Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[15 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 10712
எதற்கெடுத்தாலும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யச்சொல்வது சரியல்ல.அதுவும் அற்ப அரசியல் காரணங்களுக்காக.
அல்லது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்றும் நாம் கருதிவிட முடியாது.
ஒரே விஷயத்திற்காக,இருதரப்பினரே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதாக நாம் வைத்துக்கொள்வோம்.இருவர் சொல்வதும் சரி ஏற்ண்டாகிவிடுமா? அப்போதும் யார் சொல்வது சரி என்று நாம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
மேலும், அரசியல்வாதிகள் பலரும் ( முஸ்லீம்களும் முஸ்லீம் அல்லாதவர்களும்) இறைவன் மீது ஆணையாக என்று சொல்லித்தான் பதவி ஏற்பு உறுதிமொழி எடுக்கின்றனர் .பிறகு எவ்வாறு அவர்கள் செயல்படுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே!
எனவே அரசியல் மற்றும் அற்ப விஷயங்களுக்கெல்லாம் அல்லஹ்வின் மீது சத்தியம் செய்யச்ச்சொல்லதீர்கள்.
அடுத்து,மிஸ்ரியா அவர்கள் சகோதரர்களிடம் ஆலோசனை பெறுவதை சிலர் குறை காண்கின்றனர்.அதுவும் தவறு.
நிர்வாக ஆலோசனை என்பது வேறு.நிர்வாக தலையீடு/குறுக்கீடு என்பது வேறு .நிர்வாகத்தை செம்மையாக நடத்திச்செல்ல , சிறந்தவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறு ஒன்றுமில்லை.அது சகோதரர் என்றாலும் சரி அல்லது ஐக்கிய பேரவை என்றாலும் சரியே .
இவர்கள் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்கிறார்கள் என்றால்தான் நாம் குறைகாண முடியும்.குற்றம் சாட்ட முடியும்.
எனவே , எதெற்கெடுத்தாலும் குறை சொல்வதையும் ,குற்றம் சுமத்துவதையும் நாம் விட்டொழிக்க வேண்டும்.
முக்கியமாக, எடுத்ததெற்கெல்லாம் நாம் சந்தேககண் கொண்டு பார்ப்பதை விட்டொழிக்க வேண்டும்.
ஒற்றுமை நிலவ வேண்டும். நாம் பகை நீங்கி ,அனைவரும் ஓரணியிலேயே நிற்கவேண்டும்.ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்.
அவ்வாறு நாம் செயல்பட்டால் வழமான காயல் நகர்மன்றத்தை காண முடியும் .
இன்னும் நமக்கு போதிய அவகாசமிருக்கிறது என்பதை நினைவிர்கொள்ளவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross