நீங்கள் சொல்லுவதைப் போன்று பொய் ஈமானை திண்று விடும் என்று நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறி இருப்பது சரிதான். அதற்காக பொய் சொல்ல வேண்டும் என்ற கருத்துக்கு நான் வரவில்லை. ஒரு செய்தியை ஒருவர் டிவி நிகழ்ச்சிக்கு அளித்துவிட்டார். அதில் தவறு இருந்தாலும் அதை மறைக்க பார்க்க வேண்டு. அப்படி இருக்க, எல்லோரும் பார்க்க கூடிய இந்த இணைய தளத்தில் போட்டு ( நமது ஊரை ) அசிங்கப் படுத்துவது சரியில்லை. அதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தான் கூறி இருக்கிறார்கள் ( كل بنى ا دم خطا خير خطاء طؤاب) ஆதமுடைய மக்கள் எல்லோரும் தவறு செய்யக் கூடியவர்கள் ( இதில் நீங்களும் , நானும், நம் ஊரைச் சார்ந்த, ஏன் இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் அடங்குவோம் )
இதில் சிறந்தவர் தனது தவறை நினைத்து அல்லாஹு ஸுபுஹானவுத்தஆலாவிடம் ’தவ்பா’ செய்து கொள்பவரே ஆவார்.
காதிரிய்யா கொடி மர சிறு நெய்னார் பள்ளியை திரும்ப திரும்ப காண்பித்தார்கள் என்றால் அதுவும் அல்லாஹ்வின் வீடு தானே?
அதுவும் நமது ஊரில் தானே இருக்கிறது ?
ஆகவே தங்களுக்கு, இந்த ’நிஜம்’ புரோகிராமில் சம்பந்தப்பட்ட நமது ஊர்காரர்கள் எவர் மீதாவது கோபம் இருக்குமேயானால் தயவு செய்து அதை இந்த விதத்தில் வெளிப்படுத்த வேண்டாம்.
இதனால் நமது ஊர் பெயர்தான் கெடும்.
அந்த ( காயல்பட்டணத்தில் ) ஊரில் நீங்களும் ஒரு ’பிரஜை’ என்பதை மறந்து விடாதீர்கள்.
குறிப்பு : உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மாறாக நமது ஊரின் பெருமையையும் , கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் இதை பதிவு செய்துள்ளேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross