என்னத்த சொல்றது? posted byShaik Dawood (Hong Kong)[14 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 10641
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தேர்தல் செய்திகளுக்கு முன்னரும்... அதன் ஆரம்பத்திலும் சகோ. சாஜித் அவர்களின் கமெண்ட்களுக்கு ரசிகனாக இருந்தேன்... சில நாட்களாக அவரின் கருத்துகள் தரம் குறைந்ததாக கருதுகிறேன்... (மனதை கஷ்டப்படுத்துவதாக இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்) கூடவே ஜியா காக்காவின் கருத்தும்.... (ஐக்கிய பேரவையை சாடுவதானால் அல்ல)
நமக்கு சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக எதையெடுத்தாலும் உள் குத்து வச்சே பேசுறது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.... என்பது அடியேனின் கருத்து.... தயவு செய்து இதற்க்கு முன்னர் இருந்த தங்களின் வழமையான பாணியில் நடுத்தரமாக கருத்து தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... ஜஜாகுமுல்லாஹு கைரன்.
பல சகோதரர்கள் திரும்ப திரும்ப ஐக்கிய பேரவையிடம் அவர்களின் கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருப்பது ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது... காரணம்... திருமதி ஆபிதா அவர்கள் அதில் (முச்சரிக்கை) கையொப்பமிட்டு அதன் பின் தில்லு முல்லுகள் நடந்ததாக தெரிந்தால்... பிறகு இவ்வாறு கேட்பதில் / கோபத்தை கொப்பளிப்பதில் நியாயம் இருக்கிறது.
அவ்வாறல்லாமல் கையோப்பமிட்டிருந்தால் திருமதி வஹிதா அவர்கள் ஏமாற்றப்பட்டது போல் இவரும் (ஆபிதா) அல்லாவா எமாறப்பட்டிருப்பார் என்றெல்லாம் சொல்லுவது அல்லாஹ்வை மறந்த பேச்சாகவே எனக்கு தோன்றுகிறது.
நாமும் நம் சமுதாயமும் நம் இறுதி மூச்சு வரை நடுநிலையான சிந்தனையோடும் ஒற்றுமையுடன் மிக முக்கியமாக தக்வாவுடனும் வாழ்ந்து இறுதியில் கலிமா தையிபாவை ஷஹாதத் கூறியவர்களாக மரணிக்க வல்லோன் அல்லாஹ் நம் யாவருக்கும் தவ்பீக் செய்வானாக... ஆமீன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross