Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byShameemul Islam SKS (Chennai)[15 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10741
மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ஊரை விட்டு வெளியூரில் இருந்தாலே ஊரைத் தேடும்.
காரணம் நம்மை ஆரத்தழுவும் நம் குடும்பம், கொஞ்சிக்குலாவும் நட்புகள், சிரித்து முகமன் கூறும் ஊர்மக்கள்,
பள்ளிவாசல்கள், ஐங்காலத் தொழுகைக்கான அழைப்போசை, இயற்கை எழில் கொஞ்சும் நம் கடற்கரை, நம்முன்னோர் காத்து வைத்த நல்லதொரு பாரம்பரியம், என அடுக்கிக் கொண்டே போகலாம்.
காயல்பட்டணம்......... இது ஒரு சிறு மக்கம்.
ஆம் முன்னோர் வைத்த பெயர்தான் இது.
பெண்கள் ஆண்களுடன் கலக்கக் கூடாதென்பதற்காக வீடுகளுக்கு இடையில் முடுக்குகள்.
இவைகளோடு ஒழுக்க விழுமங்களில் நாம் காட்டும் அக்கறை,
தீமைகளை எதிர்த்து அதன் நெற்றியை உடைத்து,
நன்மைகளை ஏவியும் காத்தும் வருவதால் தான் நமதூர் மீது நமக்கு இவ்வளவு நேசம்.
ஊர் மீது கொண்ட நேசமும் பற்றும் அதில் உள்ள தீமைகளை மூடி மறைத்து தான் காக்கப்பட வேண்டும் என்றால் இப்போது வேண்டுமானால் நமக்கு அது சரியாகப் படலாம்,
ஆனால் நம் எதிர்கால சந்ததிகள் முகம் சுளிக்க நேரிடும். குர்ஆன் கூறும் உண்மை இது.
எத்தனையோ ஊர்களை இறைவன் அதன் தீமைகளால் அழித்திருக்கிறான் என்பது நமக்கு தெரியாத விஷயமல்ல.
அதே வேளையில் நாம் ஜாஃபர் இப்னு அபி தாலிபின் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக...) பரம்பரைகள்.
தாயகமாம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு அனாதரவாய் அபிஸீனியாவில் 17 நபித் தோழர்கள் நஜ்ஜாஷி மன்னர் முன் நின்றபோதும் உண்மையை உரைத்தார்கள் அவர்கள்.
தாயகமாம் மக்காவை அறிமுகம் செய்து வைக்கையில் கடந்த கால கசப்பான வாழ்க்கை குறித்த நினைவுகளை முதலில் கூறி (ஊர் மீது கொண்ட நேசம் அவர்களை அத்தீய வாழ்க்கை குறித்து எடுத்துக் கூறுவதை விட்டும் தடுக்கவில்லை) பிறகு முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட பிறகு தம் வாழ்க்கையில் உருவான மாற்றங்கள் குறித்துப் பட்டியலிட்டார்கள்.
இது தான் இஸ்லாம் நமக்கு காட்டித் தந்த வழி.
கடந்த காலங்களில் பணத்தையும் மற்ற பொருள்களையும் பெற்றுக்கொண்டு போதாத குறைக்கு மார்க்கத்தை வேறு வம்புக்கிழுத்து "அது நம் பணம் தானே, அதை இப்போது அவர்கள் தரும்போது பெற்றுக்கொள்வதில் என்ன தவறிருக்கிறது" என மார்க்கம் பேசி தவறுகள் தெளிவாக நடந்திருக்க ஏதோ தவறே நிகழாதது போலவும் விமர்சிப்பவர்கள் தவறானவர் போலவும் அவர்களுக்கு நம்மூர் மீது எவ்வித பற்றும் இல்லை என சித்தரிப்பதும் சரியல்ல.
அடுத்து பத்திரிகை வழக்கப்படி ஒரு செய்தி வெளியிடும் போது அச்செய்தியின் தன்மைக்கு ஏற்ப அதை வழங்கியவர் பெயர் வெளியிடப்படுகிறது. THE HINDU, INDIAN EXPRESS போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் அவ்வாறு அமைந்திருக்கும் சில பெயர்கள் இதோ :
செய்தியின் தன்மையை (SENSITIVITY) வைத்தே பெயர்கள் வெளியிடப்படுகின்றன.
அதற்குக் காரணம் செய்தியை வழங்கியவரை பொதுமக்கள் (சிறப்பாக) கவனித்து விடாமல் அதே வேளையில் தவறுகள் தட்டிக்கேட்கப்பட வேண்டும் என்றோ,
திருத்தப் பட வேண்டும் என்ற அடிப்படையிலோ தான் அவ்வாறு கையாளப்படுகின்றன.
எனவே ADMIN மற்றும் KAYALPATNAM.COM EDITORIAL BOARD ஆகியவர்கள் செய்தி ஆதாரம், உள்நோக்கமற்றதாக உள்ள செய்திதானா அது, தற்போது இச்செய்தியை பிரசுரிப்பதன் அவசியம் உள்ளிட்ட விஷயங்களை நன்கு ஆய்வு செய்து,
அதனால் அதிக நன்மைகள் விளையவும் தவறுகள் தடுக்கப்படவும் வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே இறை அச்சத்துடன் அச்செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது பிறர் மனதை வேதனைக்குள்ளாக்கி அதில் குளிர் காயும் என்னமோ கிஞ்சிற்றும் இவ்வலை தளத்திற்கு இல்லை.
எனவே கள்ள ஓட்டு பற்றிய இச்செய்தி அவ்வாறு நடைபெறாமல் நேர்மையான முறையில் நம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க விடுத்த ஒரு WHISTLE BLOW என்று நோக்கினால் மட்டுமே எதிர்மறை சிந்தனைகள் நமக்கு எழாமல் இருக்கும்.
அல்லாஹ் யாவற்றையும் சூழ்ந்தறிகிறவனாக இருக்கிறான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross