செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உங்கள் பணி தொடரட்டும் posted bySabeer (Mumbai)[16 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10915
மெய்தீன் காக்கா அவர்களே!. தாங்கள் காக்கும் கரங்கள் நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்தேன். கடந்த கால ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நமது நகரில் நிலவி வந்த தருணத்தில் தாங்கள் மற்றும் தங்களது YUF அமைப்பினர்கள் உயர் அதிகாரிகளை சந்தித்து அந்த குறையைப் போக்கினீர்கள்.
எந்தப் பேரவையும் இந்த விஷயத்தில் அக்கறை காட்டாத நிலையில் தங்களின் இந்த சேவை பாராட்டுதலுக்குரியது. ஆகவே தாங்கள் இந்த 'காயல்களின்' செயலை கருத்தில் கொள்ள வேண்டாம். தாங்களும் சரி, தங்களது அமைப்பும் சரி என்றுமே ஐக்கியப் பேரவைக்கு கட்டுப்பட்டவர்கள்.
ஆனால் இந்த 'காயல்கள்' என்றுமே ஐக்கியப் பேரவைக்கு கட்டுப்பட்டு இருப்பார்களா? என்று சொல்ல முடியாது. அவர்கள் என்றுமே 'மேலிடத்து மன்னருக்கு' கட்டுப்பட்டவர்கள். அர்த்த ராத்திரியில் 'கட்சி மாற வேண்டும் ' என்று அவசர ஆணை மேலிடத்து மன்னரிடமிருந்து வந்து விட்டால் கட்சி மாறி விடுவார்கள்.
'பஸ்'ஸில் ஓட்டுப் போடுவதெற்கென ஊருக்கு வரும் அநேகர் 'புத்தகம்' படித்துக் கொண்டு வருவதாக ஒரு செய்தி உலவுகிறதே!. வாக்கெடுப்பு முடியும் வரை கட்சி மாறாமல் இருந்தால் சரி. எனவே மெய்தீன் காக்கா! உங்களது பொதுப்பணி தொடரட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross