நாம் அறிவில் கூடியவர்களே ஆனால் அனுபவத்தில் அவர்களுக்குமுன் குறைந்தவர்களே என்பதில் சந்தேகமில்லை.
நான் ஏற்கனவே பதிவு செய்திததில் தெரிவித்திருந்தேன். மர்ஹூம் S .K . மாமா வருத்ததோடு "தங்களை போன்ற வாலிபர்கள் ஐக்கிய பேரவையின் செயல் பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ள வருவதில்லை என" சொன்னதை. தாங்கள் ஊர் செல்லும் நேரத்தில் அங்கு சென்று ஈடு படுங்கள்.
இதற்கு முன் நமதூரில் மிகப்பெரிய மார்க்க பிரச்சனையாக இருந்த பாங்கு (அதான்) பிரச்சனையை இளைஞர் ஐக்கிய முன்னணி (Y .U .F ) மார்க்க அறிஞர்களை கூட்டி தீர்வு காணவில்லையா? ஆக ஒன்று பட்டால் எதையும் சாதிக்கலாம்.
ஆக இனியாவது பிடிவாதத்தை தளர்த்தி ஒற்றுமைக்கு கை கொடுங்கள். செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் -
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross