Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMOHAMMED ABDUL CADER (chennai)[13 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 10547
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஐக்கிய சபை என்பது எந்த ஒரு கட்சியையும் சாராமல் காயல்பட்டிணத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது இது எல்லோருக்கும் தெரியும். இவர்களின் கடந்த கால செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாச்சி தேர்தல் முதல் சமீபத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் அட்டூழியம்,சுனாமி குடியிருப்பு பிரச்சனை அப்படியே இப்போது தலைவர், துனைத்தலைவர், வார்டு உறுப்பினர் தேர்வு வரை நடைப்பெற்ற அனைத்து சம்பவங்களுமே இவர்களுக்கு எதிராகவும் , இவர்களை விமர்சனத்திற்குள்ளாக்கும் வகையிலுமே நடந்துள்ளது.
முதலில் இது இவர்களுக்கு தேவைதானா? வெளியில் போகும் எதையோ எடுத்து எதிலோ விட்ட கதை போல இவர்களுடய கதையும் ஆகி விட்டது. இவர்கள் எதற்காக இந்த அமைப்பை ஆரம்பிதார்களோ அதன் நோக்கம் எல்லாம் வீணாகிப்போய் தேவை இல்லாத குழப்பம், பிரிவிணை ஏற்பட்டதுதான் மிச்சம். சென்ற தேர்தலிலேயே பல இடங்களில் இவர்களின் செல்வாக்கு செல்லாக்காசானது மக்கள் மறக்க மாட்டார்கள். அப்படி இருக்க ஏன் இந்த முறையும் இவர்கள் தேர்தலில் தங்கள் மூக்கை நுழைத்தார்கள்.
ஊரின் ஒற்றுமையை பற்றி வாய் கிழிய பேசும் இவர்களில் சிலர் கடந்த 2006 ம் ஆண்டில் நடைப்பெற்ற உள்ளாச்சி தேர்தலில், வார்டு உறுப்பினர் முதல் துனைதலைவர், தலைவர் வரை ஐக்கிய சபையிபரால் அடையாள்ம் காட்டப்பட்ட பலருடைய வெற்றிக்கு எதிராக வேலைப்பார்த்து இவர்கள் வேலை பார்த்ததின் பலனாக பல இடங்களில் இவர்களின் சூழ்ச்சி வென்று ஐக்கிய சபை தோல்வி கண்டது ( சிலருக்கு உள் மனது குத்தும் இதனை படிக்கும் போது ) .
எல்லா சூழ்ச்சிகளையும் செய்த பின்பு அவர்கள் எப்படி இந்த முறை ஐக்கிய சபையோடு சேர்ந்து ஒரே மேடையில் ஏறுகிறார்கள். மீண்டும் தேர்தல் முடிந்து ரிசல்ட் வரும் போது இவர்களுக்கு எதிராக வேலைப்பார்ப்பார்களா? இதுதான் அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதற்கு உதாரணமோ?
ஒற்றுமையை பற்றி பேசும் இவர்கள் இந்த முறையும் சில முஸ்லிம் சகோதரர்களின் வெற்றியை பறிப்பதற்காக வேலை செய்கிறார்களே இதுதான் ஒற்றுமையா? அவர்களுக்கு யாரை பிடிக்குமோ, யாரெல்லாம் அவர்களின் பேட்சை கேட்டு நடப்பார்களோ அவர்களுக்கு மட்டும் தான் ஐக்கிய சபையின் ஆதரவா? அல்லது மக்கள் செல்வாக்கு உள்ள நல்லவர்க்கு உங்கள் ஆதரவா?
ஐக்கிய சபை தலைவர் கூட்டம் மேடையில் இருந்தது அதில் ஐக்கியம் என்று சொல்லப்படும் அளவிற்கு நிறைய நபர்கள் காணவில்லையே? ஏன் த.மு.மு.க, டி.என்.டி.ஜே, ஐ.என்.டி.ஜே, எஸ்.டி.பி, ம.ம.க இன்னும் பல இஸ்லாமிய அமைப்புக்களையும் அரவனைத்து சென்று இருக்கலாமே.
வேட்பாளர் அறிமுக கூட்டம் என்று சொல்லி விட்டு வேட்பாளரை அறிமுகம் செய்யாமலேயே விட்டுவிட்டீர்களே. யார் உங்கள் வேட்பாளர், அவருக்கு என்ன தகுதி உள்ளது, அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க என்னென்ன காரணங்கள், அவர் வெற்றிப்பெற்றால் ஊருக்கு என்னவெல்லாம் செய்வார் இப்படி பல அம்சங்கள் இருந்தால்தானே அது வேட்பாளர் அறிமுக கூட்டம் இது போன்று எதுவுமே இல்லாமல் மைக் பிடித்தவர்கள் அனைவரும் தங்களையும் தங்கள் சார்ந்துள்ள இயக்கத்தைப்பற்றி மட்டுமே அறிமுகம் செய்து கொள்வதா அறிமுக கூட்டம்.
ஏதோ ஒரு அரசியல் பொது கூட்டம் போல இருந்தது, பேசிய அனைவரும் தங்கள் கட்சியின் விளம்பரத்திற்காகவும் , அவர்களின் சுய விளம்பரத்திற்காகவும் இந்த கூட்ட மேடையை பயன் படுத்தியுள்ளார்கள் என்பது அவர்களைன் பேச்சில் இருந்தே தெரிகிறது. வேட்பாளர் தேர்வில் கட்சி சாயம் இருக்க கூடாதென்று கூறிவிட்டு இப்படி அரசியல் கட்சிகளின் பிரதிநிதைகளை மட்டுமே நம்பி எப்படி களத்தில் குதித்தீர்கள்.
இந்த பொதுகூட்டத்தில் பேசிய சிலரின் பேச்சுக்களின் வரிகளை அப்படியே இதில் நான் குறிப்பிட்டுள்ளேன் ஏனெனில் அமானுல்லா காக்கா அவர்கள் பேசும் போது “ வெப்சைட்டில் திரித்து எழுதி விடுகிறார்கள் “. என்று கூறினார் அப்படி வெப்சைட்டில் திரித்து எழுதவும் மாட்டார்கள் அப்படி எழுதினால் நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கலாமே. இவர்கள் ஒன்னும் மொட்டை கடிதம் போடவில்லையே.
“ காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இதில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் நமது ஊர் கட்டுப்படும் “.: - : ஜெயலலிதா பேரவையின் நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர்
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையில் எத்தனை ஜமாத்தார்கள் உள்ளார்கள் அதில் யாரெல்லாம் உறுப்பினர், எத்தனை தகுதியுடயவர்கள் அதில் உறுபினர்களாகவும், முக்கிய பொறுப்பிலும் உள்ளார்கள் அவர் எப்படி , எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற விபரத்தையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
"ஐக்கியப் பேரவையின் முடிவை மதித்து, எங்கள் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான எங்கள் அம்மாவே எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த நினைக்காதபோது “.: - : ஜெயலலிதா பேரவையின் நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர்
ஏன் நிறுத்தி இருக்க வேண்டியதுதானே நீங்கள் நிறுத்தினால் தி.மு.க வும் வேட்பாளரை நிறுத்தி இருக்கும் முடிவில் தி.மு.க வே வெர்றி பெற்றும் இருக்கும்.
“தலைமைக்குக் கட்டுப்பட வேண்டியது மிகவும் அவசியம்”.:- : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்.
உண்மைதான் தலைமைக்கு கட்டுப்படதான் வேண்டும் அதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். இப்படி தவறான முடிவை எடுக்கும் தலைமைக்கு எப்படி கட்டுப்பட முடியும் இவர்கள் முடிவு எடுக்கும் முன்பு மக்களை கலந்தாலோசித்தார்களா? இப்படி மக்களை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு எப்படி ஒரு ஒழுங்கான, திறமையான தலைமையின் முடிவாக இருக்க முடியும்.
'"‘படிக்காத மேதை‘ காமராஜர் போல, எழுதப்படிக்கத் தெரியாத சிலரும் போட்டியிடுவதுதான் வியப்பாக உள்ளது. ”.:- : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்.
இப்படி யாரையோ தாக்கி பேசுவதுதான் ஒற்றுமையா?
“நமதூர் வெப்சைட்டில் பல பொய்யான, அசிங்கமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை நான் அடையாளம் காட்டுவேன். அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி என்னால் பல விஷயங்களை தெரிவிக்க முடியும்.."". :- : திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன்
வெப்சைட்டில் தவறான , அசிங்கமான தகவல்களா? எங்கே நானும் தேடிப்பார்த்தேன் என் கண்களுக்கு தெரிய வில்லையே. யாரும் அசிங்கமாக எழுதவில்லை என்பதனை புரிந்து, தெரிந்து கொண்டு பேசினால் நன்று. யாரோ சொல்வதை வைத்து இப்படி மேடை யேறி பேசினால் இப்படித்தான் மைக்கை பிடுங்குவார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு கோரியதோடு அவர் தனதுரையை முடித்துக்கொண்டார்.
இவர்தான் சூழ்நிலையை புரிந்து சூழ்நிலையிலேயே பேசி இருக்கிறார் இவரின் ஓட்டு யாருக்கு?
"ஐக்கியப் பேரவையின் அரசியல் தந்திரம் தனித்துவம் வாய்ந்தது. அது நிறுத்தியிருக்கும் பொது வேட்பாளர் ஒரு நல்லவர், பொது நல ஆர்வலர். அவரை எதிர்த்து களம் கண்டிருப்போருக்கு அவர்கள் குடும்பத்திலேயே ஆதரவு கிடையாது."" : - : காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான்
யாருக்கு யார் குடும்பத்தில் ஆதரவு இல்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்.
"ஓட்டுப் போடும் விஷயத்தில் மத்திய காயல் பகுதியினரை விஞ்சிட யாராலும் முடியாது. 10 நிமிடங்கள் போதும்... அவர்கள் பெட்டியையே நிறைத்து விடுவார்கள் "".. : - : காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான்.
இவருடைய பேச்சு உளவுத்துறையினரை மிகவும் உசுப்பேற்றி இருக்க வேண்டும் அதற்காகத்தான் கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்க சென்னையில் இருந்து பறக்கும் படையினர் காயல்பட்டணம் வருகிறார்களோ?
"எதிரணியினரை தூண்டுபவர்கள் யார் யார் என்ற பட்டியல் எங்களிடம் உண்டு""... : - : காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான்
யார் அந்த தூண்டுபவர்கள் என்று யாராவது சொல்வார்கள் என்று பார்த்தால் யாருமே சொல்லவும் இல்லை இவர்கள் யாரையுமே சொல்ல விடவும் இல்லையே
"எங்கள் ஊர் சப்போர்ட் இந்த வேட்பாளருக்குத்தான்"".:-: கடையக்குடி பகுதி மக்கள் சார்பாக சாச்சா ஜோஸப் ராஜ்
வார்டு தேர்தலில் உங்கள் சப்போர்ட் யாருக்கு என்று எல்லொருக்கும் தெரியும் வகையில் சொல்லி இருக்கலாமே.
எங்கிருந்தோ வந்து நமதூரில் குடியேறி நமக்கே வேட்டு வைப்பவர்களையெல்லாம் மேடையேற்றி உள்ளீர்களே ஏன்? எங்களுக்கும் சப்போர்ட் உள்ளது என்று நிருபிக்கவா அப்படி என்றால் மங்களாவடி, அருணாச்சலபுரம், ரத்தின புரி, அழகாபுரி, ஆச்சாரிமார் தெரு, தேவர்மார் தெரு, சிவன் கோவில் தெரு, இப்படி ஊருக்கு வெளியில் உள்ள மாற்று மத சகோதரர்களை ஏன் மேடை ஏற்றவில்லை.
மேலும் தவ்ஹீத் சகோதரர்கள் சார்ந்து இருக்கும் அமைப்புகளில் இருந்து ஒருவரைக்கூட காணவில்லையே அவர்கள் ஆதரவு யாருக்கு?
"ஒரு மாபெரும் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான எங்கள் அம்மாவே எதிர்த்து ஆள் நிறுத்தாத நிலையில், சில பேர் இந்த பேரவையின் பொது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுவதைப் பார்க்கும்போது, எங்கள் அம்மாவின் பெருந்தன்மை எங்களை பெரிதும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது. ;-: அதிமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்
உங்களின் அம்மா புராணம் எல்லாம் போதும், தோல்வி பயத்தில் கூட ஒதுங்கியிருக்கலாமே. ஊருக்கு ஒரு பிரச்சனை என்று வந்த போது எங்கே போனீர்கள்.
"நகர்மன்றத் தலைவருக்கு அடுத்த பதவியையாவது இந்த பேரவை எங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும்."" . ;-: அதிமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்
பேரவை என்ன மக்களா? அல்லது மக்கள் பிரதிநிதியா? நீங்கள் கேட்டவுடன் துணைத்தலைவர் பதவியை உங்களுக்கு தருவதற்கு. அது வெற்றி பெற்று வரும் வார்டு உறுப்பினர்கள் கையில் உள்ளது. இந்த பேரவையின் ஆதரவு உள்ள நபர்கள் எத்தனை பேர் வெற்றி பெறப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
""இங்கு பேரவையால் நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஜனநாயக அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது:"" -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா
எது ஜனநாயகம் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் தேர்வுக்குழுவினர் ஓட்டுப்போட சென்றார்களே அதுவா ஜனநாயகம், தேர்வுக்குழுவினருக்கு சிந்திக்க கூட நேரம் கொடுக்காமல் வாக்களிக்க சொன்னதுதானா ஜனநாயகம்.
""ஊரில் ஒரு பிரச்சினை என்றால் அவ்விடத்தில் ஐக்கியப் பேரவைதான் முன்னிற்கும். அதன் பேச்சு மட்டும்தான் எடுபடும். இதுதான் உண்மை."" : -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா
சமீபத்தில் காவல்துறை அதிகாரியின் அத்துமீறல்கள் நடைப்பெற்ற போது எங்கே போனார்கள் இந்த பேரவையினர்.
""சரி, ஒருவேளை எதிர்த்துப் போட்டியிட்டவர் நகர்மன்றத் தலைவரானால், நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா? -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா
“எதிர்த்து போட்டியிட்டவர் நகர்மன்ற தலைவரானால்”
என்ன இது சேம் சைட் கோல் போல தெரிகிறதே.
மேலும் எதிர்த்து போட்டியிட்டவர் வெற்றி பெற்ற பிறகு முதல்வரை காண சென்றால் நிச்சயமாக முதல்வர் கழுத்தை பிடித்து வெளியே தள்ள மாட்டார். வாசல் வரை வந்து வரவேற்பார். ஏனெனில் மக்கள் செல்வாக்கு இல்லாமல், மக்கள் ஓட்டுப்போடாமல் யாரும் வெற்றியடைய முடியாது அது முதல்வருக்கு தெரியாமல் இல்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதும் அவருக்கு புரியாமல் இல்லை.இவர் பேரவையை எதிர்த்துதானே நின்றார் மக்களை எதிர்த்து நிற்கவில்லையே.
""இனிப்பு என்று எழுதி நக்கிப் பார்த்தால் இனிக்காது. உண்மையான இனிப்பு ஐக்கியப் பேரவையிடம் உள்ளது. ?"" -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா
உண்மைதான் ஒற்றுமை என்று வாயால் சொன்னால் மட்டும் போதாது அதனை செயல் படுத்தி காட்ட வேண்டும்,
""நான் இந்த வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... நீங்கள் வெற்றி பெற்றால், பொறுப்புணர்ந்து. ஐக்கியக் பேரவைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ? ""-: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா
இதைதானே மக்களும் சொல்கிறார்கள் பேரவை தங்களின் கட்டுப்பாடு படி , தாங்கள் சொல்லுவதை மட்டுமே கேட்டு நடக்க வேண்டிய ஒருவரை தேர்வு செய்துள்ளது என்று.
""எங்களுக்கு முன்னாள் - இந்நாள் அமைச்சர்களோடெல்லாம் நல்ல அறிமுகம் உள்ளது. இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி நமதூருக்குத் தேவையான அனைத்து நல்லவற்றையும் எங்களால் செய்ய இயலும். "":-: வேட்பாளர் மிஸ்ரிய்யாவின் சகோதரர் வழக்குறைஞர் எல்.எஸ்.எம்.ஃபைஸல்
எங்களால் செய்ய முடியும் என்றால் இது கூட்டாச்சியா? குடும்ப ஆட்சியா? அப்படி என்றால் எல்லோருடய தலையீடும் இருக்குமா?
""துணை மின் நிலையத்திற்கு இடம் வாங்குவதற்காக இந்த பேரவையிலுள்ளவர்கள் தம் பங்கில் பல லட்சங்களையும் தந்து, சுமார் 25 லட்சம் ரூபாயை திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படியொரு அமைப்பு இருந்தால்தானே இதையெல்லாம் செய்ய இயலும்?"":-: சென்னையிலுள்ள காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மத்
பேரவை நல்லது மட்டும் செய்யட்டுமே அது போதும் இது போன்ற விசயத்தில் தலையிட்டு ஊரை பிளவுபடுத்த வேண்டாமே.
"" நமதூரில் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இப்பேரவை எந்தத் தலையீட்டையும் வைக்க விரும்பவில்லை"-. காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்
அப்படியானால் மக்கள் சேவாகரங்கள் நிறுவனர் ஜாலாலி அவர்களை இந்த மேடையில் உள்ளவர்கள் வாபஸ் வாங்க சொன்னதன் நோக்கம் என்ன? இதனை அவரே செய்தியாக காயல் வெப்சைட்டில் கூறி உள்ளாரே அப்படியானால் அவர் கூறியது பொய்யா? இன்னும் பல வார்டுகளில் சிலரின் வெற்றியை பறிக்க துடிப்பது ஏன்? துனைத்தலைவர் பதவி உங்களின் ஆதரவு பெற்றவருக்கு கிடைப்பதில் சிக்கல் வரும் என்பதினாலா?
""அங்கு கூடியவர்களில் ஒரு ஜமாஅத்தின் பிரதிநிதி மட்டும், பரிசீலனைக்கு எடுக்கப்படும் வேட்பாளர்களின் முழு விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையும் செய்தோம்..."-" காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்
அப்படியானால் அங்கு வந்த பிறகுதான் அதுவும் ஒரு ஜமாத்தார் கேட்டுக்கொண்ட பிறகுதான் நீங்கள் வேட்பாளர்களின் பெயரையே சொல்லி இருக்கிறீர்கள் இல்லையேல் எப்போது சொல்லி இருப்பீர்களோ? மக்களின் சந்தேகத்திற்கு விடை சொன்னத்தற்கு மிகவும் நன்றி.
""இவையனைத்தையும் நேரடியாகக் கண்ட பலர் இங்கே சாட்சிகளாக இருக்கிறீர்கள். வராதவர்களுக்கு வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது. ""- காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்
வீடியோ ஆதாரம் உள்ளது என்றால் உடனே வெப்ச்சைட்டில் போடுங்க மக்கள் உண்மை என்ன என்பதனை அறிந்து கொள்வார்கள் அப்படியாவது இந்த பேரவைவை மக்கள் நம்பினால் தேர்தலில் வெற்றி உறுதி.
""இதே முச்சரிக்கையில் கையெழுத்திட்ட வஹீதா அம்மா அவர்கள் எவ்வளவு கண்ணியமாக ஒதுங்கிவிட்டார்கள்...? - காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்
“ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்""- காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் .
கண்ணியமாக நடந்து கொண்ட வஹிதா அவர்களையே சந்தேகப்பட்டு ஒரு வேளை அவர் வாபஸ் வாங்காமல் இருந்தால் என்று வாய் கூசாமல் சொல்கிறீர்களே இதுதான் நீங்கள் கூறும் ஒற்றுமையா?
வெப்ச்சைட்டில் எழுதும் யாரும் ஆர்வக்கோளாருகள் கிடையாது அவர்கள்தான் உண்மையான சமூக ஆர்வலர்கள். வெப்ச்சைட்டில் எழுதிவருபவர்களில் 95% க்கும் மேற்பட்டவர்கள் ஊரை விட்டு பிழைப்புக்காக வெளிஊரிலும் , வெளிநாட்டிலும் இருப்பவர்கள் அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவிற்கு நடுவே இந்த சமுதாயத்திற்காக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
“வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை” - காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்
இதுதான் சாணக்கியத்தனமோ? ஏன் ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்.
தேர்தலை நடத்த தேர்தல் ஆனையம்
தேர்தலில் போட்டிபோட பல்வேறு கட்சிகள்
வாக்களிக்க குடி மகன்கள்
இப்படி எல்லோரும் இருக்க ஐக்கிய சபைக்கு தேவை இல்லாத வேலை எதற்கு.
தயவு செய்து எந்த அமைப்புகளும் எங்கள் ஆதரவு இவர்க்குத்தான் அவர்க்குத்தான் என்று உங்கள் அமைப்பின் ஆதரவினை தெரிவித்து நீங்களும் தேவை இல்லாத பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் உரிமையையும், கடமையையும் மட்டும் செய்யுங்கள்.
இன்னும் ஊரில் தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சனைகள்,
ஊருக்கு தேவையான நல்ல விசயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கு அதெயெல்லாம் செய்யலாமே.
கடந்த 3 தேர்தலிலும் இவர்களால் கொண்டு வரப்பட்ட தலைவர்களால் ஊருக்கு ஏதேனும் லாபம் இருந்ததா? இல்லவே இல்லை அப்படி இருக்க இன்னும் ஏன் இவர்கள் தங்கள் ஆதிக்கவர்க்கத்தினரின் புத்தியை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஊர் ஒற்றுமையை பாருங்கள்.
ஊர் நலனை பாருங்கள்.
ஊருக்கு தேவையானவற்றை செய்யுங்கள்.
தேவை இல்லாத விசயங்களில் தலையிட்டு
தேவையான விசயங்களில் ஒதுங்கி இருக்காதீர்கள்.
ஈகோ பார்காதீர்கள்.
ஐக்கியம் என்பதன் பொருள் உணர்ந்து
அனைத்து மக்களையும் அரவணைத்து
அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள்.
ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் தலைதோங்க செய்வீர்.
பேரவையின் தலைவர், உறுப்பினர்களை
ஜனநாய முறைப்படி தேர்ந்தெடுப்பீர்
ஊருக்கு மட்டும் இல்லைmoha இந்த சமுதாயத்திற்கே முன்னுதாரமாக இருங்கள். இப்படி நீங்கள் இருந்தால்
நிச்சயம் உங்கள் பின்னால் நாங்கள் மட்டும் இல்லை இந்த
சமுதாயமே வரும் . அந்நாள் எப்போது வரும் என்று
காத்திருக்கும்.
சமுதாயத்தின் விழுதுகள்.
முஹம்மது அப்துல் காதர் .
சென்னை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross