செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்டனம்.. posted byrilwan (SaudiArabia)[16 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10907
இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் முஹ்யித்தீன் காக்கா அவர்கள், சமூக ஆர்வலர், இளைஞர்களை ஊக்குவிப்பவர், மனக்கசப்புகளை அகற்றி ஒற்றுமைக்கு வித்திடுபவர் என்று மக்களால் அறியப்படுபவர். இன்று அவர் மனதை காயப்படுத்தியிருக்கின்றனர். கவிஞர் என அறியப்படுபவருக்கு கவி மூலம் தன் கருத்தைச் சொல்லும் உரிமை கூட பிடுங்கப்பட்டு, அநாகரீகமான முறையில் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
“என்றுமே ஐக்கியப் பேரவைக்குக் கட்டுப்படும் YUF சங்கத்தை ஏன் இவ்வாறெல்லாம் அவமதிக்கிறீர்கள்?” என பாதிக்கப்பட்டவர் ஆதங்கப்படுமளவிற்கு மேடையில் அநாகரீகமாக நடந்துள்ளனர், ஐக்கிய பேரவையை இயக்கும் முக்கியஸ்தர்களில் சிலர்.
கூட்டத்தை ஏற்பாடு செய்தது காக்கும் கரங்கள் அமைப்பு. உரையாற்ற வந்தது இளைஞர் ஐக்கிய முனனணி செயலாளர். உன்னை யார் பேச அழைத்தது என கேள்வி கேட்பதற்கும், பேச்சை முடிக்க வலியுறுத்துவதற்கும் இவர்கள் யார்? அப்படியென்றால் எந்த உள்நோக்கத்தோடு இவர்களெல்லாம் இன்று தேர்தல் களப்பணியில் இறங்கியுள்ளார்கள்? பேச்சை முடிக்கச் சொல்லி பேச்சாளரை அவமரியாதை செய்த இவர்கள் தான், ஐக்கிய பேரவையின் தேர்தல் நிலைபாடு பற்றி விமர்சனம் எழும்போதெல்லாம் அவ்வப்போது விளக்கம் அளிக்க முன்வருவர். இன்று இரு பெரும் தொண்டு அமைப்புகளை சங்கடத்திற்கு உட்படுத்திய அவர்களது முகத்திரை ஓரளவு கிழியப்பட்டுள்ளது மூலம் ஒருசில மக்களாவது தங்களது தேர்தல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடும் என தோன்றுகிறது.
ஊர் ஒற்றுமை எனும் போர்வையில் கை கோர்த்து வருபவர்கள் ஒன்றும் இன்று நேற்று புதிதாய் ஊரில் வந்து இறங்கியவர்கள் அல்ல. அவர்களையும், அவர்களது பின்னணியையும் ஊர் மக்கள் நன்றாய் அறிந்தவர்கள். சொல்லப்போனால், அரசியல் சக்திகள், அதிகார வர்க்கங்கள், பண முதலைகள், பினாமிகள், காரியம் சாதிக்க துடிக்கும் சுயநலவாதிகள். சமூக அக்கரையற்றவர்கள், அரசியல்வாதிகள் இதுநாள் வரை தாங்கள் செய்ததை இனி ஊர் அங்கீகாரத்தோடு தைரியமாக செய்ய இருக்கின்றார்கள், அவ்வளவுதான் வித்தியாசம்.
உள்ளாட்சி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதையும், ஏற்படுவதையும் கண்டு பீதியுற்ற இவர்கள், தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தக்க வைத்துக் கொள்வதற்காகவும் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் ‘ஊர் ஒற்றுமை”. தங்களுக்கிடையேயான மனக் கசப்புகளுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து ஊர் ஒற்றுமை எனும் போர்வைக்கு பின்னால் ஒழிந்து கொண்டு வெவ்வேறான திட்டங்களை சுமந்து நிற்கும் சுயநல கூட்டங்கள், தத்தம் காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பவாத சங்கமம் தான் இது. அதற்கு பலி கடா ஆக்கப்பட்டவர்கள் கண்ணியத்திற்குரிய ஊர் பெரியவர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் போன்றவைகள். “கண்ணியத்திற்குரிய உவைஸ் ஹாஜியார் அழைக்கிறார்கள்; வந்து பேசுங்கள்!” என்று கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து மீண்டும் பேச வந்தேன் என பாதிக்கப்பட்ட YUF செயலாளர் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற தேவையான சமயத்தில் மதிப்பிற்குரியவர்களை முன்னுக்கு காட்டி மக்களை மசிய வைத்து பின்னிருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றனர் சிலர்.
நகராட்சி மன்றம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என லேபரேட்டரியிலும், லைப்ரரியிலும் இருந்து கொண்டு புரட்சிக் கருத்துக்களை மாதக்கணக்கில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர்களெல்லாம் களத்தில் இறங்க வேண்டிய தேர்தல் சமயத்தில் ஒதுங்கிக் கொண்டார்கள். கிட்டத்தட்ட எல்லோரும் ஓரணியில் நிற்கும்போது, நாம் மட்டும் விலகி நின்றால் மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்கள் என்பதற்காக மனசாட்சி ஒத்துக்கொள்ளாவிட்டாலும், ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள். இதுதான் இன்று வெகுஜன ஊர் மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. நாலு பேர் தன்னை ஏதும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக, நியாயத்திற்கும், தங்களது மனசாட்சிக்கும் விரோதமாக தேர்தல் நிலைப்பாட்டை எடுத்து வைத்திருக்கின்றனர். சமூக தொண்டு ஆற்றி வரும் ஒருசில பொது அமைப்புகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒற்றுமை அவசியம் தான். ஆனால் ஒற்றுமை என நம்பி நாம் பற்றிப்பிடித்திருக்கும் பாம்பை விட்டு விடுவோம். ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்வோம். உன்னத நோக்கத்தில் துவங்கப்பட்ட அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள், அதன் நிர்வாக முறைகள், அளவுகோள்களின் தரங்கள் குறையும்பட்சத்தில் உள்ளிருந்து போராடுவதே முதல் ஆயுதம் என்றாலும், அப்போராட்டம் தோல்வியடையும் பட்சத்தில் வெளியிலிருந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எதுவாயினும், தேர்தலுக்கு பிறகு கருத்து மோதல்களை மறந்து ஊர் நலனுக்காக ஒவ்வொரு தனி மனிதனும் தன்னாலான முயற்சியை செய்வோமாக! இறை உதவி கிட்டட்டுமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross