Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byK.S.H.SHEIKH ABDUL QADER (RIYADH KSA)[15 October 2011] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10877
இறையருள் நிறைக:
ஒற்றுமைஎனும் கயிற்றைப்பிரித்து வெற்றிக்கனியை யாரும் பறித்துவிட இடம்கொடுத்துவிடாதீர்கள், இரண்டு ஆடுகள் மோதிக்கொண்டிருப்பதை நரிகள் எச்சில் ஊற நாவைதொங்கவிட்டு நிற்கின்றன ரத்தம்குடிக்கலாமென: நிறம் மாறாத பூக்கள் என்று நம்பியிருந்த நமக்கு நிறையவே மாற்றங்களும், ஏமாற்றங்களும்,துர்நாற்றங்களும் தந்துகொண்டிருக்கின்றன
இன்றைய நமதூர் உள்ளாட்சிதேர்தலின் அவலங்கள் ஊடகவியளாக நம் இதயங்களை வேதனையில் வருத்தெடுக்கின்றன,நமதூரின் நமக்காகவும் நலனுக்காகவும் பிணக்கு,பேதங்களை அகற்றி "கொல்லுங்கள் "
நாம் ஒன்றிணைந்து செயல்பட்டாலே நமதுதேவைகளையும், உரிமைகளையும் தன்னிச்சையாக அடையமுடியும் பாவும்,தறியும் இணைந்துசெயல்பட்டாலே நெய்தல் என்பது நடக்கும் நூலில் பல நிறங்கள் இருக்கலாம் பரவாஇல்லை அனால் நெய்தலின் நிறைவில் நெயததுணி நமக்குப்பிடித்ததாக இருக்கவேண்டும் அதைநாமே அணியவேண்டும் இன்ஷா அல்லாஹ் அந்தபாகியத்தை இறைவன் நமக்கு நிரந்தரமாக தந்தருள்வனாக அமீன்
ஒன்றுபடுவோம் வெல்வோம் உலகம் வியக்க உயர்வோம், மனமிருந்தால் நிச்சயமாக மார்க்கமுண்டு எனவே அன்பு சகோதர சகோதரிகளே தயவுசெய்து மனமுரண்டை விட்டுவிட்டு ஷைத்தானுக்கு பதிலடிகொடுப்போம் ஏனென்றால் அவன்தான் இறைவனிடம் சவால்விட்டவன் உணடிமைகளின் ஒற்றுமையை குலைப்பேன் என்று, அந்த எத்தனுக்கு நாம் இலகுவாக பலியாகலாமா? வல்ல இறைவனின் துணையோடு இன்ஷா அல்லாஹ் பீடுநடைபோடுவோம், எனது இந்த பதிவை வசித்தவர்களுக்கு எனது நன்றி ஜஜாக்கல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross