SAB MATHLAB KI BAATH HAI... posted byM Sajith (DUBAI)[13 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10577
குடும்ப தலையீடு அறவே இல்லாமல் என தேர்தல் வாக்குறுதி எல்லாம் கொடுத்த நீங்கள் "சொல்வதை செய்வோம்" என கலைஞரின் டயலாக் எல்லாம் சொல்லிக்கிட்டே சகோதர அறிமுகத்தில் பாடிய குடும்ப புராணங்களையும், சிதம்பர உறவுகளும் அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?
(அடடே.. இதத்தான் தேர்தல் வாக்குறுதின்னு சொல்லுவங்க இல்லையா..? மறந்தே போயிட்டேன்)
அமானுல்லா மாமா கைவன்னத்தில் அழகான கட்டுரை படித்த அனுபவம் அநேகம் உண்டு - இதுவும் அவரது படைப்பில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை..
பேசினீங்க, பேசினீங்கன்னு சொல்றாங்களே,, இதாவது நடந்ததா? இல்ல எப்பவும் சொல்ற மாதிரி இதுவும் 'பேரவை அகராதி'யின் சிறப்பம்சமா? - ஏதாவது ஆடியோ வீடியோ இருந்தா பதிவு பன்னுவீங்களா.. அதுவும் வழமைபோல யாராவது கேள்வி கேட்ட வீடியோ ஆதாரம் இருக்குன்னு வீர வசனம் பேசத்தானா?
ஷரீயத்து, பாரம்பரியம் பெண்கள் பேசுவது வெளிய வரக்கூடாதுன்னு, இதுக்கு நிறைய கமெண்டு எழுத நிறைய சகோதரர்களுக்கு கை ஊரல் எடுக்கும்..
எழுத முன்னால - இஸ்லாமிய சரித்திரத்தில் ஒட்டகப் போர் ஒன்று நடந்த வரலாரையும், அதில் உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் தலமையேற்று நடத்திய சரித்திரத்தையும், அப்போதும் ஆண்கள் இருந்தார்கள், அதிலிம் சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட 10 சஹாபக்களில் மூவர் ஆயிஷா (ரலி) அவர்களின் தலமையின் கீழ் செயல்பட்டதையும் தங்களுக்கு சாதகமான ஆலிம்களிடம் கேட்டு அதன் பின் ஷரீயத்து காரணங்களை எழுதுங்கள்.
(பின்பற்றுவதாக சொல்லும் முன்னோர்கள் என்பது VSM அலி பாய் சொல்ற மாதிரி நம்ம ஊரில் பிறந்தவங்களாத்தான் இருக்கனும்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.. அது ஷரீயத்தும் இல்லை.)
ஒரே ஒரு ஆலோசனை சகோதரிக்கு,
தப்பி தவறி இறைவன் மேல் ஆனையாக லஞ்சம் வாங்க, ஊழல் செய்ய அனுமதிக்கவோ துணைபோகவோ மாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிப்புடாதிங்க அப்புறம் அறிமுக கூட்டத்துக்கு வந்த அரசியல் வாதிகள் எல்லாம் உங்களுக்கு ஆப்பு அடிக்கிற வேலைய புல் டைம் ஜாப் ஆக்கிபுடுவானுக..
பேரவையின் அனுதாபிகள் அனைவருக்கும், இது ஒரு சவால் தைரியம் இருந்தால் சகோதரியை இப்படி ஒரு உறுதி மொழிய கொடுக்க சொல்லுங்க பார்போம் - நடக்கவிட்டு விடுவாங்ககளா என்ன? பேரவையை அரசியல் சும்மாவா ஆக்கிரமிச்சிருக்கு "சப் மத்லப் கி பாத் ஹை பாயி.."
___________________________
ஆமா.. எல்லா இடத்திலும் சகோதர அறிமுகம் பலமா இருக்கே, அடுத்த தேர்தல் தலமைக்கு ஐந்தாண்டு திட்டமா? இல்ல மெகா போட்ட கேஸ் சதகமானா மாற்று எற்பாடுக்கான ராஜ தந்திரமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross