பிளாஸ் பேக் posted byமுஹம்மது அப்துல் காதர் (சென்னை)[15 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10751
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
செய்தி 1 :
பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே, “இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்...” என்ற ரீதியில் பெறப்பட்ட செய்திகளும் என்னை பெரிதும் சிந்திக்க வைத்துவிட்டது.
(காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் ஆபிதா காயல்பட்டினம் நகர மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை :4-10-11 )
செய்தி 2 :
நம்முடைய வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்களும் பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பும் நான் விருப்ப மனு அளித்தேன். அன்று என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. இன்றாவது என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று உரிமையோடு கேட்டுள்ளார். : காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் (எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் 10.10.2011)
செய்தி 3:
பொதுச்சேவையில் எனக்குள்ள ஆர்வத்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்னே, ஊரில் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க ஐக்கியப் பேரவைக்கு மனு செய்தேன். அப்போது ஊரின் பெரியவர்கள் என்னை அழைத்து, சகோதரி A. வஹிதா அவர்களை தலைவராகத் தேர்வு செய்திருப்பதாகவும், வரும் காலங்களில் இறைவன் நாடினால் வாய்ப்பு வரும் என சொல்லி எனது மனுவை வாபஸ் பெறச் சொன்னார்கள். (ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், 12.10.2011 அன்று இரவு 7.00 மணிக்கு, வாக்குக் கேட்கும், மகளிர் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற தலைமை பொறுப்புக்கான வேட்பாளர் ஹாஜ்ஜா மிஸ்ரியா B.Com. நிகழ்த்திய உரை )
மேலே உள்ள 3 செய்திகளையும் பார்க்கும் போது இண்டர்நெட்டில் எழுதும் ஆர்வக்கோளாருக்கு என்ன என்பது புரிந்திருக்கும் ஆனால் சில சமூக நல ஆர்வலர்களுக்கு புரிந்து இருக்காது அது என்ன என்று சொல்கிறேன்.
மூன்று செய்திகளையும் பார்க்கும் போது முதல் செய்தியில் சகோதரி ஆபிதா அவர்கள் கூறியதை செய்தி இரண்டு மற்றும் மூன்று ஆகியவை நிரூபிக்கின்றன. கடந்த முறையே சகோதரி மிஸ்ரியாவை தான் அடுத்த முறை தேர்ந்தெடுப்போம் என்று உறுதி கொடுத்துள்ளார்கள். இவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவோடுதான் வேட்பாளர் தேர்வுக்கும் ஜலாலியாவிற்கு சென்றுள்ளார்கள். இப்போ புரியுதா செய்தி என்னவென்று தெளிவா இருங்க புத்தகத்தை திறப்பதற்கு !!!.
சமுதாயத்தின் விழுதுகள்.
முஹம்மது அப்துல் காதர்.
சென்னை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross